ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2020..! Kanyakumari District Recruitment 2020..!

Kanyakumari Jobs

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2020..! Kanyakumari District Recruitment 2020..!

Kanyakumari Jobs: கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஊராட்சி செயலர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல்(Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த ஊராட்சி செயலர் பணிக்கு மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.12.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி போன்றவற்றை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு 2020 (kanyakumari district valaivaipu) அறிவிப்புபடி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணியமர்த்தப்படுவார்கள்.

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு 2020 – அறிவிப்பு விவரம்: 

நிறுவனம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
பணிகள்ஊராட்சி செயலர்
மொத்த காலியிடம்27
மாத சம்பளம்ரூ.15,900/-
பணியிடம்கன்னியாகுமரி
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி25.11.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி10.12.2020
அதிகாரபூர்வ வலைத்தளம்kanniyakumari.nic.in

கல்வி தகுதி:

 • 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notificationஐ க்ளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல், அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • மேலும் வயது தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள Notificationஐ கிளிக் செய்யவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேரடி நியமனம் 

விண்ணப்ப முறை:

 • அஞ்சல்(Offline)

இணைக்கவேண்டிய சான்று:

 • கல்வி தகுதி சான்று
 • இருப்பிட சான்று
 • சாதி சான்றிதழ்
 • முன்னுரிமை சான்றிதழ்
 • இவற்றிற்கான ஆவணங்களை விண்ணப்ப படிவத்துடன் விண்ணப்பதாரர்கள் இணைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

 1. kanniyakumari.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் “Notification of Direct Recruitment for Village Panchayat Secretary“, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
 5. பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 10.12.2020 என்ற தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
 6. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கன்னியாகுமரி மாவட்டம்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (kanyakumari jobs 2020) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>தற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2020