நம்ம பட்ஜெட்டுக்கு ஏற்ற Hyundai Venue கார்.. மைலேஜ் எவ்வளவு கொடுக்கும் தெரியுமா.?

Hyundai Venue Specifications 2023 in Tamil

Hyundai Venue 2023 Model in Tamil

காலத்தின் மாற்றத்திற்கு தகுந்தவாறு நம் பயன்படுத்தும் பொருட்களும் மாறிகொண்டே இருகின்றன. சைக்கிள், பைக் வாங்க வேண்டும் என்று நினைத்து பணம் சேமித்த காலம் போய் இப்போது கார் வாங்க வேண்டும் என்ற காலம் வந்துவிட்டது. கார் வாங்குறது என்ன சாதாரண விஷயம்னு நெஞ்சியா.. அப்படினு பலபேர் கூற கேட்டிருப்போம். அந்த அளவிற்கு காரின் விலை அதிகமாக உள்ளது. இருந்தாலும் கார் வாங்க வேண்டும் என்ற கனவிற்காக பலபேர் பணம் சேமித்து கொண்டு இருப்பார்கள். பணத்தை சேமித்தால் மட்டும் போதுமா..?நல்ல தரமான காரினை பற்றிய விவரங்களையும் தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா..? எனவே இப்பதிவில் அனைவரும் விரும்பி வாங்கக்கூடிய Hyundai Venue காரின் விலை, மைலேஜ் மற்றும் அவற்றை பற்றிய சில விவரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Hyundai Venue Specifications 2023 in Tamil:

Hyundai Venue 2023 Model in Tamil

விலை:

Hyundai Venue காரின் ஆரம்ப விலை ரூ.7.89 லட்சம் ஆகும். மேலும், இதன் டாப் மடலின் விலை ரூ.13.48 லட்சம் ஆகும்.

வேரியண்ட்:

Hyundai Venue கார் 5 வேரியண்ட்களில் உள்ளது. அதாவது, E, S, S+/S(O), SX மற்றும் SX(O)  ஆகும்.

கெப்பாசிட்டி:

Hyundai Venue காரில் ஐந்து நபர்கள் உட்கார்ந்து செல்லக்கூடிய வகையில் சீட் (இருக்கைகள்) அமைக்கப்பட்டுள்ளது.

மைலேஜ் அளவு:

Hyundai Venue கார் ஆனது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 17.5 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கிறது.

Hyundai Venue கார் ஆனது, ஒரு லிட்டர் டீசலுக்கு 23.4 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கிறது.

புதிதாக கார் வாங்க ரொம்ப தேவையில்லை. இந்த அமோன்ட் இருந்தா போதுங்க..

எஞ்சின் எப்படி இருக்கிறது.?

ஹூண்டாயின் சப்காம்பாக்ட் SUV மூன்று எஞ்சின் அமைப்புகளுடன் வருகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் (83PS/114Nm) 5-ஸ்பீடு மேனுவல், 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் (120PS/172Nm) 6-ஸ்பீடு MT உடன் இணைக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்:

இந்த காரின் முக்கிய அம்சமாக அலெக்சா மற்றும் கூகுள் குரல் உதவியாளர்  இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பத்துடன் கூடிய 8-இன்ச் டச் ஸ்க்ரீன் மற்றும் 8-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே போன்ற வசதிகள் உள்ளது. மேலும், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பல அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளது. மேலும், முக்கியமாக பாதுகாப்பிற்காக தரமான 6 ஏர்பேக்குகள் உள்ளது.

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil