Best Car Under 6 Lakhs in India
நாம் அனைவருமே ஒவ்வொன்றுக்கும் பட்ஜெட் போட்டு வாழ வேண்டும் என்ற வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். அதாவது, ஒரு ட்ரெஸ் எடுப்பதாக இருந்தாலும் சரி, வீட்டிற்கு ஒரு பொருள் வாங்க வேண்டியதாக இருந்தாலும் சரி, ஏன் ஸ்மார்ட் போன் வாங்குவதாக இருந்தாலும் சரி, அதற்கென்று ஒரு பட்ஜெட் போட்டு, நம் பட்ஜெட் விலைக்கு ஏற்ற பொருளை தேடி வாங்க நினைப்போம். முக்கியமாக பெரும்பாலானோர்க்கு கார் வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கும். இதற்ககாக ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்தும் வைத்திருப்பார்கள். எனவே, அவர்களுக்கு பயனுள்ள வகையில் 6 லட்சம் பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் கார்கள் பற்றிய விவரங்களை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Under 6 Lakhs Cars in India 2023:
Tata Punch:
இந்த டாடா பஞ்ச் காரின் ஆரம்ப விலை ரூ.6 லட்சம் ஆகும். மேலும், இதன் டாப் மாடல் விலை ரூ. 10.10 லட்சம் ரூபாய் ஆகும். இது 4 வேரியண்ட்களில் உள்ளது. அவை, Pure, Adventure, Accomplished மற்றும் Creative ஆகும்.
அதுமட்டுமில்லமல் இந்த கார் ஆனது, 8 நிறங்களில் வாங்க கிடைக்கிறது. முக்கிமாக இந்த காரில் 5 நபர்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டாடா பஞ்ச் ஆனது, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் (88PS/115Nm) மூலம் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, இந்த கார் லிட்டருக்கு 20.09 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கிறது.
Tata Tiago:
இந்த காரின் ஆரம்ப விலை ரூ,5 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். மேலும், இதன் டாப் மாடல் விலை ரூ.8.15 லட்சம் ஆகும். Tata Tiago கார் XE, XM, XT(O), XT, XZ மற்றும் XZ+ ஆகிய ஆறு வேரியண்ட்களில் உள்ளது.
முக்கியமாக, இந்த கார் 5 நிறங்களில் வாங்க கிடைக்கிறது. மேலும், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது.
முக்கியமாக இந்த கார் ஆனது, லிட்டருக்கு 19.0 கிலோ மீட்டர் முதல் 19.01 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கிறது.
இந்திய சாலைக்கு ஏற்ற EV கார் TATA Nexon EV நமது பட்ஜெட் விலையில்
Maruti Swift:
இந்த காரின் ஆரம்ப விலை ரூ.5 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். மேலும், இதன் டாப் மாடல் ரூ.9.03 லட்சம் ஆகும். Maruti Swift கார் ஆனது, LXi, VXi, ZXi மற்றும் ZXi+ ஆகிய 4 வேரியண்ட்களில் உள்ளது.
இந்த காரில், ஸ்விஃப்ட் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்ட 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது.
முக்கியமாக இந்த கார் ஆனது, லிட்டருக்கு 22.38 கிலோ மீட்டர் முதல் 22.56 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கிறது.
Hyundai Grand i10 Nios:
இந்த காரின் ஆரம்ப விலை ரூ.5.84 லட்சம் ஆகும். மேலும், இதன் டாப் மாடல் விலை ரூ.8.51 லட்சம் ஆகும். இந்த கார் ஆனது Era, Magna, Sportz Executive, Sportz மற்றும் Asta ஆகிய 5 வேரியண்ட்களில் உள்ளது.
இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் (83PS/114Nm) மூலம் இயக்கப்படுகிறது.
37 லிட்டர் வரை பெட்ரோல் அளவு கொண்ட ஹூண்டாய் நிறுவனத்தின் கார் பற்றிய விவரம்.
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |