50 வயதில் தனக்கான தொழிலை ஆரம்பித்து உலகமே திரும்பிப்பார்க்க வைத்த ஃபால்குனி நாயர், Nykaa உருவானது எப்படி ?

Advertisement

Nykaa Success Story

அனைவருக்கும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அப்படி தொடங்கிய தொழில் நஷ்டமில்லாமல் செயல்படுமா என்றால் அது கேள்விக்குறிதான். யார் ஒருவரும் தனது முதல் முயற்சிலேயே வெற்றி பெறுவதில்லை. அப்படி முதல்முயற்சிலையே வெற்றி பெற்றவர்கள் அதற்காக அதிகம் உழைத்து இருக்க வேண்டும். அப்படி தனது முதல் முயற்சியாக தொடங்கிய தொழிலை வெற்றிகரமாக மாற்றியுள்ளனர்.Nykaa நிறுவனத்தின் நிறுவனர் அவர்களை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்..

Nykaa உருவான கதை:

ஃபால்குனி நாயர் ஆரம்ப கால வாழ்க்கை:

1963 பிப்ரவரி 19 அன்று மும்பையில் பிறந்த ஃபால்குனி நாயர் குஜராத்தி குடும்பத்தை சார்ந்தவர்.

சிடன்ஹாம் வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் தனது இளங்கலை படிப்பை முடித்து அகமதாபாத்தில் உள்ள IIM தனது MBA முதுகலை பட்டத்தை முடித்துள்ளார்.

தனது ஆரம்ப கால வாழ்க்கையை A F Ferguson & Co நிறுவனத்தின் மேலாளராக ஆரம்பித்தார்.

A F Ferguson & Co நிறுவனத்தில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஃபால்குனி நாயர் பின்னர் கோடக் மஹிந்திரா கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைவராக இணைந்தார். 2007-ம் ஆண்டு கோடக் மஹிந்திரா கேப்பிட்டல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உயர்ந்தார். கிட்டத்தட்ட 18 கோடக் மஹிந்திரா கேப்பிட்டல் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.

தனது 50 வயதில் கோடக் மஹிந்திரா கேப்பிட்டல் நிறுவனத்தில் இருந்து விலகி தனது கனவான சுயதொழில் தன்னை ஈடுபாடுத்த தொடங்கினர்.

Nykaa ஆரம்பம்:

Nykaa உருவான கதை

Nykaa நிறுவனர் கதை புதிரானது, அது “Better late than never!” என்ற பழமொழியை வரையறுக்கிறது. 2009 இல், 46 வயதில், ஃபால்குனி ஒரு நிறுவனத்தைத் தொடங்க ஆசைப்பட்டார். 2011 ஆம் ஆண்டில், பல பிராண்ட் இ-காமர்ஸ் தளத்தை நிறுவுவது உட்பட சில யோசனைகளைப் பெற்றார் . இதன் விளைவாக,

2012- ல் தனது சொந்த தொழிலைத் தொடங்கும் ஆசையுடன் தனது மதிப்புமிக்க வேலையை துறந்து தன்னை ஒரு தொழில்முனைவோராக நிலை நிறுத்த பல ஏற்ற இறக்கங்களுக்கு இடையை நிறுவப்பட்டது nykka.

அழகு சதான பொருட்கள் தோல் பராமரிப்புக்கு முக்கியம் அளிக்கும் ஃபால்குனி நாயர் அதற்கான ஒரு பிராண்ட் உருவாக்க எண்ணினார்.

இந்தியாவில் அழகு சாதன பொருட்களின் சந்தை குறைவாக இருப்பதையும், வாடிக்கையாளர்கள் அதனை அதிக அளவில் தேடும் பொருளாக இருப்பதையும் உணர்ந்தார்.

கடைகளில் மட்டும் தேடிவாங்க வேண்டியிருந்த அழகு சாதன பொருட்களை உருவாக்கி அதனை இணைய தளத்தில் விற்பனை செய்வது ஃபால்குனி நாயரின் ஆரம்ப கனவாக இருந்தது.

nykaa success story

இதன் விளைவாக 2012-ம் ஆண்டு சில்லறை வணிகத்தை தொடங்கினர். ஆரம்பத்தில் பல சவால்கள் தனது தந்தை வழங்கிய சிறிய அலுவலகத்தில் 3 ஊழியர்களுடன் தனது நிறுவனத்தை தொடங்கினர். Nykaa இணையதளம் பல சமயங்களில் செயல் இழந்தது. இதனால் தொழில் முழுவதும் முடங்கும் நிலையம் அடைந்தது. சவால்களை தாண்டி 2013-ம் ஆண்டு தொழில் முன்னேற தொடங்கியது.

Nykaa வளர்ச்சி பாதையை தொட்டபோது ஃபால்குனி நாயர் மகள் தனது வேலையை விட்டுவிட்டு Nykaa உடன் இணைந்தார்.

Growth of Nykaa:

Nykaa impresive story

Nykaa, 2012-ல் அழகு சாதன பொருட்களை இணைய தளத்தில் விற்பனை மட்டும் செய்து வந்தது. முதல் வருட முடிவில் 100 ஆர்டர்களை விற்று முன்னேறியது.

2015-ம் ஆண்டு Nykka சொந்த அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்து விற்க தொடங்கியது. இன்று இந்தியாவின் ஒரு சிறந்த இ-காமர்ஸ் தலமாக உள்ளது.

இன்றைய நிலவரப்படி, Nykaa அதன் ஆன்லைன் தளத்திலும் 80+ தயாரிப்புகளும்  ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் 2 லட்சத்திற்கும் அதிகமான தயாரிப்புகளையும்  கொண்டுள்ளது.

Nykaa Founder Story:

2016-ல் “மிகவும் சக்திவாய்ந்த பெண் தொழில்முனைவோர்” பட்டியலில் ஃபால்குனி நாயர் இடம்பிடித்துள்ளார்.

2020-ல், Nykaa இந்தியாவின் முதல் யூனிகார்ன் ஆனது.

மாதத்திற்கு 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்களை Nykaa தற்போது பெற்றுவருகிறது.

Nykaa வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது. பிப்ரவரி 2023 நிலவரப்படி, இது 170க்கும் அதிகமான பொறியாளர்களைப் பணியமர்த்தியுள்ளது. 100 க்கும் அதிகமான ஊழியர்கள் சந்தைப்படுத்தலுக்கு பயன்படுத்துகின்றனர். அதுமட்டும் அல்லாமல் 60 சோசியல் மீடியா குழுக்களை பயன்படுத்துகின்றனர்.

Nykaa நிகர லாபம்:

Nykaa இன் மொத்த வருவாய் , மார்ச் 2023-ன் கணக்கின்படி 36.3% வளர்ச்சியடைந்து ரூ. 7.8 கோடியாக உள்ளது. 2027-ல் 300 கோடிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஒன்றரை வருடங்களில் 18 கிளைகளுடன் “காப்பி 2.0 ” உருவான கதை

இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> success story 

 

Advertisement