MRF success story in tamil
நாம் அனைவருக்குள்ளும் எதோ ஒரு திறமை இருக்கும். அதனை சரியான நேரத்தில் கண்டுபிடித்து சரியான நேரத்தில் செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம். அது மாதிரிதான் நமக்கான தொழிலும் அதனை சரியான நேரத்தில் செயல்படுத்த தொடங்கினாள் வெற்றி நிச்சயம். நமது கனவை அடைய விட முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் போதும், நாம் வாழ்க்கையில் இழந்த அனைத்தையும் என் அதை விட அதிகமாகவும் நம்மால் அடைய முடியும். அந்த வகையில் இன்று தனது ஆரம்பகாலத்தில் அனைத்தையும் இழந்து கல்லூரி வளாகத்தில் தூங்கி தெருக்களில் பலூன் விற்று வாழ்கை நடத்தியவர் இன்று உலக அளவில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனத்தின் நிறுவனரான இருக்கும் கே.எம். மாமென் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
MRF Success Story:
கே.எம். மாமென், 1922 நவம்பர் 28ஆம் தேதி, கேரளா மாநிலத்தில் பிறந்தவர். கே.எம் மாமென் தந்தை வங்கி மற்றும் செய்தித்தாள் நிறுவனங்களை வைத்திருந்தார். சுதந்திரத்திற்கு முன்னர், திவான் பகதூர், கே.எம் மாமென் மாப்பிள்ளையின் தந்தைக்கு இரண்டு ஆண்டுச் சிறை தண்டனை விதித்தது மட்டுமல்லாமல் அவரின் குடும்பச் சொத்துக்களை பறிமுதல் செய்து கொண்டார். இதனால் அவர்கள் அனைத்தையும் இழந்து தவித்தனர். இதனால் அவர்கள் தங்களை வீடுகளையும் இழந்தனர். கே.எம். மாமென், தனது கல்லூரி வளாகத்தில் இரவு தங்கி கொண்டார்.
தனது கல்லூரி படிப்பை முடித்த பின்னர், தன்னுடைய மனைவியுடன் இணைந்து, சிறிய கொட்டகையில் பலூன் பொம்மை உற்பத்தி செய்து, அவற்றை ஒரு பையில் எடுத்துச் சென்று தெருக்களில் வைத்து அவற்றை விற்பனை செய்தார்.
அவரின் தொழில் திறமை வாடிக்கையாளர்களை ஈர்க்க தொடங்கியது. அதுவே அவரின் வெற்றிக்கு வித்திட்டது. அந்த வெற்றி அவரை முன்னோக்கி செல்ல தூண்டியது.
கே.எம். மாமெனின், உறவினர் ஒருவர் டயர் சார்ந்த வியாபாரம் செய்து வந்தார். அவருக்குத் தேவையான ரப்பர் பொருட்களை வெளிநாட்டு டயர் நிறுவனங்கள் வழங்கி வந்தன. அதில் அவருக்கு உதவியாக இணைந்தார்.
டயர்களின் ரப்பர் பற்றி அறிந்திருந்த மாமென், Tread rubberடயரை தானே தயாரிக்க முடிவு செய்து, சிறிதாக தயாரிக்க தொடங்கினர் அதுவே பின்னாளில் அவரின் கடும் உழைப்பால் MRF நிறுவனமாக மாறியது.
மிக விரைவில் tread rubber உருவாக்கும் ஒரே இந்திய நிறுவனமாக MRF மாறியது. MRF நிறுவனம் பல சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிட்டது. MRF போட்டியின் காரணமாக பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை கைவிடும் நிலையும் ஏற்பட்டது. தரமான பொருட்கள் உருவாக்கி சந்தையில் 50% பங்குகளுடன் முன்னணி இடத்தைப் பிடித்தது.
சீரான வளர்ச்சிக்கு அடைந்த கே.எம். மாமென், தனது வியாபாரத்தை விரிவுபடுத்த எண்ணி சொந்த டயர்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தினர்.
அவர் தொடங்கிய காலத்தில், இந்திய ஆட்டோமொபைல் டயர் சந்தையில் Dunlop Tyres, Firestone Tires மற்றும் Goodyear Tyre போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்திய வந்தது.
அவர்களுக்கு போட்டியாக டயர் தயாரிப்பு ஆலையை 1961-இல் அன்றைய பிரதமர் பண்டிட் நேரு தொடங்கி வைத்தார். தொடங்கிய அதே வருடத்தில் IPO வெளியிட்டு பங்கு சந்தையில் வெற்றிபெற்றது.
அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த பொருட்கள் இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக அமையவில்லை. இது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக மாறியது. இந்திய நிறுவனத்தால் தரமான டயர்களை தயாரிக்க முடியாது என்று செய்திகள் பரவியது.
ஆனால் அதனையும் கடந்து பல ஏற்ற இறக்கங்களுக்கு பின்னால் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது.
ஒரு மனிதர் தலைக்கு மேலே MRF டயரை தூக்கி பிடித்திருப்பது போன்ற லோகோவை கற்பனை மூலம் உருவாக்கியது இவர் தான். இது உலக புகழ்பெற்ற விளம்பரமாக விளங்கியது.
தனது விடா முயற்சியாலும் உழைப்பாலும் Dunlop Tyres, Firestone Tires மற்றும் Goodyear Tyre நிறுவனங்களையும் வீழ்த்தி முன்னிலை பெற்றது.
இந்திய சந்தையில் தற்போது 24% பங்குகளையும், சர்வதேச சந்தையில் 12% பங்குகளையும் கொண்டு, MRF 65-க்கும் அதிகமான நாடுகளில் தனது பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
அன்று சிறிய அளவிலான கொட்டகையில் துவங்கி இன்று உலகின் மிகப்பெரிய டயர் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
அவரின் வெற்றிக்கு விடா முயற்சியும் கடின உழைப்புமே காரணமாக அமைந்தது. நீங்களும் அவரை போல் சாதிக்க நினைத்தால் இன்றில் இருந்து உங்களுக்கான கனவை நோக்கி பயணிக்க தொடங்குங்கள்..
தனது 28 வயதில் இளம் தொழில்முனைவோர் விருதினை பெற்ற Swapnil kudale-லின் வெற்றிக்கதை…..
இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | success story |