தமிழ்நாட்டை மையமாக கொண்ட அமெரிக்கா நிறுவனத்தை நிறுவிய திருச்சிக்காரர்..

Advertisement

freshworks வெற்றிக்கதை 

நாம் அனைவருக்குள்ளும் எதோ ஒரு திறமை இருக்கும். அதனை சரியான நேரத்தில் கண்டுபிடித்து சரியான நேரத்தில் செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம். அது மாதிரிதான் நமக்கான தொழிலும் அதனை சரியான நேரத்தில் செயல்படுத்த தொடங்கினாள் வெற்றி நிச்சயம். நமது கனவை அடைய விட முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் போதும், நாம் வாழ்க்கையில் இழந்த அனைத்தையும் என் அதை விட அதிகமாகவும் நம்மால் அடைய முடியும். அந்த வகையில் இன்று தனது ஆரம்பகாலத்தில் அனைத்தையும் இழந்து கல்லூரி வளாகத்தில் தூங்கி தெருக்களில் பலூன் விற்று வாழ்கை நடத்தியவர் இன்று உலக அளவில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனத்தின் நிறுவனரான இருக்கும் கே.எம். மாமென் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

freshworks வெற்றிக்கதை :

கிரிஷ் மாத்ருபூதத்தின் ஆரம்பகால வாழ்க்கை:

தமிழ்நாட்டின் ஶ்ரீரங்கத்தில் உள்ள ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்தான் கிரிஷ் மாத்ருபூதம். பிள்ளைப் பருவத்திலேயே பெரும் கஷ்டத்தை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தனது ஏழு வயதில், கபெற்றோர்கள் பிரிந்ததால் தனது அத்தையின் வீட்டில் இருந்து கல்வி கற்றார்.

திருச்சியில் பள்ளி படிப்பை முடித்த க்ரிஷ், நல்ல மதிப்பெண் இருந்தும், பல பொருளாதார பிரச்சனைகளுக்கு நடுவே தஞ்சையில் உள்ள சாஸ்தரா கல்லூரியில் தனது பொறியியல் பட்டத்தை பெற்றார். பின்னர் சென்னையில் MBA பட்டம் பெற்றார். அவர் தனது MBA முடித்த தருணத்தில் java கற்றுத்தருவதில் சிறந்தவராக விளங்கினார். தனது முதல் பயணத்தை Cisco நிறுவனத்தில் trainer-ராக ஆரம்பித்தார்.

2001-ம் ஆண்டில் ZOHO நிறுவனத்தில் presales என்ஜினீயராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் தனது திறமையால் project Manager-ராக உயர்ந்தார். 2010-ம் ஆண்டு  vice president-ஆக உயர்ந்தார்.

தனக்குள் இருந்த தொழில்முனைவோர் வேட்கை அவரை சொந்தமாக ஒரு தொழிலை தொடங்க உந்தியது. அதன் விளைவாக ஷான் கிருஷ்ணசாமியை  இணை நிறுவனராக யுடன் இணைந்து  இந்த முயற்சியில் இணை நிறுவனராக சேர்த்துக் கொண்டு தனக்கான நிறுவனத்தை தொடங்கினர்.

ஷான் கிருஷ்ணசாமியும் ZOHO நிறுவனத்தின் ஊழியராக இருந்தவர் தான்.

freshworks தொடக்கம்:

இருவரும் இணைந்து october 2010-ல்  ZOHO நிறுவனத்தின் வேலையில் இருந்து விலகி டிசம்பர் 2010-ல் freshdesk நிறுவனத்தினை உருவாக்கினார். பின்னநாளில் freshdesk  நிறுவனம் freshworks என்று பெயர் மாற்றப்பட்டது. நிறுவனம் தொடங்கியபோது கிரிஷ் மாத்ருபூதம், ஷான் கிருஷ்ணசாமியும் சேர்த்து ஆறு பேர் கொண்ட குழு தான் freshworks-ன் ஊழியர்களாக இருந்தனர்.

சென்னையை மையமாக கொண்டு இயங்கிய ஒரு அமெரிக்க நிறுவனமாக freshworks அமைந்தது. தங்களின் வாடிக்கையாளர் சேவைக்காக அமெரிக்காவின் Payment system களை பயன்படுத்தியதால் இது ஒரு அமெரிக்க நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது.

freshworks வளர்ச்சி:

freshworks நிறுவனம் தொடங்கி 9 மாதங்களில் தங்களின் முதல் Project-டை வெளியிட்டனர். அது அவர்களுக்கு நல்ல தொடக்கத்தை தந்தது. இப்போது அவர்களிடம் 50,000 மேல் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

freshworks நிறுவனத்தின் ஆரம்பகட்ட வளர்ச்சி பல முதலீட்டர்களை அவர்கள் பக்கம் திரும்பார்க்க வைத்தது.

ஆக்சல் பார்ட்னர்ஸும், டைகர் குளோபல் நிறுவனமும் freshworks நிறுவனத்தின் முதலீட்டாளர்களாக மாறினார். இப்படி பல நிறுவனங்களிடம் இருந்து தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக 350 மில்லியனுக்கு மேல் முதலீட்டை பெற்றனர்.

இவ்வளவு வளர்ச்சியை பெற்ற அவர்கள் அப்படி என்ன விதமான Project-டை அறிமுகப்படுத்தினார் என்பது தான் அனைவரின் கேள்வியாக இருந்தது.

2019 ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டிய முதல் இந்திய SaaS நிறுவனம் Freshworks ஆகும்.

ஆம் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது, Saas (Software as a Service – SaaS) தொழில்நுட்பம்.

Saas தொழிநுட்பம்:

அதாவது Saas தொழில்நுட்பத்தில் ஒரு நிறுவனத்திற்கு தேவையான சாஃப்ட்வேரை தயாரித்து அதனை முழுத்தொகைக்கு அவர்களுக்கு வழங்காமல், அந்த நிறுவனம் அந்த சாஃப்ட்வேரை எந்த அளவுக்கு பயன்படுத்துகின்றனர் என்பதை பொறுத்து அவர்களிடம் மாதம் மாதம் அதற்கான தொகை வசூலிக்கப்படுவது.

இந்த தொழிலநுட்பத்தை பயன்படுத்திய முதல் இந்திய நிறுவனமாக Freshworks மாறியது. அதன் மூலம் பல நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ள சில நாடுகளில் அலுவலர்களை அமைத்தார். இப்போது அந்த நிறுவனத்தில் 4500 பேர் வேலைபார்க்கின்றனர்.

Freshworks இன்று உலக நாடுகள் திரும்பிப்பார்க்க கூடிய இடத்தில் உள்ளது. இந்த வளர்ச்சிக்கு அவரின் கனவும் அதற்கான அவரின் அர்ப்பணிப்புமே காரணம்.

நீங்களும் தொழில் தொடங்க நினைத்தால் இன்றே அதற்கான திட்டமிடலில் இறங்குகள். அதில் எந்த தடைகள் வந்தாலும் அதனை எதிர்த்து போராட தயாராகவும் இருங்கள். கண்டிப்பாக நீங்களும் ஒரு நாள் நீங்கள் எதிர்பார்த்த உயரத்தை அடையாளம்.

தனது 28 வயதில் இளம் தொழில்முனைவோர் விருதினை பெற்ற Swapnil kudale-லின் வெற்றிக்கதை…..

இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> success story

 

Advertisement