2023-ஆம் ஆண்டு புதிதாக வெளியாக உள்ள Mahindra Thar 5-Door Car-ன் சிறப்பம்சங்கள்..!

Advertisement

Mahindra Thar 5-Door Information in Tamil

பொதுவாக அனைவருக்குமே சில கனவுகள் மற்றும் ஆசைகள் இருக்கும் அப்படி உள்ள ஒரு சில கனவுகள் மற்றும் ஆசைகளில் ஒன்றாக  இடம் பெற்றிருப்பது கார் வாங்க வேண்டும் என்பது தான். அப்படி உங்களுக்கும் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அப்படி நாம் மிகவும் ஆசைப்பட்டு வாங்க போகும் காரினை பற்றிய முழு விவரங்களையும் அறிந்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில்  இன்று Mahindra Thar 5-Door காரின் சிறப்பம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Mahindra Thar 5-Door Launch Date in India:

Mahindra Thar 5-Door Launch Date in India

 

Mahindra Thar 5-Door காரானது பல சிறப்பம்சங்களை தனக்குள் கொண்டுள்ளது. இந்த கார் நம், இந்தியாவில் 2023 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Mahindra Thar 5-Door Information in Tamil:

இந்த Mahindra Thar 5-Door காரானது தற்போது சந்தையில் உள்ள 3-door Mahindra Thar காரை போன்ற மாடலில் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த Mahindra Thar 5-Door காரில் 3-door Mahindra Thar காரை விட மேலும் பல சிறப்பம்சங்கள் உள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த Mahindra Thar 5-Door இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கும் Maruti Suzuki Jimny SUV போன்ற கார்களுடன் போட்டி போடும் என்பதால் இதன் விலை தோராயமாக ரூ. 13 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இதையும் படித்துபாருங்கள்=> 2023-ல் புதிதாக வந்திருக்கும் Toyota Innova Hycross கார் பற்றிய தகவல்

Mahindra Thar 5-Door காரின் சிறப்பம்சங்கள்: 

இந்த Mahindra Thar 5-Door காரின் வெளிப்புறத்தை பொறுத்த வரையில் LED Tail-Lamps, A Tailgate-Mounted Spare Wheel போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

மேலும் இது தற்போது உள்ள 3-door Mahindra Thar காரை விட 15% நீளம் அதிகமாகவும், 22% நீளமான வீல்பேஸையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படித்துபாருங்கள்=> 2023 இல் மே மாதம் அறிமுகமாகும் Nissan X Trail காரின் சிறப்பம்சம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இதன் உட்புறத்தை பொறுத்த வரையில் 3-door Mahindra Thar காரை போன்றே இருக்கும். ஆனால் இதில் மேலும் கூடுதலான இரண்டாவது வரிசை இருக்கை கொண்டுள்ளது. அதாவது இது 6 மற்றும் 7 இருக்கை அமைப்புகளில் கிடைக்கும்.

மேலும் இதில் 2.2-லிட்டர் mHawk டீசல் எஞ்சின் மற்றும் 2.0-லிட்டர் mStallion பெட்ரோல் எஞ்சின் போன்ற சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கும்.

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil 

 

Advertisement