APJ அப்துல் கலாமிற்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் எது தெரியுமா…?

Advertisement

அப்துல் கலாமிற்கு மிகவும் பிடித்த நூல்

வணக்கம் நண்பர்களே..! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான புத்தகங்கள் படிப்பது பிடிக்கும். அதிலும் நாம் யாரையாவது ஒருவரை முன் மாதிரியாக வைத்து இருந்தால் அவர்களுக்கு எந்த மாதிரியான புத்தகங்கள் பிடிக்கும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த வரிசையில் வளரும் குழந்தைகள் முதல் வளர்ந்த இளைஞர்கள் வரை அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருப்பவர் APJ அப்துல் காலம் அவர்கள். அத்தகைய அப்துல் காலம் நிறைய புத்தகங்கள் எழுதினாலும் அவருக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் என்று தனியாக இருக்கின்றன. அந்த புத்தகங்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக இன்றைய பதிவில் படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ தொழில் செய்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்..!

APJ Abdul kalam Favorite Books in Tamil:

APJ அப்துல் கலாமிற்கு மிகவும் பிடித்த 3 புத்தகங்கள் என்னென்ன எதனால் அந்த புத்தகங்கள் பிடித்தது என்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Light From Many Lamps Book:

 

APJ அப்துல் கலாமிற்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் முதலாவதாக சொல்லப்படுவது Light From Many Lamps Book ஆகும். இந்த புத்தகத்தை Lillian Watson என்பவர் பல்வேறு வகையான கதைகள், கவிதைகள், கட்டுரைகள் அனைத்தையும் உள்ளடக்கி 1951 ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தை 1953 ஆம் ஆண்டு அப்துல் காலம் அவர்கள் படிக்கும் போது அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இருந்தது என்று கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவர் வருத்தத்தில் இருக்கும் போது எல்லாம் இந்த புத்தகத்தை படிப்பதாகவும் சொல்லியுள்ளார். தனக்குள் உணர்வுபூர்வமான ஒரு தாக்கத்தையும் இந்த புத்தகம் ஏற்படுத்தியதால் மிகவும் பிடித்தது என்று அப்துல் காலம் அவர் கூறியுள்ளார்.

திருக்குறள்:

 

இரண்டாவதாக APJ அப்துல் கலாமிற்கு தமிழில் பிடித்த புத்தகம் என்றால் அது திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் ஆகும். ஒரு மனிதன் வாழ்வதற்கு தேவையான அனைத்து விதமான கருத்துக்களையும் ஒன்றே முக்கால் அடியில் உணர்த்திய ஒரு சிறப்பு வாய்ந்த புத்தகமாக இருப்பதால் தன்னை மிகவும் ஈர்த்தது என்று அப்துல் காலம் அவர் கூறியுள்ளார்.

இதில் 1330 திருக்குறள் இருந்தாலும் காலம் அவர்களுக்கு மிகவும் பிடித்த திருக்குறள் என்று ஒன்று இருக்கிறது.

“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
  தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.”

இந்த குறளில் எண்ணுவதெல்லம் உயர்வு என்ற ஒரே வார்த்தையில் சொல்லப்பட்டுள்ள பொருள் அவர் மனதில் மிகவும் இடம்பெற்றுள்ள குறளாக மாறிவிட்டது என்று கூறியிருக்கிறார்.

Man The Unknown Book:

man the unknown book in tamil

அப்துல் கலாமி அவர்களுக்கு மூன்றாவதாக Man The Unknown Book என்ற புத்தகம்  மிகவும் பிடித்தது என்று சொல்லியுள்ளார். இந்த Alexis Carrel என்பவர் எழுதியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் Alexis Carrel ஒரு டாக்டராக பணியாற்றியவர்.

மனிதர்கள் நம்முடைய உடல் உறுப்புகளை பற்றி தெரிந்துகொள்வதற்கு இந்த புத்தகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதால் காலம் அவர்களுக்கு இந்த புத்தகம் பிடித்து விட்டது.

அதுபோல மனிதர்கள் உடலில் நோய் வந்தால் அதிலிருந்து எளிதில் விடுபடுவது எப்படி என்றும் இதில் தெளிவாக Alexis Carrel கூறியுள்ளார். அதனால் டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியம் உள்ளவர்கள் இந்த புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும் என்றும் காலம் கூறியுள்ளார்.

இறப்பதற்கு முன் படிக்க வேண்டிய 8 தமிழ் புத்தகங்கள்..!

மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.  BOOKS 

 

 

Advertisement