பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் | Pradhan Mantri Fasal Bima Yojana Online Registration Tamil
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்துக்கொள்வோம். இந்த திட்டத்திற்கான காப்பீடு கட்டண மானியமானது மானாவாரி மாவட்டத்திற்கு 30%, பாசன வசதி உள்ள மாவட்டத்திற்கு 25% ஒன்றிய அரசும், 60 முதல் 65% மாநில அரசு பங்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் சம்பா பருவத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி வேளாண்மை உழவர் நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. வாங்க எப்படி அப்ளை செய்யலாம் என்று விரிவாக பார்க்கலாம்.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்..! |
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2022:
ஸ்டேப் 1:
முதலில் கூகுளில் pmfby என்று டைப் செய்துக்கொள்ளுங்கள். அவற்றில் Insurance Premium Calculator என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப் 2:
அவற்றில் சீசன் என்பதில் Rabi என்பதை செலக்ட் செய்யவும். Year என்பதில் 2022-2023 என்பதை தேர்வு செய்யவும். Scheme என்பதில் Pradhan Mantri Fasal Bima Yojana என்பதை தேர்வு செய்யவும்.
ஸ்டேப் 3:
அடுத்து State என்பதில் Tamilnadu என்பதையும் District என்பதில் உங்களுடைய மாவட்டத்தினை தேர்வு செய்யவும். அடுத்து பக்கத்தில் Crop என்பதில் Paddy II என்பதை தேர்வு செய்யவும்.
ஸ்டேப் 4:
அடுத்து Area in Hectare என்பதில் 0.40 (ஏக்கருக்கு 40) என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு Calculate என்பதை கொடுக்க வேண்டும். கொடுத்த பிறகு Insurance Company Name, Cut Off Date (Last Date) வந்துவிடும். அதற்குள் நீங்கள் விண்ணப்பிக்கவும்.
ஸ்டேப் 5:
அதற்கு கீழே Premium Paid by Farmers என்பதில் 452 ரூபாய் தொகையினை Insurance ஆக நீங்கள் செலுத்த வேண்டும். அரசாங்கம் உங்களுக்கு 5583.97 ரூபாய் உங்களுக்கு மானியமாக வழங்குவார்கள். மொத்தமாக 30183.6 உங்களுக்கு இன்சுயூரன்ஸ் கிடைக்கும்.
ஸ்டேப் 6:
அடுத்து Farmer Corner என்பதை கிளிக் செய்யவும். அவற்றில் அக்கௌன்ட் create செய்வதற்கு Guest Farmer என்பதை தேர்வு செய்யவும். அவற்றில் உங்களுடைய ஆதார் கார்டில் உள்ளபடியே தந்தை பெயர், உறவு முறை பெயர், தொலைபேசி எண் கொடுத்து verify கொடுத்தால் உங்களுடைய மொபைலிற்கு OTP வரும்.
ஸ்டேப் 7:
சரியான Captcha Code கொடுத்து Get OTP கொடுக்கவும். OTP வந்த பிறகு எண்ணை சரியாக கொடுத்து Submit கொடுக்கவும். அடுத்து உங்களுடைய வயது, பாலினம், சாதி, Farmer type, உங்களுடைய State, மாவட்டம், sub District, கிராமம்/ நகரம், வீட்டு முகவரி, பின் கோடு, Farmer ID type என்பதில் UID என்று கொடுத்து ஆதரில் இருக்கக்கூடிய UID எண்ணினை நிரப்பவும்.
விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50% அரசு மானியம்..! |
ஸ்டேப் 8:
அதன் பிறகு Account Details என்பதில் அதில் கேட்டுள்ள அனைத்திற்கும் சரியானவற்றை கொடுக்கவும். கொடுத்த பிறகு கீழே Captcha Code கொடுத்து Create User என்பதை கொடுக்கவும். அடுத்து மேலே மீண்டும் Address கொடுத்து Nominee தேர்வு செய்யவும்.
ஸ்டேப் 9:
அடுத்ததாக Crop Details என்பதில் Pradhan Mantri Fasal Bima Yojana என்பதை தேர்வு செய்து, வருடம் 2021, Season என்பதில் Rabi என்பதை கொடுக்கவும். பிறகு Land Details என்பதில் MixCropping என்பதில் Yes கொடுத்து Select Crop கொடுத்து Paddy II தேர்வு செய்து VAO-விடம் அடங்கல் படிவம் வாங்கி வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 10:
அந்த படிவத்தில் உள்ள தேதியினை என்டர் செய்து, சர்வே எண், Plot எண், ஏக்கர் அளவு என்டர் செய்து கடைசியாக Add என்பதை கொடுக்கவும். கீழே உங்களுக்கான தொகை விவரம் வந்துவிடும்.
ஸ்டேப் 11:
அடுத்து Upload Documents என்பதில் உங்களுடைய Passbook Photo, Land Records, உங்களுடைய அடங்கல் படிவம் அப்லோட் செய்த பிறகு Next என்பதை கொடுக்கவும்.
ஸ்டேப் 12:
அனைத்தையும் ஒருமுறை சரிபார்த்த பிறகு Make Payment என்பதை கொடுத்து தொகையை செலுத்த வேண்டும். அதற்கான ஸ்லிப் வந்துவிடும். சரியாக வராதவர்கள் CSC சேவை மையத்தை அணுகி உங்களுக்கான இன்சூரன்ஸை செய்துக்கொள்ளலாம்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | pasumai vivasayam in tamil |