இரயில் நிலையங்களில் தனது இரவை கடத்தியவர், 1000-ல் ஆரம்பித்து இப்போது 36,000 கோடிக்கு சொந்தக்காரர் ஆனதை பற்றி தெரியுமா…

Advertisement

சத்யநாராயண் நுவல் வெற்றிக்கதை 

உலகின் பணக்கார பட்டியலில் இருக்கும் பலருக்கு பின்னல் கண்டிப்பாக ஒரு சோகமான கதை இருக்கும். அவர்களின் முயற்சிகள் பல தோல்விகளில் முடித்திருக்கும். அந்த தோல்விகளை தங்களின் வெற்றிகளுக்கு படிகளாக மாற்றியவர்கள் மட்டும் தான் இன்று நிமிர்ந்து பார்க்கக்கூடிய இடத்தில் உள்ளனர். அந்த தடைகளை கண்டு அஞ்சியவர்கள்  அவர்களுக்கான இடத்தை கண்டிப்பாக அடைந்திருக்க மாட்டார்கள். அப்படி தனக்கு வந்த தடைகளை அனைத்தையும் உதறி தள்ளி இன்று உலகில்தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் சத்யநாராயண் நுவல் அவற்றின் விடாமுயற்சி அவரின் வெற்றிக்கு முழுக்காரணம் இருந்துள்ளது. இன்று $ 3 பில்லியனுக்கு சொந்தக்காரங்க மாற்றியுள்ளது. ஆனால் அதனை அடைய அவர் கடந்துவந்த பாதை மிகவும் கரடுமுரடானது. ஆனாலும் அவரின் முயற்சி அவருக்கு வெற்றியை தேடித்தந்துள்ளது. வாருங்கள் இன்றைய பதிவில் சத்யநாராயண் நுவல் பற்றியும் அவர் உருவாக்கிய நிறுவனத்தை பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

successful entrepreneur story:

successful entrepreneur

சத்யநாராயண் நுவல் ஆரம்பகாலம் :

சத்யநாராயண் நுவல் தனது கடின உழைப்பு மற்றும் கூர்மையான வணிகத் திறன் மூலம் தனது விதியை மாற்றினார். ராஜஸ்தானின் பில்வாரா பகுதியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த சத்தியநாராயணன் நுவல், இளம் வயதில் இருந்தே வணிகத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தார். சத்தியநாராயண் நுவாலின் தந்தை அரசாங்கத்தில் கணக்காளராக இருந்தார்.

குடும்ப சூழல் காரணமாக 10ம் வகுப்பு வரையில் மட்டுமே கல்வி பயின்றுள்ளார்.

தந்தையின் ஓய்விற்கு பிறகு குடும்பத்தின் பொருளாதார சூழலால் மதுராவில் பணிபுரிந்தார். 18 வயதில் தனது சொந்த ஊருக்கு திரும்பி, ஏழு ஆண்டுகள் நுவால் ஃபவுண்டன் பேனாக்களுக்கான மை தயாரிப்பது, குத்தகை வணிகம் மற்றும் போக்குவரத்து நிறுவனம் உட்பட பல வணிகங்களில் ஈடுபட்டார். அவரின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடியவே, மனம் தளர்ந்துவிடாத நுவல் பல்வேறு தொழில் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டும் வந்துள்ளார். அவர் தனது 19 வயதில் திருமணம் செய்து கொண்டு, 1977ல் மகாராஷ்டிரா மாகாணத்தில் வேலை தேடி வந்தார். மகாராஷ்டிரா அவரின் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.

திருப்புமுனை:

successful entrepreneur story

அவர் பொருத்தமான வேலையைத் தேடி ராஜஸ்தானில் இருந்து மகாராஷ்டிராவுக்குச் சென்றார். அங்கு அவருக்கு வேலை கிடைக்காததால், பல வாரங்கள் ரயில் நிலைய நடைமேடையில் இரவுகளை கடத்தினர்.

கடும்நெருக்கடியான சூழலில் வெடிபொருள் உரிமம் வைத்திருந்த அப்துல் சத்தார் அல்லா பாயை அவர் சந்தித்தார். அப்துல் சத்தார் அல்லாபாய் கிணறு தோண்டுவதற்கும், சாலைகள் அமைப்பதற்கும், சுரங்கங்களைத் தோண்டுவதற்கும் பயன்படுத்தப்படும் வெடிபொருள்களை வியாபாரம் செய்யும் வியாபாரியாக இருந்தார். 1970-ல் வெடிபொருட்களின் பற்றாக்குறை இருந்ததாலும், அதற்கான உரிமம் பெறுவதற்கான சிக்கல்கள் இருந்ததாலும்,  ப்துல் சத்தார் அல்லா பாயின் உரிமத்தை ரூபாய் 1000 செலுத்தி பயன்படுத்தி, நிலக்கரிச் சுரங்கங்களில் பயன்படுத்த வெடிமருந்துகளைத் விற்பனை செய்யும் முகவராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.

தொடக்கம்:

பிறகு Imperial Chemical Industries என்ற நிறுவனம் நுவலுக்கு ஒரு புதிய தொடக்கத்தினை தந்தது.

தொடக்கத்தில் ரூபாய் 250க்கு வெடிமருந்துகளை வாங்கி சந்தையில் ரூபாய் 800 க்கு விற்ற நுவல், 1995-ல் ரூ.60 லட்சம் வங்கியில் கடன் பெற்று வெடி மருந்து தயாரிக்கும் சிறிய யூனிட்டை நாக்பூரில் சோலார் இண்டஸ்ட்ரீஸ் ஆரம்பித்தார். பின்னர், அவர் லாபகரமான பாதுகாப்பு துறையில் நுழைந்தார். அதாவது, சோலார் இண்டஸ்ட்ரீஸ் கையெறி குண்டுகள், ட்ரோன்கள் மற்றும் போர்க்கப்பல்களில் பயன்படுத்தும் வெடிபொருட்கள் முதல் உந்துசக்திகள் வரை அனைத்தையும் உற்பத்தி செய்யத் தொடங்கியது. சோலார் இண்டஸ்ட்ரீஸ், இப்போது 65 நாடுகளுக்கு வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் சுரங்க நிறுவனங்களுக்கு சோலார் இண்டஸ்ட்ரீஸ் வெடி மருந்துகள் அனுப்புகிறது.

Solar Industries India:

Solar Industries India நிறுவனம், இந்தியாவின் முதன்முதலாக ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்களையும், இந்திய ஆயுதப் படைகளுக்கு வழங்க உத்தேசித்துள்ள லாடரிங் வெடிமருந்துகளையும் உருவாக்கியுள்ளது.

மதிப்பு:

Solar Industries India நிறுவனம் 10 ஆண்டுகளில் 1,700 சதவீத வளர்ச்சியை கண்டது. 2022ல் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 35,000 கோடி ஆகும்.  சத்தியநாராயணன் நுவலில் தற்போதைய நிகர சொத்து மதிப்பு சுமார் 19,000 கோடி ரூபாய் ஆகும்.

Mamaearth உருவான கதை தெரியுமா உங்களுக்கு…

இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> success story

 

Advertisement