300 நாளில் Rs.98,327/- வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

Advertisement

Indian Bank Spl fixed deposit interest rates 2023

வணக்கம் நண்பர்களே.. இன்று நாம் பார்க்க இருப்பது இந்தியன் வங்கியில் வழங்கப்படும் பிக்சட் டெபாசிட் ஸ்கீமிற்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது. எவ்வளவு நாட்கள் முதலீடு செய்ய வேண்டும். எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு தொகை நமக்கு கிடைக்கும் என்பது குறித்த முழுமையான தகவலக்கை பார்க்கலாம். மேலும் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது பொதுநலம்.காம் பதிவை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். மேலும் நமது பதிவை தொடர்ந்து பார்வையிடுங்கள். சரி வாங்க இந்திய வங்கியின் ஸ்பெஷல் டெபாசிட் திட்டத்தை பற்றி அறியலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்தியன் வங்கி பிக்சட் டெபாசிட்:

இந்த டெபாசிட் ஸ்கீமின் பெயர் IND Supreme fd 300 நாட்கள் ஆகும். இதற்கான டெபாசிட் பீரியட் 300 நாட்கள் மட்டுமே. இந்த திட்டத்தில் குறிந்தபட்சம் 5000 ரூபாய் முதலீடு செய்து ஓபன் செய்துகொள்ளலாம். அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் ஆகும்.

இத்தகைய ஸ்பெஷல் பிக்சட் டெபிசிட் ஸ்கீம் வரும் டிசம்பர் 31, 2023 அன்று வரை தான் செயல்பாட்டில் இருக்கும், ஆக அதற்குள் கணக்கை ஓபன் செய்ய விரும்புபவர்கள் ஓபன் செய்துகொள்ளலாம்.

60 வயதிற்கு மேல் இருப்பவருக்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும். அதேபோல் 80 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு இன்னும் கூடுதல் வட்டி கிடைக்கும்.

எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது?

  • பொது மக்களுக்கு 7.05%
  • 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 7.55%
  • 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 7.80%

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?

முதலீட்டு தொகை பொது மக்கள்  60 வயது ஆகியவற்றுக்கு  80 வயது ஆகியவருக்கு 
5000 295 317 327
25000 1478 1585 1638
50000 2956 3170 3277
200000 11824 12681 13110
400000 23648 25362 26220
800000 47297 50724 52441
1000000 59122 63405 65551
1500000 88683 95108 98327

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கனரா வங்கியில் 8.5 லட்சம் வீட்டு கடனுக்கான சலுகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement