தனது 28 வயதில் இளம் தொழில்முனைவோர் விருதினை பெற்ற Swapnil kudale-லின் வெற்றிக்கதை…..

Advertisement

 Swapnil kudale-லின் Sky Power Industries உருவான கதை 

நம்மில் பாதிப்பேருக்கு தொழில் தொடங்க வேண்டும். யாரின் துணையும் இல்லாமல் சொந்த காலில் நிற்க வேண்டும். என்ற எண்ணம் இருக்கும். நமக்குள் ஒரு தொழிலை தொடங்குவதற்கான யோசனைகள் இருக்கும் ஆனால் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்ற தெளிவான கண்ணோட்டம் இருக்காது. ஆனால் இவை அனைத்திற்கும் தீர்வு எதோ ஒரு இடத்தில் இருக்கும் ஆனால் அதனை நாம் தேடுவதில்லை. அப்படி தனக்கு தொழில் செய்யவேண்டும் என்ற சிறு வயது எண்ணத்தை நனவாக்கி உள்ளார் ஸ்வப்னில் குடேல். தனது வெற்றி மூலம் கடின உழைப்பும் நம்பிக்கையும் போதும் நினைத்ததை அடைய என்னும் உறுதிமொழியோடு சந்தித்துள்ளார். அவரின் வெற்றி பாதையில் அவர் பெற்ற அனுபவங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

Sky Power Industries உருவான கதை:

ஸ்வப்னில் குடேல் ஆரம்ப கால வாழ்க்கை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் கீழ்-நடுத்தர குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தார் ஸ்வப்னில். தனது குடும்ப பொருளாதார அப்பால் பெரிய கனவுகளை கொண்டவராக தனது சிறுவயது முதலே இருந்துள்ளார். பொருளாதார நிலையில் கீழ்ப்படிந்து இருந்தாலும் ஸ்வப்னில் தந்தை தனது குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதில் திடமாக காணப்பட்டார். ஸ்வப்னில் தந்தை ஒரு சிறு வியாபாரத்தை நடத்திவந்தார். அதன் மூலம் வருமானத்தை பெறுவதற்கு தனது தந்தை எடுத்த முயற்சிகள் போராட்டங்கள் ஸ்வப்னில் குடேல் தொழில் தொடங்க வேண்டும் என்னும் ஆசைக்கு மூல காரணம். ஆனால் அவர் தனது தந்தையின் தொழிலை தொடர விரும்பவில்லை, தந்தை தொழிலை விட அதிக வருவாய் தரும் தொழிலை தொடங்க வேண்டும் என்பது மட்டுமே அவரின் குறிக்கோள்.

ஸ்வப்னில் குடேல் குடும்பத்தில் பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தாலும் மனம் தளராமல் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். 2015 ஆம் ஆண்டில் அவரது தந்தை வியாபாரம் மூடப்பட்டதால் குடும்பத்தின் நிதி நிலைமை மோசமடைந்தது. அந்த நிலையிலும் தொழில்முனைவோராக வேண்டும் என்னும் எண்ணம் மேலும் வலுவடைந்தது.

யூத் பிசினஸ் இன்டர்நேஷனல்:

அந்த காலகட்டத்தில் இந்தியாவின் யூத் பிசினஸ் இன்டர்நேஷனலின் அறக்கட்டளையான பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை (BYST) பற்றி உள்ளூர் செய்தித்தாள் விளம்பரம் மூலம் ஸ்வப்னில் தனது 18 வயதில் முதன்முதலில் அறிந்துக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக 2007 -ல் BYST உள்ளூர் அலுவலகத்திற்குச் செல்லத் தொடங்கினார் இன்று வரை BYST பட்டறையில் இன்று வரை ஒரு உறுப்பினராக உள்ளார். எந்த மாதிரியான தொழிலை தொடங்குவது என்ற யோசனை இல்லாவிட்டாலும் தொடர்ந்து அவர்கள் வழங்கும் ஆலோசனைகளை பெற்றார்.

BYST வழித்தடம் :

தனது கல்லூரி வாழ்க்கைக்கு மத்தியில் தொழில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்தார்.

கல்லூரிக்குப் பிறகு, அவர் ஒரு ரேடியேட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றத் தொடங்கினார், அங்கு அவர் வெல்டிங் செய்தார். இங்கு பணிபுரியும் போது தான், அவருக்கு இந்த வேலைப் பகுதி பிடித்திருந்தது என்பதை உணர்ந்தார்.

அந்த தொழிற்சாலை உரிமையாளர் தனது தொழிலை மூட முடிவு செய்தபோது, ​​ஸ்வப்னில் அதை தனக்கான தொழிலாக மாற்ற எண்ணினார்.

பல தேடலுக்கு பின்னல் 2016 ஆம் ஆண்டில், அவர் ரேடியேட்டர்களை உற்பத்தி செய்யும் வணிக யோசனையுடன் BYST ஐ அணுகினார். ரேடியேட்டர்கள் பற்றிய உள்ளூர் சந்தை ஆய்வு நடத்தி, தொழில் தொடங்குவதற்கான ஆவணங்களை சேகரித்து, தொழிலுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் பட்டியலைத் தொகுத்தார். உள்ளூர் பகுதியில் ரேடியேட்டர்கள் தயாரிப்பு பற்றிய  ஆராய்ச்சியின் போது, ​​ஸ்வாப்னில் ஒரு சில போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதைக் கண்டுபிடித்தார். அனால் ரேடியேட்டர்கள் தேவை சந்தையில் அதிகம் இருப்பதையும் உணர்ந்தார்.

அதனால் அழுத்தப்பட்ட எஃகு ரேடியேட்டர் (pressed steel radiators) களில் புதுமையை கொண்டுவர pressed steel radiators பற்றிய பல ஆய்வுகளை செய்தார்.

அதன் விளைவாக மின்மாற்றிகளை வேகமாக குளிர்விப்பது, குறைந்த சக்தியை பயன்படுத்துவது மற்றும் வழக்கமான ரேடியேட்டர்களை விட குறைந்த இடத்தை எடுத்துக்கொள்வது போன்ற சில விரும்பத்தக்க மாற்றங்களை தனது ரேடியேட்டர் உற்பத்தியில் புகுத்தினர்.

Sky Power Industries ஆரம்பம் :

entrepreneurs success stories swapnil kudale in tamil

ஸ்வாப்னில் தனது ரேடியேட்டர் உற்பத்தித் தொழிலான ஸ்கை பவர் இண்டஸ்ட்ரீஸை (Sky Power Industries) நிறுவினார். ஸ்மார்ட் ட்ரெயினிங் ஃபார் எண்டர்பிரைஸ் பிளானிங் (STEP) திட்டத்தில் பங்கேற்று, தனது வணிகத்தை வளர்க்க வங்கியில் BYST உதவியுடன் கடனைப் பெற்றார். அந்த கடன் உதவி மூலம் தனது தொழிலின் ஆரம்ப நிலையை ஆரம்பித்தார்.

வெற்றிகரமாக தனது தொழிலை வழிநடத்தினார். வெறும் 18 மாதங்களில் ஒரு கார் வாங்கியதுடன் தனது தொழில் சிறிது லாபம் பெற்றார். அந்த லாபத்தை மீண்டும் தொழிலில் முதலீடு செய்தார்.

உற்பத்தியில் புதுமை:

ஸ்கை பவர் இண்டஸ்ட்ரீஸ், தனது அடுத்தகட்ட முயற்சியாக, டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் ரெக்டிஃபையர்களுக்கான ரேடியேட்டர்களை உற்பத்தியை தொடங்கியது.

தனது அடுத்தடுத்த முயற்சிலும் மலிவான விலை மற்றும் செயல்திறன் மிக்க கண்டுபிடுப்புகளை வழங்கிவருகிறார்.

ஸ்கை பவர் தயாரிக்கும் ரேடியேட்டர்கள், வெப்ப உற்பத்தியை குறைத்து, மின் சிக்கனத்தை ஏற்படுத்தி, மின் நுகர்வைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பங்களிக்கின்றன.

பாரம்பரியமாக ரேடியேட்டர் உற்பத்தியாளர்கள் ரேடியேட்டர் துடுப்புகளை குழாயின் உள்ளே இருந்து வெல்டிங் செய்யும் போது, ​​ஸ்கை பவர் குழாய்க்கு வெளியே இருந்து துடுப்பை வெல்ட் செய்கிறது. இந்த கண்டுபிடிப்பு மின்மாற்றிகளை வேகமாக குளிர்விக்கிறது, வழக்கமான ரேடியேட்டர்களுடன் ஒப்பிடும்போது குறைந்த சக்தியை பயன்படுத்துகிறது மற்றும் குறைந்த இடத்தை எடுக்கும். தயாரிப்பு அதன் செயல்திறனை இழக்காமல் அதிக செலவு குறைந்ததாகிறது. இந்த குழாய்கள் வெளியில் இருப்பதால் பழுதுபார்ப்பதும் எளிதாக இருக்கும், இதனால் செயல்முறை எளிமையானது, குறைந்த நேரத்தை எடுத்துக்கொள்வது மற்றும் மலிவானது.

