BOB Bank 2 Lakh Business Loan Interest Rate
இன்றைய காலகட்டத்தில் கடன் வாங்குவது என்பது எளிதான ஒன்று. நாம் என்னதான் உழைத்து சம்பாதித்தாலும் அதிகப்படியான தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்கும் சூழ்நிலை நேரிடுகிறது. கடன் வாங்குவது என்பது நாம் அன்றாடம் செய்யும் செயல்களில் ஒன்றாகி மாறிவருகிறது. அதாவது, ஒரு இடத்தில் வாங்கிய கடனை கால அளவு முடிவதற்குள் அடைப்பதற்கு மற்றொரு இடத்தில கடன் வாங்கிகிறோம். இதேபோல் கடன் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. எனவே, அனைவரும் கடன் வாங்கும்போது அக்கடனை பற்றிய சில விவரங்களை தெரிந்துகொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே, அந்த வகையில் இப்பதிவில், BOB வங்கியில் 2 லட்சம் பிசினெஸ் லோன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
BOB வங்கி என்பது குஜராத்தில் உள்ள வதோதராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு இந்திய பொதுத்துறை வங்கியாகும். அதுமட்டுமில்லாமல், இவ்வங்கி உலகளாவிய அளவில் இது இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாகவும் செயல்படுகிறது. சரி விஷயத்துக்கு வருவோம்.. BOB வங்கியில் வழங்கப்படும் பிசினெஸ் லோன் பற்றிய சில விவரங்களை எடுத்துக்காட்டுடன் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
BOB Bank 2 Lakh Business Loan Details in Tamil:
வட்டி விகிதம்:
BOB வங்கியில் பிசினெஸ் லோனிற்கான வட்டி விகிதமாக 7.25% முதல் 13.50% வரை நபரின் தகுதிக்கேற்ப அளிக்கப்படுகிறது.
கடன் தொகை:
BOB வங்கியில் ஒருவருடைய தகுதியின் அளவிற்கேற்றவாறு குறைந்தபட்சம் 2 லட்சம் முதல் அதிகபட்சம் 10 கோடி வரையிலான அளவில் கடன் தொகை வழங்கப்படுகிறது.
கடன் காலம்:
BOB வங்கியில் பிசினஸ் லோனிற்கான அதிகபட்ச கால அளவாக 60 மாதம் அதாவது 5 வருடம் அளிக்கப்படுகிறது.
5 லட்சம் Personal Loan பெற்றால் மாதம் எவ்வளவு வட்டி மற்றும் EMI கட்ட வேண்டி இருக்கும் தெரியுமா
எடுத்துக்காட்டு:
உதாரணமாக, நீங்கள் 5 வருட கால அளவை தேர்வு செய்து BOB வங்கியில் 2 லட்சம் பிசினெஸ் லோன் பெறுகிறீர்கள் என்றால் 7.25% அளிக்கப்படுகிறது என்று கணக்கில் கொள்வோம்.
இந்த வட்டித்தொகையை வைத்து கணக்கிட்டால் நீங்கள் மாத EMI ஆக 3,983 ரூபாய் செலுத்த வர வேண்டும்.
இந்த 5 வருடத்தில் உங்களுக்கான மொத்த வட்டி தொகை 39,032 ரூபாய் ஆகும்.
ஆகவே, நீங்கள் வாங்கிய 2 லட்சம் மற்றும் அதற்கான வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து மொத்தமாக 2,39,032 ரூபாய் வேண்டும்.
குறிப்பு: நீங்கள் வாங்கும் கடன் தொகையை பொறுத்து வட்டி தொகை மற்றும் EMI மாறுபடும்.
HDFC வங்கியில் 10.5 லட்சம் Personal Loan பெற்றால் 5 வருடத்தில் கட்ட வேண்டிய வட்டித்தொகை எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |