உங்கள் செடிகள் பசுமையாக வளர்வதற்கு வீட்டிலேயே கரைசல் தயாரிக்கலாம்..!

Advertisement

Sedikal Valara Karaisal 

செடிகள் வளர்க்க வேண்டும் என்று அனைவருக்குமே ஒரு ஆசை இருக்கும். வீட்டை சுற்றி அழகழகான செடிகள் வளர்க்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். அதனால் கடைகளில் இருந்தும், விதைகள் மூலமும் செடிகளை வளர்த்து வருகிறார்கள். ஒரு சில வீடுகளில் எந்த செடி வைத்தாலும் அது செழிப்பாக வளர்ந்து இருக்கும்.

ஒரு சில வீடுகளில் எவ்வளவு உரம் போட்டாலும் செடிகள் ஒரு அளவிற்கு மேல் வளராமல் அப்படியே இருக்கும். அதற்கு போதுமான அளவு நீர் அல்லது மண்ணின் தன்மை அல்லது சூரியஒளி கிடைக்காமல் இருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். செடிகள் எப்பொழுதும் செழிப்பாக வளர்வதற்கு நாம் வீட்டிலேயே கரைசல் தயாரிக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

கருவேப்பிலை செடி கடகடன்னு வளருவதற்கு இந்த ஒரு கரைசல் போதும்..!

செடிகள் செழிப்பாக வளர கரைசல்: 

செடிகள் செழிப்பாக வளர

நம் வீட்டை சுற்றி அழகான பூச்செடிகள் இருந்தால் அதை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் பலரும் தன் வீட்டு மாடியில் மாடித் தோட்டம் அமைத்து செடிகளை வளர்த்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வீட்டு மாடியில் விவசாயமே செய்து வருகிறார்கள்.

அப்படி இருக்கும் போது செடிகள் செழிப்பாகவும் பசுமையாகவும் இருக்க வேண்டும் என்று அனைவருமே நினைப்பார்கள். அதிகமாக பணம் செலவு செய்து பலவகையான செடிகளை வாங்கி வந்து வளர்க்கின்றோம். ஆனால் அது செழிப்பாக வளரவில்லை என்று பலரும் புலம்புகிறார்கள்.

அப்படி புலம்புபவர்கள் இந்த கரைசலை மட்டும் தெளித்து வாருங்கள். இந்த கரைசலை நீங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தயார் செய்யலாம். இப்படி செடிகளை பசுமையாக வளரச் செய்யும் கரைசலை ஈயம் கரைசல் என்று சொல்வார்கள்.

உங்கள் வீட்டு செடிகளை வளர விடாமல் தடுக்கும் பூச்சிகளை விரட்ட இந்த ஒரு கரைசல் போதும்..!

கரைசல் செய்ய தேவையான பொருட்கள்:

செடிகள் செழிப்பாக வளர கரைசல்

  1. பப்பாளி பழம்
  2. வாழைப்பழம்
  3. வெல்லம்

மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் உங்கள் செடிகளுக்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் பப்பாளிப் பழம், வாழைப்பழம் மற்றும் வெல்லம் போன்ற 3 பொருட்களையும் போட்டு 15 நாட்கள் வரை ஊறவைக்க வேண்டும்.

 பின் இந்த கரைசலை எடுத்து தண்ணீரில் கரைத்து உங்கள் வீட்டிலும் இருக்கும் எந்த செடிகளுக்கு வேண்டுமானலும் இதை ஸ்பிரே செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தாலே போதும் உங்கள் செடிகள் செழிப்பாகவும் பசுமையாகவும் வளரும். மேலும் செடிகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கலாம்.  

இதையும் படியுங்கள் ⇒ கொய்யா மரத்தில் அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் செய்யுங்க..!

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement