TATA Tiago EV
நமக்கு இருக்கும் கனவுகளில் ஒன்று கார். அப்படி நாம் விரும்பும் கார், சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாமல் எளிமையான முறையில் பயன்படுத்தக்கூடியதாகவும் இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். இப்போது சந்தையில் பல வகையான கார்கள் இருந்தாலும் அவற்றின் விலை மற்றும் என்ஜின் பயன்பாடு நமக்கு ஒரு வித தயக்கத்தை ஏற்படுத்தும். அதுமட்டும்மல்லாமல் வாகனத்தின் வேகம், மேற்பரப்பின் தன்மை, பயன்படுத்தப்படும் உலோகத்தின் தன்மை இப்படி பல சந்தேகங்கள் இருக்கும். இவற்றில் முக்கியமானதாக கருதப்படுவது என்ஜின் செயல்பாடு. டீசல் என்ஜின் சிறந்ததா அல்லது பெட்ரோல் என்ஜின் சிறந்ததா என்று பல குழப்பங்கள் இருக்கும்.
ஆனால் இன்றைய காலகட்டத்திற்கு சிறந்தது மின்சார வாகனங்கள் இவை சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானதாக இருப்பதால் இவற்றின் பயன்பாடு வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்றைய பதிவில் TATA நிறுவனத்தின் EV கார் Tiago EV பற்றிய அடிப்படை தகவல்களையும் விலை பற்றியையும் தெரிந்த்திக்கொள்ளவோம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
TATA Tiago EV New Model in Tamil:
Tata Tiago EV கார் இந்தியாவின் மிகவும் பிரபலமான மின்சார வாகனம் ஆகும். Tata Tiago EV கார் 4 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது.
2022 ஆண்டு அறிமுகப்படுத்தபட்ட TATA Tiago EV மாற்ற EV வாகனங்களுடன் ஒப்பிடும் போது நவீன வசதிகளுடன் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
Tata Tiago EV -வின் சிறப்புகள்:
TATA Tiago EV, மின்சார மோட்டார் 19.2 kWh மற்றும் 24 kWh ஆகிய 2 பேட்டரிகளை கொண்டுள்ளது.
இரண்டு பேட்டரி பேக்குகளும் மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. 19.2 kWh பேட்டரி 61 PS/110 Nm மற்றும் 24 kWh பேட்டரி 75 PS/114 Nm கொண்டுள்ளது.
இந்த பேட்டரி முறையே எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் 250 கிமீ முதல் 315 கிமீ TATA Tiago EV நமக்கு வழங்குகிறது.
டாடாவின் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் 4 சார்ஜிங் விருப்பங்களுடன் வருகிறது.
15 ஒரு சாக்கெட் சார்ஜர்: 6.9 மணிநேரம் (19.2 kWh), 8.7 மணிநேரம் (24 kWh)
3.3 kW AC சார்ஜர்: 5.1 மணிநேரம் (19.2 kWh), 6.4 மணிநேரம் (24 kWh)
7.2 kW AC சார்ஜர்: 2.6 மணிநேரம் (19.2 kWh), 3.6 மணிநேரம் (24 kWh)
DC ஃபாஸ்ட் சார்ஜர்: இரண்டுக்கும் 57 நிமிடங்களில் 10-80 சதவீதம்
EV கார்களில் மிகவும் வேகமான காராக Tiago EV உள்ளது.
19.2 kWh பேட்டரி மூலம் ஒரு முறை சார்ஜ் செய்து அதிகபட்சம் 312 கி.மீ வரை பயணிக்கலாம்.
Tiago EV, Android Auto மற்றும் Apple Carplay கூடிய 7-inch TouchScreen இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ட்வீட்டர்களுடன் கூடிய 4-speacker Harman sound system மற்றும் Auto AC போன்ற பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.
Tiago EV car பாதுகாப்பைப் பொறுத்தவரை 2 முன் ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), EBD உடன் ABS மற்றும் பின்புறக் காட்சி கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது.
TATA Tiago EV வெளிப்புற TATA Tiago அமைப்பை போன்றே காணப்படுகிறது. மேலும் இந்த அமைப்பு பாதுகாப்பானதாகவும் உயர்ந்த தரத்திலும் காணப்படுகிறது.
TATA Tiago EV காரின் ஆரம்ப விலை இந்தியாவில் 08.69 லட்சம் முதல் கிடைக்கிறது.
TATA Tiago EV காரின் விலை பட்டியல்:
Model | Price |
Tiago EV XE Base | Rs.8.69 Lakh |
Tiago EV XT Base | Rs.9.29 Lakh |
Tiago EV XT | Rs.10.24 Lakh |
Tiago EV XZ Plus | Rs.11.04Lakh |
Tiago EV XZ Plus Tech LUX | Rs.11.54 Lakh |
Tiago EV XZ Plus Fast Charge | Rs.11.54 Lakh |
Tiago EV XZ Plus Tech LUX Fast Charge | Rs.12.04 Lakh |
6 லட்சத்திற்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்டான கார்கள்..!
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |