25 வயதில் ஃபேஷன் உலகில் தொழில்முனைவோர்களாக சாதித்த தன்வி மாலிக் மற்றும் ஷிவானி போடார்

Advertisement

ஃபேஷன் உலகம் 

இந்தியாவில் பல இளைஞர்கள் வேலை தேடுபவராக இல்லாமல் வேலை வழங்குபவர்களாக மாறியுள்ளனர். இன்று பல இந்திய தொழில்முனைவோர்  உருவாக்கியுள்ளது. அவர்களின் வெற்றிக்கதைகள் இன்னும் பல இளைஞர்களுக்கு தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க உத்வேகத்தை அளிக்கின்றன. பலர் தங்கள் வேலையை விட்டுவிட்டு தங்கள் கல்விப் பின்னணியுடன் தொடர்பில்லாத துறைகளில் தொழில் தொடங்குகின்றனர் அவர்களில் பலர் எட்டமுடியாத உயரத்தையும் அடைந்துள்ளனர். கடந்த சகாப்தத்தில் இந்தியாவில் பல தொழில்முனைவோரை உருவாக்கியுள்ளது, அவர்களில் பலர் முதல் தலைமுறை தொழில்முனைவோர் எளிய பின்னணி மற்றும் சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளும் இளம் தொழில் முனைவோரை ஆதரிப்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதில் இந்திய அரசின் ஸ்டார்ட்அப் இந்தியா மிக முக்கியமானதாகும். இந்த திட்டத்தால் பயன் அடைந்தோர் அதிகம். நீங்களும் அவர்களில் ஒருவராக மாற வேண்டுமா, அவர்களின் முயற்சிகள், அவர்கள் கடந்துவந்த தடைகள் எல்லாம் தெரிந்தால் உங்களாலும் ஒரு சொந்த தொழிலைத் தொடங்க முடியும் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.வாருங்கள் இன்று பேஷன் உலகில் தனக்கு என்று ஒரு முத்திரை பதித்த FabAlley.com மற்றும் houseofindya.com தளத்தினை நிறுவனத்தை பற்றியும் தான் நிறுவனர்கள் தன்வி மாலிக் மற்றும் ஷிவானி போடார் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

25 வயதில் தங்களுக்கான தொழிலை உருவாக்கிய பெண்கள்:

ஆரம்பகால வாழ்கை :

தன்வி மாலிக் ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்.

தனது இளங்கலை பொருளாதார படிப்பை டெல்லி லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் முடித்தார். பின்னர் அகமதாபாத்தில் MICA கல்லூரியில் பிராண்ட் மேனேஜ்மென்ட்டில் MBA பட்டம் பெற்றார்.

கல்லூரி படிப்புக்கு பின்னர், பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் மீதான ஆர்வம் அவரை நியூயார்க் வரை அழைத்து சென்றது.

நியூயார்க்கில் உலகின் உயர்தர கடிகார நிறுவனமான டைட்டனில் பிராண்ட் & தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்தார்.

நியூயார்க்கில் பணிபுரியும் போது தோழியாக இருந்த வெண்டஸ் கேபிட்டலில் முன்னாள் முதலீட்டு வங்கியாளராக ஷிவானியுடன் நட்பு உண்டாகிறது. அப்போது 21 முதல் 30 வரையிலான பெண்கள் அதிகஅளவில் மிகக் குறைந்த விலையில் மற்றும் விலையுயர்ந்த ஃபேஷன் ஷாப்பிங் செய்ய விரும்புவதை அறிந்து அதனை தொழிலாக மாற்ற விருப்பியுள்ளனர்.

புதிய முயற்சி:

உலகளவில் மற்றும் உள்ளூர் பிராண்டுகள் அதிகம் இருக்கும் ஆன்லைன் தளத்தில் தங்களுக்கும் ஒரு இடத்தை பிடிக்க, தொழில்முனைவோராக தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க தங்களின் வேலைகளை துறந்து இதில் முழுமூச்சாக இறங்கியுள்ளனர்.

இந்திய பெண்களை மையப்படுத்தி, இந்திய உடல் வகைக்கு ஏற்றவாறு இந்தியாவின் உலகளாவிய நவநாகரீக ஃபேஷன் பிராண்டை உருவாக்க எண்ணினார்.

FabAlley.com தொடக்கம்:

success story of a woman entrepreneur

கனவின் தொடக்கமாக 2012-ம் ஆண்டு 25 வயதுடைய தன்வி மாலிக் மற்றும் ஷிவானி போடார் ஆகியோரால் FabAlley என்னும் ஆன்லைன் தளத்தில் ஃபேஷன் ஆக்சஸரீஸ் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. 2013-ம் ஆண்டு தொடக்கத்தில் 100க்கும் அதிகமான இளம் பேஷன் ஆர்வலர்களை பணியமர்த்தி ஆடைவகைகளை உருவாக்கி, தங்களுக்கான பிராண்டுகளை விற்பனை செய்ய தொடங்கினர்.

FabAlley தளம் பேஷன் உடைகளும் Indya தளத்தில் இந்தியாவின் பாரம்பரிய உடைகள் இன்றைய கலாச்சாரத்திற்கு என்றவாறு வடிவமைத்து விற்பனை செய்கின்றனர்.

FabAlley.com இப்போது இந்தியாவின் ஒரு பிராண்டாக மாறிவிட்டது. இதில் 2000க்கும் அதிகமான வடிவங்களில் ஆடைகளும் 500 க்கும் அதிகமான ஃபேஷன் ஆக்சஸரீஸ் கிடைக்கிறது.

வாடிக்கையாளர்கள்:

houseofindya

2013-ல் FabAlley.com தளத்தில் ஒரு நாளைக்கு சுமார் 1,000 பார்வையாளர்களை பெற்றுள்ளது. ஆனால் சராசரியாக ஒரு நாளைக்கு 20,000 முதல் 40,000 பார்வையாளர்களை கொண்டுயுள்ளது. FabAlley.com மற்றும் houseofindya.com இணையதளத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

முதலீடு மற்றும் வருமானம்:

FabAlley.com, இந்திய ஏஞ்சல் நெட்வொர்க்கிலிருந்து (IAN) உறுப்பினர்களான துஷார் சிங் மற்றும் மோகித் கோயல் தலைமையில் நிதி வழங்கப்பட்டது. 2013 இல் இந்திய ஏஞ்சல் நெட்வொர்க்கிலிருந்து நிதி திரட்டிய FabAlley.com.

கடந்த ஆண்டு 15 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

27 வயதில் 150 கோடிக்கு சொந்தக்காரர் ஆனார் டீ கடை ஆரம்பித்த அனுபவ் துபே..

இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> success story

 

Advertisement