How to Create E Commerce Website in Tamil
தொழில், கை நிறைய வருமானம் மற்றும் லாபம் என இதுபோன்ற சொற்களை காதினால் கேட்கும் போதும் சரி, படங்களாக பார்க்கும் போதும் சரி ஒரு புத்துணர்ச்சி நிறைந்த பூரிப்பானது நமக்குள் தோன்றி விடும். ஏனென்றால் இந்த காலத்தில் பெரும்பாலும் இத்தகைய நிலை தான் ட்ரெண்டிங்காக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் வருங்காலத்தில் பின் தொடரக்கூடிய ஒன்றாகவும் இருக்க போகிறது என்பது சாத்தியமான ஒரு கருத்து.
அந்த வகையில் பெரும்பாலும் ஒரு தொழிலை தற்போது வளம் வந்து கொண்டிருக்கும் ஆன்லைனில் நமக்கான ஒரு கடையினை எப்படி உருவாக்குவது என்று தான் சிந்திக்கிறார்கள். மேலும் கல்வி தகுதி என்பது இதற்காக தடையில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்து இருக்கிறது. இத்தகைய முறையில் சிந்திப்பது எல்லாம் சரியாக இருந்தாலும் கூட அதற்கான வழிமுறைகள் என்ன, நம்முடைய கடைக்கான இணையத்தளத்தை திறக்க யாரிடம் கேட்டு தெரிந்துகொள்வது என எப்படி எல்லாம் நினைத்து இருப்பீர்கள்.
அது மட்டும் இல்லாமல் ஆன்லைன் கடை என்பதால் இதற்கு செலவு அதிகமாக ஆகுமோ என்ற சந்தேகமும் இருக்கும். இவ்வாறு உங்களுக்கு எழும் ஒவ்வொரு கேள்விகளுக்கான பதிலையும் இதில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
ஆன்லைன் கடை எதற்காக பயன்படுகிறது:
ஆன்லைன் கடை என்பது நம்மிடம் உள்ள பொருளை உலகம் முழுவதும் தெரியப்படுத்தி வாடிக்கையாளரின் விருப்பப்படி வாங்க செய்கிறது. அதன் மூலம் சிறிய அளவினை லாபத்தை பெரிய அளவில் மாற்றுவதற்கான ஒரு பாலம் போல் பயன்படுகிறது.
மேலும் சிறிய இடம் கூட இல்லாமல் வீட்டில் இருந்தே பொருட்களை விற்பனை செய்யும் மக்களும் ஆன்லைன் கடை மூலம் தங்களை தானே தொழில் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் உயர்த்தி கொள்வதற்கு ஆன்லைன் கடை பயன்படுகிறது.
ஆன்லைன் கடையின் நன்மைகள் என்னென்ன:
சாதாரணமாக ஒரு இடத்தில் பெரிய அளவில் இருக்கும் கடையுடன் ஒப்பிட்டு பார்த்தாலும் கூட ஆன்லைன் கடையின் நன்மைகள் கையை விட்டு என்ன முடியாத அளவிலேயே இருக்கிறது.
- ஆன்லைன் கடை 24 மணி நேரமும் இருக்கும்.
- நீங்கள் வாங்கும் பொருட்களுக்கான விலை பற்றி பேச்சு வார்த்தை நடத்த வேண்டியது இல்லை.
- உலகமெங்கிலும் உங்களது கடை தானாகவே மக்களை சென்றடைந்து விடும்.
- 100,1000 என இவ்வாறு இல்லாமல் பில்லியன், மில்லியன் என இத்தகைய அளவிலான வாடிக்கையாளர்களை வந்தடைய செய்யும்.
- கடைக்கு என்று இடம் வாங்கோவோ, அதற்கு செலவு செய்யவோ வேண்டாம்.
- பொருட்களுக்கான தகவல், வாடிக்கையாளரின் எண்ணிக்கை, அதில் புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர் என அனைத்து தவலையும் இந்த தளத்தின் வாயிலாக நீங்கள் பெறலாம்.
இவை அனைத்தும் ஒவ்வொரு எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் ஒவ்வொரு ஆன்லைன் கடை உரிமையாளருக்கும் வந்து சேரும் என்பது மற்றொரு முக்கிய நன்மையாகவும் அடங்குகிறது.
தேவையான ஆவணங்கள்:
- தொலைபேசி எண்
- GST (Regular)
- E-mail id
ஆனால் மற்ற Amazon, Meesho, Flipkart-ல் GST என்பது கட்டாயமான ஒன்று. அதேபோல் நீங்கள் ஆண்டுக்கு ரூபாய் 10 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்யும் போது இந்த தளங்களுக்கும் GST முக்கியம். மேலும் டிரேட் லைசென்ஸும் முக்கியமான ஒன்று.
How to Make an Online Store in Tamil :
இப்போது ஆன்லைனில் கடை திறப்பதனால் என்னென்ன பயன்கள் என்பதை பார்த்தோம், அடுத்து எந்த தளங்களை பயன் படுத்தி நம்முடைய Online Store திறக்கலாம் என்பதை கிழே கொடுத்துளேன். அதில் என்னென்ன வெப்சைட் (Ecommerce Websites) இருக்கிறது என்று சுருக்காக 5-ஐ பார்க்கலாம் வாங்க.
- Shopify.com/in
- Mydukkan.io
- Ztorespot.com
- Wix.com
- Instamojo.com
Shopify:
- 1994 ரூபாய் செலுத்தி கடையை திறக்கலாம்.
- 1 ஆன்லைன் கடை திறக்கப்படும்.
- 1000 பொருட்கள் வரை இதில் நீங்கள் விற்றுக்கொள்ளலாம்.
Mydukkan.io:
- முதல் கட்டண தொகை மாதம் 1994 ரூபாய்.
- 1 ஆன்லைன் கடை திறக்கலாம்.
Ztorespot.com:
- முதல் 3 மாதத்திற்கு இலவச கடையினை திறந்து பயன் அடைந்துகொள்ளலாம்.
- 1 ஆன்லைன் கடை திறக்கலாம்.
- கடைக்கான டேட்டாக்கள் அனைத்தினையும் A ot Z வரை என அனைத்தும் கிடைக்கும்.
Wix.com:
- மாதம் 199 ரூபாய் செலுத்தி உங்களுக்கான கடையை திறக்கலாம்.
- உங்களுக்கான சேமிப்பு இடமாக 2 ஜிபி அளிக்கப்படுகிறது.
Instamojo.com:
- முதல் தவணையாக இதில் 0 ரூபாய் செலவில் கடையை திறக்கலாம். அந்த கடையினை 1 வருடம் வரை பயன்படுத்தி கொள்ளலாம்.
- ஆனால் பொருள் பரிமாற்ற கட்டணமாக 5% + ₹3 என்ற முறையில் செலுத்த வேண்டும்.
- உங்களிடம் இருக்கும் அனைத்து பொருளையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.
5-ல் எது நமக்கு சிறந்தது.?
மேலே சொல்லப்பட்டுள்ள தளங்கள் அனைத்தும் ஆன்லைன் கடை திறப்பதற்கான தளமாக இருந்தாலும் கூட உங்களுக்கு எது ஏற்றதாக இருக்கிறது என்பதை யோசித்து இனிதே ஆன்லைன் கடையை திறங்கள்.
மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |