மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் முறை ..!Maravalli Kilangu Sagupadi..!

Advertisement

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி முறை (Cassava Cultivation) ..! | மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட ஏற்ற காலம்

மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் முறை: மரவள்ளிக்கிழங்கில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த மரவள்ளிக்கிழங்கு சாகுபடி (cassava cultivation) பொறுத்தவரை மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. மேலும் நல்ல இலாபத்தை அள்ளி தரக்கூடிய ஒரு சிறந்த பயிராக விளங்குகிறது. இந்த மரவள்ளிக்கிழங்கு சாகுபடி (cassava cultivation) பொறுத்தவரை சரியான நல்ல இரகங்கள் மற்றும் நிலம் தயாரிப்பு முறைகள் மிகவும் முக்கியம். சரி இப்போது நமது பொதுநலம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி (cassava cultivation)முறையை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி முறை| இயற்கை முறையில் மரவள்ளி சாகுபடி:

இரகங்கள்:

கோ 2, முள்ளுவாடி, தாய்லாந்து, பர்மா, குங்குமரோஸ், எச் 226, ஏத்தாப்பூர் 1 ஆகிய இரகங்கள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி (cassava cultivation) முறைக்கு ஏற்ற இரகங்கள்.

பருவகாலங்கள்:

பாசனவசதி இருந்தால் வருடம் முழுவதும் எந்த மாதத்திலும் நடவு செய்யலாம். இருப்பினும் மானாவாரியில் செப்டம்பர் – அக்டோபர் மாதம் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி (cassava cultivation) செய்ய ஏற்ற பருவகாலங்கள்.

மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் முறை (maravalli kilangu sagupadi in tamil)

மண்:

  • செம்மண், கரிசல் மண் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி (cassava cultivation)செய்ய ஏற்றது.
  • மண்ணில் தழைச்சத்து அதிகம் இருக்கவேண்டும்.
  • களிமண், வண்டல் மண்ணில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி (cassava cultivation) செய்ய கூடாது.
  • அதேபோல் நல்ல காற்றோட்ட வசதியும், தண்ணீர் தேங்காமலும் இருக்கவேண்டும்.
  • மேலும் மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 7.0க்குள் இருக்க வேண்டும்.

மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் முறை – நிலம் தயாரித்தல்:

மரவள்ளி கிழங்கு சாகுபடி: நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழுது பயன்படுத்த வேண்டும். கடைசி உழவின்போது 25 டன் தொழுஉரம் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிட வேண்டும். பிறகு 75 செ.மீ இடைவெளியில் பார் அமைக்க வேண்டும்.

விதையளவு:

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி (cassava cultivation) பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 1900-2500 கிலோ, கிழங்குகள் நடுவதற்கு தேவைப்படும்.

மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் முறை – விதை நேர்த்தி:

ஒவ்வொரு கரணையும் அரை அடி நீளத்துடன் 8-10 கணுக்களுடன் இருப்பது நல்லது. விதைக்கரணைகளை பூசண மருந்துக் கரைசலில் ஊற வைத்து நடவு செய்வதால் நோய் தாக்குதலைத் தடுக்கலாம். மானாவாரி மற்றும் பாசனப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சியைத் தாங்கும் விதமாக ஊட்டச்சத்துக் கரைசலில் கரணை நேர்த்தி செய்ய வேண்டும்.

அதிக சத்துகள் மற்றும் வருமானம் உள்ள சாத்துக்குடி சாகுபடி..!

நடவு செய்யும் முறை:

பாசன சாகுபடிக்கு இரண்டரை அடி இடைவெளியில் பார்பிடித்து அதே அளவு இடைவெளியில் பாரில் வரிசையாக நடவு செய்ய வேண்டும். வளமான நிலங்களுக்கு 3X3 இடைவெளி போதுமானது. மானாவாரியில் 2X2 இடைவெளிப் பார்கள் அமைத்து நடவு செய்ய வேண்டும்.

மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் முறை – நீர் நிர்வாகம்:

மரவள்ளி கிழங்கு சாகுபடி: நடவு செய்தவுடன் முதல் பாசனமும், அதன் பிறகு மூன்றாவது நாள் உயிர்தண்ணீரும் விடவேண்டும். பிறகு 3 மாதங்கள் வரை 7 முதல் 10 நாள் இடைவெளியில் பாசனம் செய்ய வேண்டும். அதற்கு மேல் 8 வது மாதம் வரை 20 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது. சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது மிகச் சிறந்த யுக்தியாகும். இதனால் நீர் சேமிக்கப்படும்.

மரவள்ளி கிழங்கு உரம் இடும் முறை :

மரவள்ளி கிழங்கு உரம் இடும் முறை பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம் 40 கிலோ மணலுடன் கலந்து நடவு செய்த 30வது நாளில் இடவேண்டும்.

ஒரு ஏக்கருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே 80:225:160 கிலோ தேவைப்படும்.

இவற்றில் அடியுரமாக ஏக்கருக்கு 40 கிலோ யூரியா, 225 கிலோ சூப்பர் பாஸ்பேட், 80 கிலோ பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். மேலும் அடியுரமாக ஏக்கருக்கு 100 கிலோ ஜிப்சம் இட வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்:

களை நிர்வாகம்:

நடவு செய்த 20 வது நாள் முதல் களை எடுக்க வேண்டும். அப்போது முளைக்காத கரணைகளுக்கு பதில் புதிய கரணைகளை நடவு செய்ய வேண்டும். பிறகு 3-ம் மாதம் களை எடுத்து மண் அணைக்க வேண்டும்.

செடி நட்டு 60-வது நாளில் செடிக்கு இரண்டு கிளைகளை மட்டும் விட்டுவிட்டு மீதியை அகற்றி விடவேண்டும்.

பயிர் பாதுகாப்பு முறை:

வெள்ளை ஈ தாக்குதல்களுக்கு:

வெள்ளை ஈ மரவள்ளியைத் தாக்கும் முக்கியமான பூச்சியாகும்.

மேலும் மாவுப்பூச்சி, சிவப்பு சிலந்தி பேன் ஆகியவையும் மரவள்ளியை தாக்கும். இதற்கு 5% வேப்பங்கொட்டைச் சாறு (100 லிட்டர் தண்ணீருக்கு 5 கிலோ வேப்பங்கொட்டை பொடி) தெளிக்கலாம்.

இதனால் வெள்ளை ஈ கட்டுப்படுத்தப்படும் அல்லது ஒரு ஏக்கருக்கு அசிரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணியை 100 என்ற எண்ணிக்கையில் விட வேண்டும்.

ஆடியில் மக்காச்சோளம் சாகுபடி!!!

அறுவடை:

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி முறையில் இலைகள் மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும். நிலத்தில் வெடிப்புகள் உண்டாகும். இவையே அறுவடைக்கான அறிகுறியாகும்.

மகசூல்:

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி  முறையில் 240 நாட்களில் ஏக்கருக்கு 15-20 டன் கிழங்குகள் வரை கிடைக்கும்.

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement