வெண்ணிலா சாகுபடி செய்யும் முறை | Vennila Sagupadi in Tamil..!

Advertisement

Vennila Sagupadi in Tamil..!

அன்புள்ளம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்… வெண்ணிலா சாகுபடி செய்யும் முறை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப்போகிறோம். வெண்ணிலா சாகுபடி பற்றி உங்களுக்கு தெரியுமா..? டோடோனாக் மதத்தை சேர்ந்த மக்கள் தான் முதலில் வெண்ணிலா சாகுபடி செய்தவர்கள்.

இந்த வெண்ணிலா என்பது கொடி இனத்தை சேர்ந்த தாவரம் ஆகும். இந்த வெண்ணிலா என்ற தாவரமானது உலகத்திலேயே அதிகளவில் விற்கப்படும் பொருட்களில் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது. வெண்ணிலா சாகுபடி பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கோடைகால முலாம்பழம் சாகுபடி – நல்ல வருமானம் கொடுக்கும்

வெண்ணிலா என்றால் என்ன:

வெண்ணிலா

வெண்ணிலாப் பயிரினை அனைத்து வகையான மண் வகைகளிலும் சாகுபடி செய்யலாம். வெண்ணிலா ஒரு ஆர்க்கிட் என்று அழைக்கப்படுகிறது. இந்த

வெண்ணிலா தாவரமானது அதிக மதிப்பு கொண்ட மலர்களை கொண்டுள்ளது. வெண்ணிலா நறுமணம் மிகுந்த தாவரமாக இருப்பதால் இது அதிகளவில் பயிடப்படுகிறது.

ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வெப்பமண்டல மலைக்காடுகளில் விளைய கூடிய தாவரமாகும்.

இந்த வெண்ணிலா தாவரமானது 35 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடியது. வெண்ணிலா தாவரத்தில் இருந்து வரக்கூடிய வெண்ணிலா பிளானிஃபோலியா  என்ற நறுமணப் பூக்கள் கொண்டு வாசனை திரவியங்கள், கொலோன்கள் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம், கேக்குகள் அல்லது பிஸ்கட் போன்ற வித்தியாசமான சமையல் செய்முறைகளை தயாரிக்கப் பயன்படுகிறது.

வெண்ணிலா சாகுபடி செய்யும் முறை:

வெண்ணிலா சாகுபடி செய்யும் முறை

  1. நல்ல வடிகால் வசதியுடைய மண் வெண்ணிலா சாகுபடிக்கு ஏற்றதாகும். அங்கச்சத்து நிறைந்த மண்ணில் வெண்ணிலா சாகுபடி செய்யலாம்.
  2. வெண்ணிலா சாகுபடி செய்வதற்கு 150 முதல் 300 செ.மீ வரை சராசரி வருட மழையளவு கொண்டிருத்தல் வேண்டும்.
  3. அதே சமயம் பூக்கள் பூக்கும் நேரத்தில் மழை நேரமாக இருக்க கூடாது. பூக்கள் பூக்கும் காலத்தை அறிந்து பயிரிடவேண்டும்.
  4. இந்த வெண்ணிலா பயிரினை கடல் மட்டத்திலிருந்து 700 முதல் 1,500 மீட்டர் வரை சாகுபடி செய்யலாம்.
  5. சிறந்த மகசூலுக்கு 21 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை  கொண்டிருக்க வேண்டும்.
  6. பருவமழை தொடங்கும் மாதங்களில் வெண்ணிலா சாகுபடி செய்யலாம்.
  7. வெண்ணிலா பயிரிடுவதற்கான இடைவெளி 1.2 முதல் 1.5 மீட்டர் வரை இருக்க வேண்டும்.
  8. ஒரு ஏக்கருக்கு 1,600 முதல் 2,000 செடிகள் வரை பயிரிடலாம்.
  9. இலாபகரமான மகசூலுக்கு வெண்ணிலா கொடிகளை 12 முதல் 14 வருடம் வரை வளர்க்கலாம்.
  10. இதனால் வருடத்திற்கு நல்ல லாபத்தை பெற முடியும்.
இதையும் படிக்கவும் லாபம் அள்ளி தரும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி ..!

வெண்ணிலா வளர்ச்சி சீரமைப்பு:

வெண்ணிலா கொடிகளை 1.2 முதல் 1.5 மீட்டர் வரை வளரச் செய்து பின் அதை  மரத்தாங்குகளில் கீழ் நோக்கி வளருமாறு சீரமைக்க வேண்டும்.

வெண்ணிலா கொடிகள் மண்ணில் புதையச் செய்து வேர் ஊன்றிய பின்னர் மேல் நோக்கி வளரச் செய்ய வேண்டும்.

பயிரை தாக்கும் அல்லது இலைத் தின்னும் புழுக்களை 0.05 சதவீதம் குயினால்பாஸ் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

பயிரை சேதப்படுத்தும் அல்லது சார் உறிஞ்சும் பூச்சிகளை 0.05 சதவீதம் மோனோகுரோட்டோபாஸ் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம்
Advertisement