மொட்டை மாடியில் டியூஷன் எடுக்க ஆரம்பித்தவர் இன்று உலகின் முன்னணி நிறுவனமான BYJU’s நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தது எப்படி?

Advertisement

BYJU’s உருவான கதை

அனைவருக்கும் கனவு என்று ஒன்று இருக்கும் அது சொந்த தொழிலாக இருக்கலாம், தொழிலதிபராக மாற வேண்டும், ஆசிரியராக ஆக வேண்டும். கார் வாங்க வேண்டும் என பல வகைகளில் இருக்கலாம். ஆனால் அதனை அடைவதற்கு நாம் கனவை மட்டும் காணக்கூடாது அதனை அடைவதற்கு நம்மால் முடிந்த முயற்சிகளை எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். நமது திறமை எதில் உள்ளது என்பதனை அறிந்து அதற்கு தகுந்தவாறு நாம் செயல்பட்டால் நாமும் ஒரு நாள் பெரிய முதலாளியாக மாறிவிடலாம். எனக்கு கற்பிக்கும் திறன் மட்டும் தான் உள்ளது என்னால் எப்படி முதலாளி ஆக முடியும் என்று யோசிக்காமல் அதனை கொண்டும் முதலாளி ஆகலாம். ஆம், BYJU’s நிறுவனத்தின் தலைவர் நன்றாக கற்பிக்க கூடியவர் அந்த கற்பித்தல் திறம் அவரை இன்று ஒரு தொழில் அதிபராக மாறியுள்ளது. BYJU’s கற்றல் செயலியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், இன்று நாம் BYJU’s கற்றல் செயலியின் நிறுவனர் பைஜு ரவீந்திரனைப் பற்றியும் அதனை உருவாக்க அவர் கடந்து வந்த பாதையினை பற்றியும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

பைஜு ரவீந்திரன் ஆரம்ப கால வாழ்க்கை:

பைஜு ரவீந்திரன் 1980-ல் கேரளாவின் கடலோர கிராமமான அழிக்கோட்டில் மலையாளி குடும்பத்தில் பிறந்தார்.

பைஜு ரவீந்திரன் தந்தை ஓய்வு பெற்ற இயற்பியல் ஆசிரியர் தாய் ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் என்ற இடத்தில் மலையாளி குடும்பத்தில் பிறந்தார், என் தந்தையின் சகோதரி மற்றும் சகோதரர் மற்றும் அவர்களது குழந்தைகளும் வாழ்ந்த கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தார்.

அவரது பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். இவரது தந்தை பெயர் ரவீந்திரன். இவரது தாயார் பெயர் ஷோபனவல்லி. அவரது தந்தை ஒரு கம்யூனிஸ்ட் மற்றும் ஓய்வு பெற்ற இயற்பியல் ஆசிரியர் மற்றும் அவரது தாயார் ஓய்வு பெற்ற கணித ஆசிரியர்.

byju's story

பைஜு பெற்றோர் வேலை செய்த அரசு பள்ளியில் மலையாள வழியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.

கண்ணூர், காலிகட் (கோழிக்கோடு)பல்கலைக்கழகத்தில் இயந்திரவியலில் பொறியியல் பட்டம் பெற்றார்.

பின்னர் சிங்கப்பூரில் உள்ள ஒரு பன்னாட்டு கப்பல் நிறுவனத்தில் சேவை பொறியாளராக பணியில் சேர்ந்து உலகம் முழுவதும் பயணித்தார்.

BYJU’s-க்கான முதல் படி:

பணி விடுமுறையில் இந்திய திரும்பும் போது தனது நண்பர்களின் CAT நுழைவு தேர்வுக்கு உதவினார். நண்பர்களுடன் இணைந்து பொழுதுபோக்கிற்காக 2 முறை CAT தேர்வும் எழுதினார். இரண்டு முறையும் 100% மதிப்பெண் பெற்றார். அதன் மூலம் IIM-ல் MBA-க்கான நேர்காணலுக்கான அழைப்பை பெற்றார். ஆனால் பைஜு  MBA படிக்க விருப்பப்படவில்லை.

அவரின் திறமையை கண்ட நண்பர்கள் பைஜுவை போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பை தொடங்க அறிவுறுத்தினார். கற்றலிலும் கற்பித்தலிலும் அதிகம் ஆர்வம் கொண்ட பைஜு அதற்கான தனது வேலையை விட்டு இந்திய திரும்பினார்.

