பிளவுஸ் கட்டிங் செய்வது எப்படி? | Blouse Cutting in Tamil
Blouse Cutting in Tamil: ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான விஷயங்களில் அதிக ஆர்வம் இருக்கும் அவற்றில் ஒன்று தான் தையல் பயிற்சி. தையல் என்பது ஒரு அருமையான தொழிலாகும் அனைத்து வகை காலங்களிலும் லாபம் தரக்கூடிய ஒரு சிறந்த கை தொழில் ஆகும். பெண்கள் வீட்டில் இருந்தபடி சம்பாதிக்க தையல் பயிற்சி சிறந்த வழிகளை அமைத்து தருகின்றது என்பதற்காக பலரும் தையல் பயிற்சியை கற்றுக்கொள்ள அதிக ஆர்வமாக இருக்கின்றன அந்த வகையில் இன்றைய பதிவில் பிளவுஸ் கட்டிங் செய்வது எப்படி? என்பதை பற்றி எளிமையான முறையில் தெரிந்து கொள்வோம்.
அளவு பிளவுஸ் கட்டிங் செய்வது எப்படி?
தேவைப்படும் பொருட்கள்:
- அளவு பிளவுஸ்
- ஒரு மீட்டர் பிளவுஸ் பிட்
- கத்தரிக்கோல்
- சாக்பீஸ்
- இஞ்ச் டேப்
பிளவுஸ் வெட்டும் முறை:
பிளவுஸ் கட்டிங் ஸ்டேப்: 1
தங்களுடைய அளவு பிளவுசை சுருக்கம் இல்லாமல் நன்றாக அயனிங் செய்து வைத்து கொள்ளுங்கள்.
பிளவுஸ் கட்டிங் ஸ்டேப்: 2
ஒரு மீட்டர் பிளவுஸ் பிட்டை எடுத்து நீளவாக்கில் அதாவது கரை உள்ள பகுதியை ஒன்றாக மடித்து நேராக விரித்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் இரண்டு மடிப்பாக வரும்.
குறிப்பு:-
மடிப்பின் OPEN பகுதி வலது கை பக்கமும், மடிப்பின் CLOSING பகுதி இடது கை பக்கமும் இருக்க வேண்டும். இல்லையென்றால் கட் செய்யும் போது துணி தனித்தனியாக கட் ஆகிவிடும். ஆகவே பிளவுஸ் கட் செய்யும் துணியை சரியாக மடித்து கீழே விரித்து போட்டு கொள்ளுங்கள்.
பிளவுஸ் கட்டிங் ஸ்டேப்: 3
பிறகு படத்தில் காட்டியுள்ளது போல் இஞ்ச் டேப்பால் ஒரு இஞ்ச் அளவு விட்டு ஒரு கோடு போட்டுக்கொள்ளுங்கள். (பின்புற இடுப்பு பகுதியை மடித்து தைப்பதற்கு)
பிளவுஸ் கட்டிங் ஸ்டேப்: 4
அடுத்ததாக தங்களுடைய அளவு பிளவுசின் பின் பக்கத்தை மேல் படத்தில் காட்டியுள்ளது போல் மடித்து பிளவுசை வைத்து சாக்பீஸால் பிளவுசின் இடுப்பு பகுதியை மார்க் செய்து கொள்ளுங்கள்.
பிளவுஸ் கட்டிங் ஸ்டேப்: 5
அடுத்து அளவு சட்டையின் அக்குள் பகுதியில் உள்ள தையலுக்கு நேராக மார்க் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு மார்க் செய்த கோட்டிற்கு மேல் 1/2 இஞ்ச் அளவு விட்டு இன்னொரு மார்க் செய்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு மேல் படத்தில் காட்டியுள்ளது போல் பிளவுசின் அளவை மார்க் செய்யவும்.
பிளவுஸ் கட்டிங் ஸ்டேப்: 6
அடுத்ததாக அளவு பிளவுசின் தோல் பட்டை மற்றும் கை பகுதியை இணைக்கும் தையலுக்கு நேராக ஒரு மார்க் பண்ணிக்கொள்ளுங்கள்.
பின் மார்க் செய்த இடத்தில் இருந்து 1/2 இஞ்ச் அளவு விட்டு மார்க் செய்ய வேண்டும். மேல் படத்தில் காட்டியுள்ளது போல்.
பிளவுஸ் கட்டிங் ஸ்டேப்: 7
ஸ்டேப் 6-யில் கூறப்பட்டுள்ளது போல் தோல் பட்டையின் அதாவது முன் மற்றும் பின் கழுத்தை இணைக்கும் பகுதியையும் மார்க் செய்து நேராக கோடு போட்டுக்கொள்ளுங்கள்.
பிளவுஸ் கட்டிங் ஸ்டேப்: 8
பிறகு பின் கழுத்தின் ஓரத்தில் மார்க் செய்ய வேண்டும், பிறகு மார்க் செய்த இடத்தில் இருந்து 1/2 இஞ்ச் அளவு விட்டு மேலே மார்க் செய்து பின் கழுத்து வளைவு தங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அந்த அளவிற்கு வளைவாக பின் கழுத்தை வரைந்து கொள்ளுங்கள்.
குறிப்பு:
ஜாக்கெட் அளவை மார்க் செய்யும் போது, ஜாக்கெட் சுருக்கம் இல்லாமல் சரியாக மடித்து அளவை குறிக்க வேண்டும்.
பிளவுஸ் வெட்ட இருக்கும் துணியில் அளவு பிளவுசை சரியாக மடித்து செட் செய்த பிறகு, அந்த ஜாக்கெட் அளவை முழுமையாக மார்க் செய்த பிறகுதான் மார்க் செய்த துணியில் இருந்து அளவு பிளவுஸை எடுக்க வேண்டும்.
நியூ மாடல் பிளவுஸ் டிசைன் 2021 |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |