ரூ.1000 உரிமைத்தொகை பெற என்னென்ன தகுதி வேண்டும் தெரியுமா..?

Advertisement

Magalir Urimai Thogai Eligibility 

பொதுவாக மக்களிடம் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு ஆனது இருந்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மக்களுக்காக அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம். இத்தகைய திட்டத்தின் படி மாதம் 1,000 ரூபாய் பணமானது ஜூன் மாதம் 3-ஆம் தேதி என்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்தது அதற்கான பணிகள் சரியாக பூர்த்தி அடையாமல் இருந்த காரணத்தினால் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி அன்று வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இன்றைய பதிவில் இத்தகைய 1000 ரூபாய் உரிமைத்தொகைக்கு யாரெல்லாம் தகுதி உடையர்வர்கள் யாரென்று பார்க்கலாம் வாங்க..!

மகளிர் உரிமைத் தொகை யார் யாருக்கு..?

  • ஒரு நபர் மகளிர் உரிமைத்தொகையினை பெற வேண்டும் என்றால் 21-வயது கட்டாயமாக பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.
  • ரூ.1000 தொகையினை பெற ரேஷன் கார்டு ஆனது குடும்பத் தலைவியின் பெயரில் கட்டாயமாக இருக்க வேண்டும்.
  • ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு இணைப்பினை இணைத்து இருக்க வேண்டும்.
  • மகளிர் உரிமைத்தொகை பெற இருக்கும் நபர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும் எந்த இடத்தில் வசிக்கிறீர்களோ அத்தகைய இடத்தில் தான் பணம் பெறுவதற்கு விண்ணப்பிக்கவோ அல்லது பணத்தினை பெறவோ முடியும்.
  • உங்களின் குடும்ப ஆண்டு வருமானம் ஆனது 2,50,000 ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும்.

யாருக்கெல்லாம் உரிமை தொகை கிடையாது.?

  • வீட்டில் கார் இருந்தால் மகளிர் உரிமைத் தொகை கிடையாது.
  • யார் ஒருவர் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்து இருக்கிறார்களோ அவர்கள் இந்த தொகையினை பெற முடியாது .
  • ரேஷன் கார்டு ஆண்களின் பெயரில் இருந்தால் ரூபாய் 1,000 கிடையாது.
  • ஒரு வீட்டில் யாரவது ஒருவர் அரசு பணியில் இருந்தாலும் கூட கிடையாது.
  • அதேபோல் சுமார் 3,000 யூனிட்டிற்கும் மேல் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தினால் இந்த தொகை கிடையாது.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ ரயில்வே டிக்கெட் செக்கர் பணிக்கு செல்ல என்ன தகுதி இருக்க வேண்டும் தெரியுமா

ரயில்வே டிக்கெட் கவுண்டர் வேலைக்கு செல்ல தகுதி இவ்வளவு தானா

HDFC பேங்கில் Manager வேலைக்கு செல்ல என்ன தகுதி வேண்டும் தெரியுமா

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉  Eligibility
Advertisement