Mamaearth உருவான கதை தெரியுமா உங்களுக்கு…

Advertisement

Mamaearth Success story 

இந்தியாவில் பல இளைஞர்கள் வேலை தேடுபவராக இல்லாமல் வேலை வழங்குபவர்களாக மாறியுள்ளனர். இன்று பல இந்திய தொழில்முனைவோர்  உருவாக்கியுள்ளது. அவர்களின் வெற்றிக்கதைகள் இன்னும் பல இளைஞர்களுக்கு தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க உத்வேகத்தை அளிக்கின்றன. பலர் தங்கள் வேலையை விட்டுவிட்டு தங்கள் கல்விப் பின்னணியுடன் தொடர்பில்லாத துறைகளில் தொழில் தொடங்குகின்றனர் அவர்களில் பலர் எட்டமுடியாத உயரத்தையும் அடைந்துள்ளனர். கடந்த சகாப்தத்தில் இந்தியாவில் பல தொழில்முனைவோரை உருவாக்கியுள்ளது, அவர்களில் பலர் முதல் தலைமுறை தொழில்முனைவோர் எளிய பின்னணி மற்றும் சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளும் இளம் தொழில் முனைவோரை ஆதரிப்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதில் இந்திய அரசின் ஸ்டார்ட்அப் இந்தியா மிக முக்கியமானதாகும். இந்த திட்டத்தால் பயன் அடைந்தோர் அதிகம். நீங்களும் அவர்களில் ஒருவராக மாற வேண்டுமா, அவர்களின் முயற்சிகள், அவர்கள் கடந்துவந்த தடைகள் எல்லாம் தெரிந்தால் உங்களாலும் ஒரு சொந்த தொழிலைத் தொடங்க முடியும் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.வாருங்கள் இன்று இயற்கை முறையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அழகு சாதன பொருட்களை உருவாக்கி வரும் Mamaearth நிறுவனத்தை பற்றியும் அதை உருவாக்கிய நிறுவனங்களை பற்றியும் இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்.

Mamaearth:

Mamaearth நிறுவனம், 2016 இல் வருண் அலக், கஜல் அலக் ஆகியோரால் தொடங்கப்பட்ட  நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்காக நச்சு இல்லாத தோல் பராமரிப்பு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும்.

நிறுவனம் தொடங்குவதற்கு முன்னாள் இருவரும், கார்ப்பரேட் வேலைகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள், ஆனாலும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற தீவிர ஆசை இருவருக்கும் இருந்தது. சொந்த தொழிலுக்கான ஆராய்ச்சிகளை அவர்களின் வேலைகளுக்கு நடுவே இருவரும் மேற்கொண்டனர். அவர்கள் தங்களது குழந்தைக்கு தேவையான இயற்கையான தோல் பராமரிப்பு பொருட்களை தேடும்போது அவர்களுக்கு ஒரு சரியான தீர்வு கிடைக்கவில்லை. அதனை மையமாக வைத்து குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஆர்கானிக் முறையில் தோல் பராமரிப்பு பொருட்களை உருவாக்கலாம் என்னும் எண்ணம் உதயமாகியுள்ளது.

பின்னர் இயற்கை பொருட்கள் தயாரிப்பு பற்றிய தேடலில் இறங்கிய இருவரும் 2016 இல் Mamaearth நிறுவனத்தை ஹரியனா மாநிலத்தின் குர்கானில் 90 லட்ச ரூபாய் ஆரம்ப முதலீடாக கொண்டு ஆரம்பித்தனர்.

Mamaearth-தின் தூண்கள்:

வருண் அலக்

வருண் அலக், Mamaearth நிறுவனத்தின் CEO மற்றும் இணை நிறுவனர் ஆவார். இவர் டெல்லி பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டமும் அடுத்ததாக பெங்களூர் IIM -ல் எம்பிஏ பட்டமும் பெற்றவர். Mamaearth தொடங்குவதற்கு முன் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றியவர்.

கஜல் அலக்

கஜல் அலக், Mamaearth நிறுவனத்தின் COO மற்றும் இணை நிறுவனர் ஆவார். கஜல் அலக், டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டமும், IIM பெங்களூரில் எம்பிஏ பட்டமும் பெற்றவர். Mamaearth ஐத் தொடங்குவதற்கு முன்பு இவரும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

Mamaearth- தின் தொடக்கம்:

தோல் பராமரிப்பு துறையில் ஆர்கானிக் பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அலக், ஒரு ஸ்டார்ட்அப்பாக தனது நிறுவனத்தை ஆரம்பித்தார்.

