Air Hostess Job Qualification in Tamil
பலருக்கும் விமானம் என்றாலும் பிடிக்கும். அதில் ஒரு முறையாவது பயணிக்க வேண்டும் நினைப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படி சில நபர்கள் விமானத்தில் பயணிக்கும் போது விமான பணிப்பெண்ணாக ஆக வேண்டும் என்று பலரும் நினைப்பீர்கள். அவர்களை பார்த்து எப்படா ஆங்கிலத்தை இவ்வளவு அழகாக பேசுகிறார்கள் என்று நினைத்திருப்போம். இந்த பணிக்கு வருவதற்கு நிறைய தகுதிகள் வேண்டுமென்று நினைத்திருப்போம். அதனில் உங்களுக்கு உதவும் வகையில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிவதற்கு என்ன தகுதிகள் வேண்டுமென்று இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளவும்.
ஏர் ஹோஸ்டஸ் பணி:
ஏர் ஹோஸ்டஸ்கள் பணி என்னவென்றால் அவர்கள் விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருக்க வேண்டும். விமானத்தில் பயணிகளை வழிநடத்துவதற்கும், புறப்படுவதற்கு முன் பல பாதுகாப்பு நெறிமுறைகளை சொல்வதும் போன்ற பிற பணிகளைச் செய்வதற்கும் நியமிக்கப்படுகிறார்கள்.
IT நிறுவனத்தில் வேலைக்கு செல்ல இவ்வளவு படித்திருக்க வேண்டுமா..?
விமான பணிப்பெண் தகுதி:
விண்ணப்பதாரர்கள் தங்களின் 10+2 ஐ ஆங்கிலத்தை முக்கிய பாடமாக கொண்டு தேர்ச்சி பெற வேண்டும்.
குறைந்தபட்சம் 18 – 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 157.5 செ.மீ உயரம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் எடை உயரத்திற்கு விகிதாசாரமாக இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் பணியமர்த்தப்படும் விமான நிறுவனத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும்.
விமான பணிப்பெண்ணாக ஆகுவதற்கு திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத்தில் சரளமாக இருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் இல்லாமல் வேறொரு பற்றி தெரிந்திருந்தால் நல்லது..
விண்ணப்பதாரர்கள் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட விமான நிறுவனத்தில் பயிற்சி பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
விமான பணிப்பெண்ணுக்கான முதலில் ஸ்கிரீன்ங் தேர்வு, பின் எழுத்து தேர்வு, குரூப் டிஸ்கேசன், நேர்காணல் போன்ற முறையில் செலக்ட் செய்வார்கள்.
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 | Eligibility |