குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் டீசல் கார்களின் விவரம் இதோ..!

Advertisement

Low Budget Diesel Cars in India 2023 in Tamil

ஒவ்வொரு கார் நிறுவனமும் பல சிறப்பம்சங்களுடன் பல்வேறு வகையான மாடல்களில் காரை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது. அத்தகைய காரில் ஒரு காரையாவது வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. இருந்தாலும், பணம் என்று தடையாக இருப்பதால், பலபேருக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை கனவாக மட்டுமே இருக்கிறது. இருந்தாலும் பட்ஜெட் விலை காரை வாங்குவதற்கு பலபேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில், இப்பதிவில் குறைந்த பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் டீசல் கார்களின் விவரங்களை தொகுத்து இப்பதிவில் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Small Budget Diesel Cars in India in Tamil:

1.Tata Altroz:

best diesel car under 10 lakhs in tamil

Tata Altroz கார் ஆனது, 1.5 லிட்டர் Revotorq டீசல் எஞ்சினுடன் அமைக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் குறைவான ஸ்டைலான காரை வாங்க விரும்புபவர்களுக்கு Tata Altroz கார் நல்ல விரும்பமாகும்.

முக்கிய விவரங்கள்:

மைலேஜ் – லிட்டருக்கு 23.64 கிமீ

டீசல் டேங்க் – 37 லிட்டர் 

அதிகபட்ச பவர் – 88.7 bhp

விலை – ரூ.8.80 லட்சம்

2.Mahindra Bolero Neo:

மஹிந்திரா பொலேரோ நியோ கார் ஆனது, 1.5-லிட்டர் mHawk 75 BSVI இன்ஜின் அமைப்புடன் உள்ளது. தினசரி பயணங்களுக்கு ஏற்றவாறு அதிக செயல்திறனை அளிக்கும் வகையில் உள்ளது.

முக்கிய விவரங்கள்:

மைலேஜ் – லிட்டருக்கு 16.70 கிமீ

டீசல் டேங்க் – 60 லிட்டர் 

அதிகபட்ச பவர் – 75 bhp

விலை – ரூ.9.64 லட்சம்

6 லட்சத்திற்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்டான கார்கள்..!

3.Mahindra Bolero Classic:

best diesel car below 10 lakhs in tamil

நீண்ட காலமாக உள்ள கார்களில் மஹிந்திரா பொலேரோ காறும் ஒன்றாகும். அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் வாங்க கிடைக்கும் சிறப்பான டீசல் கார்களில் Mahindra Bolero Classic காறும் ஒன்றாகும்.

முக்கிய விவரங்கள்:

மைலேஜ் – லிட்டருக்கு 16.70 கிமீ

டீசல் டேங்க் – 60 லிட்டர் 

அதிகபட்ச பவர் – 75 bhp

விலை – ரூ.9.79 லட்சம்

4.Mahindra XUV300:

மஹிந்திரா XUV300 ஆனது, இந்தியாவில் உள்ள மலிவான டீசல் காம்பாக்ட் SUVகளில் ஒன்றாகும். இந்த XUV300 கார் ஆனது, 1.5 லிட்டர் CRDi டீசல் எஞ்சினுடன் வைவமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய விவரங்கள்:

மைலேஜ் – லிட்டருக்கு 19.70 முதல் 20 கிமீ வரை

டீசல் டேங்க் – 42 லிட்டர் 

அதிகபட்ச பவர் – 115 bhp

விலை – ரூ.10.21 லட்சம்

5.Hyundai Venue:

diesel cars under 10 lakhs 2023 in tamil

ஹூண்டாய் வென்யூ கார் ஆனது, 1.5L CRDi டீசல் எஞ்சின் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 11 லட்சம் பட்ஜெட்டில் ஒரு நல்ல டீசல் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு Hyundai Venue நல்ல விருப்பமாகும்.

முக்கிய விவரங்கள்:

மைலேஜ் – லிட்டருக்கு 22.70 கிமீ வரை

டீசல் டேங்க் – 45 லிட்டர் 

அதிகபட்ச பவர் – 115 bhp

விலை – ரூ.10.58 லட்சம்

இந்திய சாலைக்கு ஏற்ற TATA Tiago EV இனி உங்கள் பட்ஜெட்டில்

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil 
Advertisement