வளர்ச்சி மற்றும் வருமானம்:

குறைந்த விலையில் சிறந்த தரத்தை வழங்குவதன் மூலம் இந்த செலவின நன்மையை வாடிக்கையாளருக்கு அனுப்பிய ஸ்வப்னில் கடந்த நான்கு ஆண்டுகளில் புனே, மும்பை, கோவா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் வாடிக்கையாளர் தளத்தை உருவாக்கியுள்ளது. அவருக்கு இப்போது சுமார் 70 வாடிக்கையாளர்கள் உள்ளனர். 2017 முதல், அவரது லாபம் 35 லட்சத்தில் இருந்து 1.4 கோடியாக அதிகரித்துள்ளது.  தற்போது, ​​அவர் இரண்டு வகையான ரேடியேட்டர்களை உற்பத்தி செய்து வருகிறார்.

ஸ்வப்னில் குடேல் 2017 இல் INR 3.6 மில்லியனாக இருந்த தனது வணிகத்தை 2021 இல் INR 14 மில்லியனாக உயர்த்தியுள்ளார்.

வேலைவாய்ப்பு:

எனது கவனம் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக மாறுவது மட்டும்மல்ல எனது சமூகத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவையும் வேலைவாய்ப்பையும் வழங்குவதாகும். என்னும் சொல்லுக்கு இணங்க பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கிவருகிறார்.

16 நபர்கள் இந்த தொழில் மூலம் நேரடியாக வருமானத்தை பெறுகின்றனர். 60 க்கும் அதிகானவர்கள் மறைமுகமாக வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.

ஸ்வப்னில் குடேல் இலக்கு:

அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது வணிகத்தை 70% வளர்ச்சியடையச் செய்து, 2022க்குள் 100% மின்மயமாக்கல் என்ற இந்திய அரசாங்கத்தின் இலக்குக்குப் பங்களிப்பதை அவரின் இலக்காகக் கொண்டுள்ளார்.

விருது:

entrepreneurs success stories swapnil kudale in tamil

ஸ்வப்னில் குடேல் தன்னுடைய 28 வயதில் YBI இன் உலகளாவிய இளைஞர் தொழில்முனைவோர் உச்சி மாநாட்டில் ஆண்டின் சிறந்த இளம் தொழில்முனைவோர் விருதினை பெற்றவர்.

இளம் தொழில்முனைவோருக்கு அளிக்கும் ஆலோசனை: 

“உங்கள் தொழில் யோசனையை நம்புங்கள் மற்றும் அதை செயல்படுத்த அதிகபட்ச முயற்சியை மேற்கொள்ளுங்கள். தடைகள் வெற்றிக்கான படிக்கட்டுகள். பந்தயத்தில் வெற்றி பெறுவதற்கு நிலையான முயற்சி, அர்ப்பணிப்பு, தன்னம்பிக்கை மற்றும் போராடும் குணம் தேவை. வாழ்க்கை உங்களை 100 முறை வீழ்த்தலாம், எனவே 101 முறை எழுந்து நிற்க தைரியம் வேண்டும்.” என்னும் எழுச்சியோடு இளைய தலைமுறையினருக்கு ஊக்கமாக உள்ளார்.

தனது சிறு வயது கணவனை தொழிலதிபராக வேண்டும் என்பதை தனது கடின உழைப்பாலும் பல முயற்சிகளாலும் செய்து காட்டியவர் ஸ்வப்னில். அவரின் வாழ்க்கை தொழில் தொடங்க வேண்டும் என நினைக்கும் பலருக்கும் யூகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நீங்களும் ஒரு தொழிமுனைவோர் ஆக வேண்டும் என்றால்  இன்றே உங்களுக்கான பாதையை நோக்கி பயணம் செய்யுங்கள். உங்களின் வெற்றி உங்கள் உழைப்பில் உள்ளது.

வெறும் ரூ.1000 மூலதனத்தில் ஆரம்பித்து இன்று ரூ.30 கோடி சாம்ராஜ்யத்தை பிரேம் கணபதி தோசா பிளாசாவில் ஈட்டியது எப்படி

இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> success story
Advertisement