Axis Bank Home Loan Details in Tamil
நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத வங்கிகளில் Axis வங்கியும் ஒன்று. இந்த வங்கி ஆனது UTI வங்கியாக 1993-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி நிறுவப்பட்டது. இத்தகைய Axis வங்கி ஆனது மகாராஷ்டிரா மற்றும் மும்பையினை தலைமையிடமாக கொண்ட ஒரு வங்கியாக இருக்கிறது. மேலும் இந்த வங்கி 4,903 கிளைகளையும் மற்றும் நீட்டிப்பு கவுண்டர்களையும், 15,953 ATM மற்றும் பணத்தை மறுசுழற்சி செய்யும் Network வசதியினையும் கொண்டு இருப்பதாக இந்த ஆண்டு மார்ச் மாத 31-ஆம் தேடி கணக்கின் படி தோராயமாக சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட வங்கியின் தற்போதைய CEO ஆக அமிதாப் சவுத்ரி அவர்கள் பணியில் இருக்கிறார் என்பதும் முக்கியமான ஒன்று.
இவ்வளவு தூரம் தகவல்களை தெரிந்துக்கொண்ட Axis வங்கியில் Personal Loan, Home Loan, Gold Loan, Educational Loan மற்றும் Car Loan பல வகையான லோன்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் Axis வங்கியில் உள்ள லோன்களை மட்டும் தெரிந்துக்கொள்ளாமல், அதற்காக வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் அசல் தொகை எவ்வளவு என்பதையும் தெரிந்து இருக்க வேண்டும். எனவே Axis வங்கியில் 2 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் எவ்வளவு EMI, வட்டி மற்றும் அசல் என்ற முழு விவரத்தையும் பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Axis Bank Home Loan 2 Lakh EMI Calculator 5 Years in Tamil:
கடன் தொகை:
Axis வங்கியில் கடன் தொகை ஆனது அடிப்படையான உங்களது வருமானத்தை வைத்து தான் வழங்கப்படுகிறது. ஆனாலும் கூட 1 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரையிலும் அளிக்கப்படுகிறது.
வட்டி விகிதம்%:
உங்களது கடனுக்கான வட்டி விகிதமாக 8.70% முதல் 13.30% வரை வட்டி விகிதமாக வழங்கப்படுகிறது.
கடன் காலம்:
கடனாக நீங்கள் வாங்கிய தொகையினை திருப்பி செலுத்துவதற்கான கடன் காலமாக அதிபட்சமாக 30 வருடங்கள் வரையிலும் அளிக்கப்படுகிறது.
BOB பேங்கில் 3 லட்சம் வீட்டுக் கடனுக்கான மாதம் EMI மற்றும் மொத்த வட்டி எவ்வளவு
ஆக்ஸிஸ் பேங்க் 2 லட்சம் வீட்டுக்கு கடனுக்கான மொத்த வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு.?
முழு விளக்கம்:
கடன் தொகை: 2,00,000 ரூபாய்
வட்டி விகிதம்%: 8.70%
கடன் காலம்: 5 வருடம்
மாத EMI: 4,123 ரூபாய்
மொத்த வட்டி எவ்வளவு: 47,357 ரூபாய்
அசல் எவ்வளவு: 2,47,357 ரூபாய்
குறிப்பு: நீங்கள் வாங்கிய கடன் தொகையை பொறுத்து வட்டி தொகை மற்றும் EMI தொகை மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |