அனுபவ் துபே வெற்றிக்கதை
மனிதனாக பிறந்த அனைவருக்கும் பல கனவுகள் இருக்கும். அதிலும் பலரின் கனவு பொருளாதாரத்தில் சிறந்து நிலையை அடைவது மட்டும் தான். ஆம் மனிதனின் அதிகப்படியான ஆசையாக இருப்பது சமுதாயத்தில் சிறந்த பொருளாதார நிலை. அந்த நிலையை அடைய நமக்கு ஒரு சிறந்த வேலை தேவைப்படுகிறது. நமக்கு என்ற நிரந்தர வருமானம் வேலை இருந்தாலும் நமது கனவு சுய தொழிலாக இருந்தால் என்னதான் வருமானம் நிறைவு இருந்தாலும் அது நமக்கு போதாது. வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் பல இளைஞர்களுக்கு சுய தொழில் என்பது கனவு. அதை அடைய எவ்வளவு உயரம் வேண்டும் ஆனாலும் பயணிக்க தயாராக இருப்பார்கள். இன்றைய பொதுநலம் வெற்றியாளர்கள் பகுதியில் தனது 27 வயதில் 150 கோடிக்கு சொந்தக்காரரான அனுபவ் துபே மற்றும் ஆனந்த் நாயக் இவர்களின் வெற்றிக்கதையை பார்க்கலாம்.
அனுபவ் துபே ஆரம்பகால வாழ்க்கை:
அனுபவ் துபே மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 1996 இல் பிறந்தவர்.
அனுபவ் துபே தந்தை ஒரு சராசரி ரியல் எஸ்டேட் தொழிலதிபர். பள்ளி படிப்பை ரேவாவில் படித்த அனுபவ் துபே, தனது கல்லூரி படிப்புக்காக இந்தூருக்கு சென்று பி.காம் படிப்பை 2014-ல் முடித்துள்ளார்.
தனது கல்லூரி காலங்களில் இரண்டாம் தரம் போன்களை வாங்கி நல்ல விலைக்கு விற்று அதில் வருமானத்தை தனது செலவுகளுக்கு பயன்படுத்தியுள்ளார்.
பெற்றோர்களின் ஆசைக்காக IAS அதிகாரிகான பயிற்சியை டெல்லியில் மேற்கொண்டுள்ளார். அதில் அவர் தோல்வி அடைந்து பின்னர் CA தேர்விலும் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளார்.
தொடர் தோல்விகளால் எவ்வாறு சம்பாதிப்பது என்பதை பற்றி யோசித்து கொண்டிருந்த தருணத்தில் அனுபவ் துபே கல்லூரி கால நண்பர் ஆனந்த் நாயக் உடனான கலந்துரையாடலில் இருவரும் இணைந்து ஒரு தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
அனுபவ் துபே தொழில் இறங்க இருப்பதாக கூறியபோது குடும்பத்தினர் அவரது தந்தையின் தொழிலான ரியல் எஸ்டேட் தொழில் உதவ கூறினார். ஆனால் அனுபவ் துபே அதனை மறுத்து தனக்கான ஒரு தொழிலை உருவாக்க யோசித்தார்.
அதன் விளைவாக ஆனந்த் நாயக் மற்றும் அனுபவ் துபே ஆகியோர் இணைத்து இந்தூரில் கூட்டாக 3 லட்சம் செலவில் டீ கடை திறந்தார்கள்.
சாய் சுட்டா பார் உதயம்:
2016-ல் நீண்ட தேடலுக்கு பின்னர் ஒரு பெண்கள் விடுதிக்கு அருகே சாய் சுட்டா பார் தொடங்க பட்டது. கடைக்குதேவையான மேசை, நாற்காலி போன்ற பொருட்களை இரண்டாம் தர பொருட்களை வாங்கி பயன்டுத்தியுள்ளனர்.
பெயர்ப் பலகையை அவர்களின் கைகள் மூலம் எழுதி ஒரு வித்தியாசத்தை காட்டியுள்ளனர்.
முதலில் மக்களை கவர இலவச டீ வழங்கியுள்ளனர். ஆனால் அதில் பல இடையூறுகள் ஏற்பட்டதால் அதனை நிறுத்தி புதிய உத்திகளை யோசித்தனர்.
மற்ற டீ கடைகளுடன் ஒப்பிடுகையில் இவர்களின் கடை வித்தியாசப்பட மண் குவளையில் டீ வழங்கி வந்துள்ளனர்.
சாய் சுட்டா பார்ரில் புகைப்பிடிப்பதற்கு தடை வித்தித்துள்ளனர்.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர்.
சாய் சுட்டா பார்ரில் அனைத்து சூழல்களிலும் மண் குவளைகளில் சோக்கோ டீ, ஜிங்கர் டீ, துளசி டீ, பான் டீ, ஏலக்காய் டீ, இளயாச்சி டீ, புதினா டீ போன்ற 20க்கும் அதிகமான வகைகளை தயாரித்து வழங்கியுள்ளனர்.
டீ மட்டும் அல்லாமல் மேகி, பாஸ்தா, சாண்ட்விச் மற்றும் பீட்சாக்களையும் விற்க தொடங்கியுள்ளனர்.
தங்கள் சாய் சுட்டா பார் ஒன்றுடன் நிற்காமல் தொடர வேண்டும் என்பதற்காக முறையாக பதிவு செய்து தங்களது கிளைகளை 6 மாதங்களில் 2 இடங்களில் தொடங்கியுள்ளார்.
ஒரு வருட முடிவில் மும்பையில் தனது 4 கிளையை ஆரம்பித்துள்ளார்.
இப்போது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 150 கிளைகள் உள்ளது. சாய் சுட்டா பார்ரின் பயன்படுத்த படும் மண் குவளைகள் நேரடியாக குயவர்களிடம் இருந்து வாங்க படுகிறது இதன் மூலம் 1500 குடும்பங்கள் நேரடியாக பயனடைகின்றனர்.
சாய் சுட்டா பார் ஆண்டு வருமானம் 2022-ல் 100 கோடி தொட்டது.
150+ ஃபிரான்சைஸ் அவுட்லெட்டுகளின் மூலம் தனது சாய் சுட்டா பாரினை மக்களிடம் எடுத்து சென்றுள்ளார்.
வரும் காலங்களில் டீ உடன் அசைவ உணவுகள் வழங்க திட்டமிட்டுள்ளனர்.
2021 ம் ஆண்டு UNYCC விருதினை சாய் சுட்டா பார் பெற்றுள்ளது.
சாய் சுட்டா பாரின் தற்போதைய நிகர மதிப்பு 165 கோடி ஆகும்.
சாதிக்க துடிக்கும் உங்களுக்கு கண்டிபாக இந்த பயன்னுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம். உங்களுக்கான பாதையை கண்டுபிடியுங்கள் வெற்றி அடையுங்கள்.
ஒன்றரை வருடங்களில் 18 கிளைகளுடன் “காப்பி 2.0 ” உருவான கதை
இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | success story |