சிறந்த வரலாற்று நாவல்கள் | Varalatru Novel in Tamil
புத்தகம் படிப்பது மற்றும் புத்தகம் எழுதுவது என்பது ஒரு சிலருடைய பழக்கமாக இருக்கும். ஆனால் புத்தகங்கள் எழுதுவதை விட புத்தகம் படிப்பதில் தான் சிலருக்கு அதிகமாக ஆர்வம் இருக்கும். அப்படி நாம் படிக்கும் புத்தங்கள் மூலம் நமக்கு தெரியாத நிறைய செய்திகளை கற்று கொள்ள முடியும். அதுமட்டும் இல்லாமல் நமது நினைவாற்றலையும் மற்றும் இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தையும் நமக்குள் வரச்செய்கிறது. அதனால் இன்றைய பதிவில் தமிழில் 10 சிறந்த வரலாற்று நாவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புத்தகங்களும் நமக்கு புது விதமான அனுபவங்களையும் மற்றும் புத்தகம் படிக்க பிடிக்காதவர்களுக்கு கூட புத்தகம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நமக்குள் வரச்செய்யும். சரி வாருங்கள் அது என்னென்ன புத்தகங்கள் என்று தெரிந்துக்கொள்வோம்.
Top 10 Historical Novels in Tamil | தமிழ் வரலாற்று நாவல்கள்:
பொன்னியின் செல்வன் நாவல்:
பொன்னியின் செல்வன் நாவலிற்கு என்று ஒரு தனி இடம் கொடுக்கும் அளவிற்கு சிறப்பினை பெற்றுள்ளது. இந்த நாவல் முற்றிலும் சோழ வம்சத்தை பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த நாவலானது புத்தமாக எழுதப்பட்டு 1990 முதல் 1995– ஆம் ஆண்டு வரை இது கல்கி வார இதழில் தொடர் கதையாகவும் வந்தது.
காந்தளூர் வசந்தகுமாரன் கதை:
காந்தளூர் வசந்தகுமாரன் கதை புத்தகமானது 1995– ஆம் ஆண்டு சுஜாதா ரங்கராஜன் எழுதிய சிறந்த வரலாற்று நாவல் புத்தகமாகும். இந்த புத்தகத்தில் சோழர், சேரர் மற்றும் பாண்டியர் ஆகிய மூன்று நாட்டு மன்னர்களுக்கும் இடையே நடந்த போரினை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
நந்திபுரத்து நாயகி நாவல்:
இந்த புத்தகம் விக்ரமன் எழுதிய சிறந்த வரலாற்று நாவல் புத்தகமாக கருதப்படுகிறது. பொன்னியின் செல்வன் கதையின் அடுத்த நிலையாக இந்த நந்திபுரத்து நாயகி நாவல் இடம் பெற்றிருக்கிறது. இந்த புத்தகம் முழுவதும் சோழ மன்னர் ராஜராஜ சோழனின் சிறப்பினை உணர்த்தும் வகையில் இருக்கிறது.
காவிரி மைந்தன் நாவல்:
காவிரி மைந்தன் நாவலானது பொன்னியின் செல்வன் கதையின் மற்றொரு விளக்கமாகவும் மற்றும் அதனையுடைய மற்றொரு தொடக்கமாகவும் அமைந்துள்ளது. இந்த நாவலினை அனுஷா வெங்கடேஷ் என்பவர் எழுதியுள்ளார்.
பாண்டிமாதேவி நாவல்:
இந்த நாவலானது பாண்டியர்களின் சிறப்பினை முழுவதும் கூறும் வகையில் நா. பார்த்தசாரதியால் எழுதப்பட்டுள்ளது. பாண்டியர்கள் பற்றி ஆழமாக ஆராய்ந்து எழுதப்பட்ட சிறப்பு மிக்க ஒரு நாவலாகும்.
வெற்றித் திருநகர் நாவல்:
வெற்றித் திருநகர் நாவலானது சிறப்பு வாய்ந்து வரலாற்று நால்வல்களில் ஒன்றாகும். இந்த நாவலானாது விஜயநகர பேரரசை பற்றியும் அதில் உள்ள சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றை பற்றியும் கூறியிருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் விஜயநரகம் என்றால் வெற்றி நரகம் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாவலினை அகிலன் எழுதியுள்ளார்.
பார்த்திபன் கனவு நாவல்:
வரலாற்று சிறப்புமிக்க நாவலில் பார்த்திபன் கனவும் ஒன்று. இந்த புத்தகம் பல்லவ மன்னனா பார்த்திபனின் கனவை மையமாக கொண்டு எழுத்துப்பட்டுள்ளது.
உடையார் நாவல்:
இதுவும் சோழ மன்னன் ராஜராஜ சோழனை பற்றி ஒரு நாவலாகவும். இந்த நாவலில் தஞ்சை பெரிய கோவில் பற்றியும், ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய மூவரை பற்றிய சிறப்பினை பெருமைப்படுத்தி கூறியிருக்கிறது. இத்தகைய உடையார் நாவலானது வரலாற்று சிறப்புமிக்க நாவலாகும். இந்த உடையார் நாவலினை பாலகுமாரன் எழுதியுள்ளார்.
வேங்கையின் மைந்தன் நாவல்:
வேங்கையின் மைந்தன் நாவலினை அகிலன் எழுதியுள்ளார். இந்த நாவலிற்காக சாகித்ய அகாடமி விருதையும் பெற்றார். இது ராஜேந்திர சோழனின் ஆட்சியை பற்றி மட்டும் நோக்கமாக கொண்டு இந்த நாவால் இடம் பெற்றிருக்கிறது.
சிவகாமியின் சபதம் நாவல்:
இந்த நாவல் பல்லவ வம்சம் பற்றியும் அதில் கற்பனையாக சொல்லப்பட்டுள்ள சிவகாமி பற்றியும் எழுதப்பட்டுள்ளது. இதுவும் வரலாற்று மிக்க சிறந்த நாவலாகும்.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 இறப்பதற்கு முன் படிக்க வேண்டிய 8 தமிழ் புத்தகங்கள்..!
இதுபோன்ற புத்தகங்களை பற்றி தெரிந்துகொள்ள | books |