முருங்கை மரத்தில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்..?

Advertisement

Control Moringa Leaf And Flower Drop in Tamil

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் முருங்கை இலை மற்றும் பூ உதிர்வதை கட்டுப்படுத்தும் வழிகள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். முருங்கை மரம் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். முருங்கை மரத்தின் பட்டை முதல் இலை, பூ, காய் என அனைத்தும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

அதுபோல முருங்கை கீரை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பெரும்பாலும் முருங்கை மரம் அனைவரின் வீட்டிலும் இருக்கிறது. அந்த வகையில் முருங்கை இலை மற்றும் பூ உதிர்வதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

அதிக லாபம் தரும் முருங்கை சாகுபடி செய்வது எப்படி

முருங்கை இலை மற்றும் பூ உதிர்வதை தடுக்கும் முறை:

 murungai poo uthirvathai kattupadutha in tamil

பெரும்பாலும் முருங்கை மரம் வைத்திருப்பவர்கள் முருங்கை இலை மற்றும் பூ உதிர்கிறது என்று தான் கவலைப்படுகிறார்கள். முருங்கை மரத்தில் பூ உதிராமல் இருந்தால் தான் காய் காய்க்கும். அதை தடுக்க என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா..? உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

முருங்கை மரம் ஒரு ஒரு வெப்ப மண்டலத்தை சார்ந்த பயிர் என்று சொல்லலாம். இது வெப்பத்தை தாங்கக்கூடிய பண்புகளை கொண்டுள்ளது. முருங்கை மரத்தின் தண்டுகளில் நீரை சேமித்து வைக்கும் செல்கள் காணப்படுகின்றன.

அதுபோல தண்டுகளில் இருக்கும் நீரானது இலைகளுக்கும் பூக்களுக்கும் குறைவாக கிடைக்கின்றது. அதனால் தான் குளிர்காலங்களில் இலைகள் மற்றும் பூக்கள் உதிர்கின்றன.

 முருங்கை மரம் செழிப்பாக வளர்வதற்கு நீர் தேங்காத வடிகால் வசதியுடைய மண்ணில் பயிரிட வேண்டும். காரணம், முருங்கை மரத்தின் வேர்கள் நீர் தேக்கத்தைத் தாங்கிக் கொள்வதில்லை. அதனால் முருங்கை மரத்தை நீர் தேங்கும் இடங்களில் வளர்க்க கூடாது.  

அதேபோல முருங்கை மரத்திற்கு 15 நாட்களுக்கு 1 முறை நீர் பாய்ச்ச வேண்டும். ஏனென்றால், பூக்கள் உற்பத்தி ஆவதற்கு நீர் பற்றாகுறை அவசியம் தேவை. அதுபோல பூக்கள் அதிகளவு உற்பத்தி ஆனதும் 7 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். இதனால் அதிகளவு காய்கள் உற்பத்தி ஆகும்.

முருங்கைக் கீரை நன்மைகள்

முருங்கை இலை மற்றும் பூ உதிர்வதை தடுக்கும் வழிகள்: 

  1. வேப்பமரத்தின் கொட்டையை காயவைத்து அரைத்து, அந்த பொடியை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
  2. தண்ணீரில் புண்ணாக்கு மற்றும் சிறிதளவு தேங்காய் பால் சேர்த்து தெளித்து வரலாம்.
  3. 1 லிட்டர் தண்ணீரில் தேவையான அளவு பெருங்காய தூள் கலந்து தெளிக்கலாம்.
 இதுபோல தெளித்து வருவதால் இலைகளை பூச்சி அரிப்பதை தடுக்க முடியும். அதுமட்டுமில்லாமல், வாரம் 2 அல்லது 3 முறை இதுபோல செய்து வந்தால் இலைகள் மற்றும் பூக்கள் உதிர்வதை தடுக்கலாம்.  
முருங்கை பொடி சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்..!

 

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement