குழந்தைக்கு முடி வளர இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..!

குழந்தைக்கு முடி வளர இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..!

Hair growth tips for babies in tamil..! குழந்தைகளின் முடி மிகவும் மென்மையானது, எனவே அதற்கு சரியான பராமரிப்பு என்பது மிகவும் அவசியம். எனவே குழந்தைகளின் முடி நன்கு பொசு பொசு என்று அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர சில சில குறிப்புகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது அவற்றையெல்லாம் படித்தறிவோம் வாங்க…

குழந்தைக்கு அடர்த்தியான முடி வளர /
Hair growth tips for babies in tamil..!

குழந்தைக்கு முடி வளர உதவும் ஊட்டச்சத்து உணவுகள்:-

குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் உணவுகள் மிகவும் முக்கியம்து. ஏன்னெனில் உணவின் மூலமாகத்தான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைவருக்குமே கிடைக்கின்றது. எனவே குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் அதிக கவனம் பெற்றோர்களுக்கு தேவை.

பொதுவாக ஊட்டச்சத்து ஏ, பி இவை இரண்டும் முடி வளர்ச்சிக்கு உகந்தது. எனவே பருப்பு வகைகள், பப்பாளி, கேரட் சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை குழந்தையின் உணவுகளில் அதிகம் சேர்த்து வரவும்.

அதேபோல் குழந்தைகளுக்கு அடிக்கடி கீரை வகைகளை சூப் செய்து கொடுக்கலாம். குறிப்பாக சிறிய குழந்தைகளாக இருந்தால் தவறாமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பாலில் தான் அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றது.

குழந்தைக்கு முடி வளர உதவும் சில பராமரிப்பு குறிப்புகள்..!

குழந்தைக்கு முடி வளர – எண்ணெய் மசாஜ்:-

Hair growth tips for babies in tamil..! இப்போது பலவகையான எண்ணெய் கிடைக்கின்றது. இருப்பினும் குழந்தைகளின் முடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் மிகவும் சிறந்தது. அதுவும் தேங்காய் எண்ணெயில் உள்ள உயிர்ச்சத்து ஈ குழந்தையின் முடி வளர்ச்சிக்கு  பயன்படுகிறது. குழந்தைகளுக்கு தினமும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி தலைக்கு மசாஜ் செய்வதினால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் செல்லும். இதனால் குழந்தைகளுக்கு தலைமுடி அடர்த்தியாக மற்றும் ஆரோக்கியமாக வளர செய்யும்.

குழந்தையின் முடியை சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும்:-

குழந்தைக்கு அடர்த்தியான முடி வளர:- குழந்தையின் முடியை சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம். எனவே குழந்தைகளுக்கு வாரத்தில் இரண்டு முறை தலை அலசிவிடுங்கள். அதேபோல் வெயில் காலமாக இருந்தால் குழந்தைகளின் தலை பகுதி அதிகமாக வியர்க்கும். அந்த வியர்வை குழந்தையின் தலை பகுதியில் படிந்து பிசுபிசுப்பையும் அரிப்பையும் ஏற்படும். இதனால் குழந்தைகளுக்கு பொடுகு தொல்லையும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

எனவே வெயில் காலமாக இருந்தால் குழந்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தலை அலசிவிடுங்கள். அதே சமயம் குழந்தையின் தலை முடிக்குத் தேர்வு செய்யும் ஷாம்பிலும் கவனம் தேவை. அதிக ரசாயனம் கலக்காத தரமான ஷாம்புவை சந்தையில் வாங்கி பயன்படுத்தவும். 9-ம் மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தினமும் ஷாம்பு போட வேண்டாம்.

குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வது?

குழந்தைகளின் முடி அடர்த்தியாக வளர எண்ணெய்:-

தேவையான பொருட்கள்:-

  1. தேங்காய் எண்ணெய் – 1 கப்
  2. கரிசலாங்கண்ணி பொடி – 1 tsp
  3. கருவேப்பில்லை பொடி – 1 tsp
  4. வேப்பிலை பொடி – 1 tsp

குழந்தைக்கு முடி வளர எண்ணெய் செய்முறை:-

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து வாசம் வரும் வரை காய்ச்சி இறக்கி ஆற வைத்து வடிகட்டவும்.

இந்த எண்ணெயினை சிறியவர்கள் வரை அனைத்து வயதினர்களும் பயன்படுத்தலாம். தலைமுடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெயை தினமும் பயன்படுத்தலாம்.

குழந்தைகளின் முடி அடர்த்தியாக வளர ஷாம்பு:-

  1. தண்ணீர் – 1/2 கப்
  2. Peppermint Essential oil – 3 drops
  3. Liquid Castile soap – 1 cup
  4. Glycerin – 1/4 tsp

குழந்தைக்கு முடி வளர  ஷாம்பு செய்முறை:

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்தி குழந்தைகளின் முடி அலச பயன்படுத்தவும்.

பொறுப்பு துறப்பு:

இங்கு கூறப்படும் வைத்தியங்கள் மருத்துவரால் சொல்லப்படுபவை அல்ல, இவை பல வருடங்களாக நாங்கள் எங்கள் வீட்டில் செய்யும் அழகு குறிப்புக்கள் மற்றும் பாட்டி வைத்தியங்கள். எனவே தங்களுக்கு ஏதேனும் இவற்றை பின்பற்ற தயக்கம் இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும்.

நன்றி வணக்கம்..!

 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby health tips in tamil