BYJU’s தொடக்கம்:

2005-ல் MBA சேர்க்கைக்கான மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பை நண்பரின் வீட்டின் மொட்டை மாடியில் தொடங்கினர். அவரின் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்தை பைஜு திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட் என்னும் பெயரில் 2011-ல் தொடங்கினர்.

மொட்டை மாடியில் ஆரம்பித்த அவரின் வகுப்புகளை 2 லட்சம் செலவில் வகுப்பறைக்கு மாற்றினார்.

2009-ல் ஆன்லைன் விடியோக்கள் மூலம் CAT மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார். 2009-ல் அவரிடம் மும்பை, டெல்லி, புனே, பெங்களூர் போன்ற மாநிலங்களில் இருந்து 20,000 க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்றனர்.

BYJU’s – The Learning App:

byju's success story

2015-ல் வகுப்பறை கல்வியில் இருந்து ஆன்லைன் கல்விக்கு சென்றார். 2015-ல் பள்ளி மாணவர்களுக்கான BYJU’s – The Learning App அறிமுகப்படுத்தினார். இந்த App உருவாக்க அவருக்கு 4 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. அதன் மூலம் CAT, NEET, JEE, GMAT, GRE போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க தொடங்கியுள்ளார்.

BYJU’s  முதலில் 4 வகுப்பு முதல் 12 வகுப்பு வரையான மாணவர்களுக்கு online பயிற்சி வழங்கும் தளமாக இருந்தது.

BYJU’s பயன்பாடு மாணவர்களிடம் அதிகரித்தது இதனால் அதன் வளர்ச்சியும் அதிகரித்தது.

BYJU’s தற்போது ஒரு மாணவர் குறைந்தபட்சம் 70 நிமிடங்கள் வரை பயன்படுத்துகின்றார்.

27 வயதில் 150 கோடிக்கு சொந்தக்காரர் ஆனார் டீ கடை ஆரம்பித்த அனுபவ் துபே..

கல்லூரிகள் நுழைவு தேர்வு மற்றும் சிவில் சேவைகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியுடன் , மழலையர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் கற்றல் வகுப்புகளை வழங்கும் BYJU’s , corona கால கட்டத்தினை தனக்கானதாக பயன்படுத்தி தனக்கான இடத்தை அடைந்தது.

BYJU’s Learning App மாணவர்களின் புரிதலுக்கு ஏற்ப திறமையான ஆசிரியர்கள், வீடியோகள், அனிமேஷன்கள் என மாணவர்களுக்கு எளிமையாக விளக்கமுயல்கிறது.

BYJU’s முதலீடு:

BYJU’s 2019-ல்  Tutor Vista மற்றும் EduRite என்ற ஆன்லைன் பயிற்சி பிராண்டையும் வாங்கியுள்ளது. BYJU’s இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக உள்ளது.

மோகன்தாஸ் பாய் மற்றும் ரஞ்சன் பாய் ஆகியோர் 2013-ல் BYJU’s ரூ. 50 கோடி (ரூ. முதலீடு செய்தனர். இந்த முதலீடு BYJU’s நிறுவனத்தின் முதல் முதலீடு ஆகும். 2016-ல் பரோபகார அமைப்பான சான் ஜுக்கர்பெர்க் லிருந்து BYJU’s $50 மில்லியனை முதலீடாக பெற்றது.

BYJU’s மதிப்பு:

BYJU’s ல் இன்று 35 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். மேலும் இது கிட்டத்தட்ட 3200 பணியாளர்களைக் கொண்டு இயங்குகிறது.

BYJU’s -ன் 2022 கணக்கின்படி, BYJU’s நிறுவனம் சுமார் ரூ. 1,83,000 கோடி ($22 பில்லியன்) வருவாய் பெற்றுள்ளது.

BYJU’s  FY22 இல் ரூ. 3,569 கோடியாக மொத்த வருமானம் ஈட்டியுள்ளது. 2021-ல்  மொத்த வருமானம் ரூ.1,552 கோடியாக இருந்தது, மேலும் EBITDA இழப்பு முந்தைய நிதியாண்டில் ரூ.2,406 கோடியிலிருந்து ரூ.2,253 கோடியாகக் குறைந்துள்ளது.

ஒன்றரை வருடங்களில் 18 கிளைகளுடன் “காப்பி 2.0 ” உருவான கதை

இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> success story 
Advertisement