Agriculture Officer Eligibility in Tamilnadu
இன்றைய காலத்தில் உள்ளவர்கள் அனைவரும் எந்த படிப்பு மற்றும் வேலைக்கு அதிகமான டிமாண்ட் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு அது தொடர்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் என்ன தான் வருடம் வருடம் பல வகையான வேலைகள் மற்றும் படிப்புகள் வந்தாலும் கூட இவை அனைத்தையும் விட நிலையான ஒரு இடத்தினை விவசாயம் பிடித்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த தொழிலிற்கான டிமாண்ட் என்பது இதுநாள் வரையிலும் குறையாமல் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.
ஏனென்றால் நாம் ஒரு வருடம் விவசாயம் செய்யவில்லை என்றால் சாப்பிடுவதற்கு அரிசி என்பதே இல்லாமல் போய்விடும். இவற்றை எல்லாம் அறிந்து சிலர் விவசாயம் அல்லது வேளாண் தொடர்பான படிப்புகளை படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அத்தகைய வேலைக்கு செல்ல என்னென்ன தகுதி வேண்டும் என்ற அடிப்படை தகவல் தெரியாமல் போய்விடும். அதனால் இன்றைய பதிவில் வேளாண் அதிகாரிக்கான தகுதிகள் என்னவென்று தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் பதிவில் முழுத்தகவலையும் பார்க்கலாம்.
வேளாண் துறை அதிகாரிக்கான தகுதி:
தமிழ்நாடு வேளாண் துறை அதிகாரிக்கான வயது தகுதி என்பது இந்திய குடியுரிமை பெற்று குறைந்தபட்ச 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். இதற்கு அதிகபட்ச வயது என்ற வரம்பு கிடையாது.
அதேபோல் விண்ணப்பிக்க உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் உள்ள மாநிலத்தில் ஏதோ ஒரு மாநிலத்தை சேர்ந்த குடிமகனாக இருப்பது அவசியம்.
வேளாண் துறை அதிகாரியாக ஆகா வேண்டும் என்றால் கல்வி தகுதியாக இது சம்மந்தபட்ட பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனத்தில் B.Sc Agriculture UG மற்றும் M.Sc Agriculture PG படித்து இருக்க வேண்டும். இதனுடன் தமிழ் மொழியும் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் இத்தகைய பணிக்கு அனைத்து விதமான அனுபவங்களும் நிறைந்த அதிகாரிகள் TNPSC தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் வேலைக்கு செல்ல என்னென்ன தகுதிகள் வேண்டும்
ரயில்வே டிக்கெட் கவுண்டர் வேலைக்கு செல்ல தகுதி இவ்வளவு தானா
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 | Eligibility |