Mamaearth- தின் பயணம்:

இவர்கள் தங்களது முதல் தயாரிப்பாக ஒரு பாடி லோஷன் மற்றும் ஃபேஸ் க்ரீம் என்ற இரண்டு தயாரிப்புகளுடன் அவர்கள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

முதலில் இவர்களின் தயாரிப்புகள், அவர்களது Mamaearth வலைத்திலும் அடுத்ததாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் அவர்களை பொருட்களை விற்றனர்.

தொடக்கத்தில், மிக குறைந்த அளவு மட்டுமே விற்பனைகள் செய்ததால், அவர்களின் டெலிவெரிக்கான செலவுகள் அதிகரித்தது.

ஆரம்பித்த தொடக்கத்தில் அதிக வருவாய் இழப்புகளை சந்தித்துயுள்ளனர்.

ஆனாலும் அவர்களின் முயற்சியில் இருந்து விலகாமல், மனம் தளராமல் தொடர்ந்து கடுமையாக உழைத்து இன்று இந்தியாவில் பெரும்பாலானோர் அறியக்கூடிய ஒரு பொருளாக தங்களை பொருட்களை உருகாக்கியுள்ளனர்.

வாடிக்கையாளர்களின் நேர்மறையான கருத்துகள் மதிப்புகள், அவர்களுக்கு அதிக வாடிக்கையாளர்களை பெற்றதோடு மட்டும் அல்லாமல் நிறுவனமும் அடுத்த நிலையை அடைந்தது.

இரண்டு தயாரிப்புகளுடன் தொடங்கிய நிறுவனம்,  தோல் பராமரிப்புக்கான லோஷன்கள், முக கிரீம்கள் என தொடங்கி முடி பராமரிப்பு பொருட்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு பொருட்கள் உட்பட பல வகையான தயாரிப்புகளை இன்று உற்பத்தி செய்கின்றனர்.

Facebook, instagram மூலம் என தொடங்கிய விற்பனை இன்று Amazon, Flipkart மற்றும் Nykaa போன்ற பெரிய e-commerces தளங்களிலும் கிடைக்கிறது.

Amazon, Flipkart மற்றும் Nykaa போன்ற பெரிய சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் அவை ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் இப்போது Mamaearth கிடைக்கின்றன .

Mamaearth இன் வணிக மாதிரி:

Mamaearth ஒரு நேரடி-நுகர்வோருக்கு (Direct to consumer) வணிக மாதிரியைப் பின்பற்றுகிறது. இதன் மூலம் அவர்கள் செலவுகளை குறைக்கின்றனர்.

Mamaearth எதிர்காலத் திட்டங்கள்:

Mamaearth வரும்காலங்களில் சர்வதேச அளவிலும் அதிகமான வாடிக்கையாளர்களை அடைய வேண்டும் என்பதை திட்டமிட்டுள்ளனர்.

தங்களின் தயாரிப்புகளையும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் ஆண்களுக்கான புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் எதிர்காலத்தில் சொந்தமாக brick and mortar கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளனர்.

நிகர லாபம்:

தங்களது சேமிப்பில் சுமார் 90 லட்ச ரூபாய் ஆரம்ப முதலீட்டில் தொழிலை ஆரம்பித்தனர். தற்போது நிறுவனத்தின் நிகர மதிப்பு சுமார் $1.2 b என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 1.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

முடிவுரை:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் இயற்கையான தோல் பராமரிப்பு பொருட்களை வழங்குவதற்காக 2 தயாரிப்புகளுடன் ஆரம்பித்து இன்று 100க்கும் அதிகமான இயற்கையான தயாரிப்புகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளனர் அகல் தம்பதியர்.

Mamaearth ஒரு வெற்றிகரமான வணிகமாக மாறுவதற்கு பல சவால்களை தாண்ட வேண்டியிருந்தது. அவர்களின் சவாலான பயணம் மற்ற தொழில்முனைவோர்களுக்கு என்று ஒரு ஊக்கமாக இருக்கும் என நம்புகின்றோம்.

நீங்களும் சொந்தத் தொழிலைத் தொடங்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், உங்கள் கனவுகளைப் பின்தொடருங்கள், அனைத்து சவால்களும் கண்டிப்பாக ஒரு நாள் வெற்றியாக உங்களை தேறி வரும்.

இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> success story

 

Advertisement