Vivekananda Books in Tamil
பொதுவாக நம் தமிழ் மொழி எப்படி சிறந்த மொழியாக உள்ளதோ அதேபோல நம் தமிழ் மொழியில் இருக்கும் புத்தகங்களும் சிறப்பு பெற்றவையாக உள்ளன. தமிழ் மொழியில் நாம் படிக்க படிக்க திகட்டாத புத்தகங்கள் எத்தனையோ உள்ளன. ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவன் முன்னேறி செல்வதற்கு ஒரு பாடமாக புத்தகங்கள் உள்ளன. அதுபோல நாம் இந்த பதிவின் வாயிலாக பல புத்தகங்கள் பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று சுவாமி விவேகானந்தர் எழுதிய சிறந்த புத்தகங்களை பற்றி தான் காணப்போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
சுவாமி விவேகானந்தரின் சிறந்த புத்தகங்கள்:
எனது சிந்தனைகள்:
விவேகானந்தர் எழுதிய புத்தகங்களில் இதுவும் ஓன்று. இந்த புத்தகத்தை நாம் எத்தனை முறை படித்தாலும் சலிக்காத வரிகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
கர்ம யோகம்:
எதிர்பார்ப்புகளில் சிக்கிக் கொள்ளாமல் எப்படி வேலை செய்வது என்பது பற்றிய புத்தகம் தான் இது. சுவாமி விவேகானந்தர், வேதாந்தத்தின் போதனைகளை அன்றாட வாழ்க்கையின் நடைமுறைப் பயன்பாடு என்று கர்ம யோகம் புத்தகத்தில் விளக்குகிறார்.
சாகித்திய அகாதமி விருது பெற்ற 5 தலை சிறந்த தமிழ் புத்தகங்கள் |
கடவுளை தேடி:
சுவாமி விவேகானந்தர் எழுதிய கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புதான் இந்த புத்தகம். கடவுள் எங்கே? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் அமைதி எங்கே? அதை எப்படி அடைவது? அழகான பாடல் வரிகள் வடிவில் இந்த புத்தகத்தில் வழங்கப்படுகின்றன.
எனது பயணம்:
சுவாமி விவேகானந்தர் தனது இரண்டாவது கடல் பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவத்தை வரலாற்றுத் தகவல்களுடனும் நுட்பமான நகைச்சுவையுடனும் இந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> கவிஞர் வாலி எழுதிய புத்தகங்கள்
கடிதங்கள்:
சுவாமி விவேகானந்தர் எழுதிய “இதை நான் சொல்ல விரும்புகிறேன், இந்த கடிதத்தை யார் படிக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் என் சக்தியைப் பெறுவார்கள், என்னை நம்புங்கள், யாரோ ஒருவர் என் கைகளைப் பிடித்து இதையெல்லாம் எழுத வைக்கிறார்” சுவாமிஜியின் 159 கடிதங்கள் இந்த புத்தகத்தில் உள்ளன.
ஞான யோகம்:
இந்த ஞானயோகம் மிகவும் அறிவார்ந்த, தத்துவம் மற்றும் அதே நேரத்தில் மிகவும் கடினமானது. ஞானயோகத்தின் சாரத்தை எளிய நடையில் முன்வைத்துள்ளார். அவரது 16 சொற்பொழிவுகள் மற்றும் துறவறத்தின் நோக்கத்தை சித்தரிக்கும் ‘சன்னியாசின் பாடல்’ இங்கே சேர்க்கப்பட்டுள்ளது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்களின் பொது அறிவை வளர்த்துக் கொள்ள இந்த புத்தகங்களை படியுங்கள்
மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். | BOOKS |