நிறைய வசதிகளை கொண்ட மாருதி சுசூகி சியாஸ் அறிமுகம்..! Maruti Suzuki Ciaz Price
மாருதி நிறுவனத்தின் மிகச் சிறந்த கார் தயாரிப்புகளில் ஒன்றாக சியாஸ் கார் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது. அருமையான டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள் என வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகின்ற நிலையில். மாருதி சுசூகி நிறுவனத்தின் சியாஸ் காரில் கூடுதலான பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் அதனுடைய வேலையும் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவலை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.
மாருதி சுசூகி சியாஸ் கார்:
இந்த மாருதி சுசூகி நிறுவனத்தின் சியாஸ் காரில் அதிக பாதுகாப்பு அம்சங்களை சேர்த்துள்ளதால் காரின் விலை ரூ.16,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ESP மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றை ஆட்டோமேட்டிக் வகைகளில் மட்டுமே பெற்ற சியாஸ், தற்பொழுது அனைத்து வகைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
என்னென்ன வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது:
சியாஸ் காரில் ABS, ISOFIX குழந்தை இருக்கைகள் மற்றும் இரட்டை முன் ஏர்பேக்குகளுடன் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
மாருதி சுஸுகி 3 டூயல் டோன் பெயிண்ட் ஆப்ஷன்களுடன் சியாஸை வழங்குகிறது – மெட்டாலிக் ரெட், மெட்டாலிக் கிரே மற்றும் Dignity Brown என அனைத்தும் கருப்பு நிறங்களில் வழங்கப்படுகிறது.
டூயல்-டோன் ஆப்ஷன் டாப்-ஸ்பெக் ஆல்ஃபா வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது மற்றும் இவை சாதாரன நிலை மாடலை விட ரூ.16,000 உயர்த்தப்பட்டுள்ளது. டூயல்-டோன் ஆல்ஃபா மேனுவல் விலை ரூ.11.15 லட்சமாகவும், ஆட்டோமேட்டிக் வேரியன்டின் விலை ரூ.12.35 லட்சமாகவும் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியாஸ் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்ட 105 ஹெச்பி, 1.5 லிட்டர் K15C பெட்ரோல் எஞ்சின் மூலம் தொடர்ந்து இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் மைல்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வருகிறது, மேலும் இந்த மேனுவல் 20.65 kpl மைலேஜ் மற்றும் தானியங்கி 20.04kpl மைலேஜ் வழங்கும் என்று மாருதி குறிப்பிட்டுள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2023-ஆம் ஆண்டு புதிதாக வெளியாக உள்ள Mahindra Thar 5-Door Car-ன் சிறப்பம்சங்கள்..!
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |