ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் வேலைக்கு செல்ல என்னென்ன தகுதிகள் வேண்டும்..!

Advertisement

Railway Station Master Job Qualification in Tamil

நாம் அனைவருமே ரயிலில் சென்றிருப்போம் அப்படி ரயிலில் செல்வதற்காக நாம் சென்று காத்திருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் வேலை பார்க்கும் அனைவரையும் பார்த்திருப்போம். அதிலும் குறிப்பாக அங்கு வேலை பார்க்கும் ஸ்டேஷன் மாஸ்டரையும் பார்த்து இருப்போம். அப்பொழுதெல்லாம் இந்த ஸ்டேஷன் மாஸ்டர் வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் என்ன தகுதிகள் தேவைப்படும் என்று நம்மில் பலரும் சிந்தனை செய்திருப்போம்.

அப்படி நீங்களும் சித்தனை செய்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் ஸ்டேஷன் மாஸ்டர் வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் என்ன தகுதிகள் தேவைப்படும் என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்னனென்ன தகுதிகள் என்பதை அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ இந்திய ரயில்வே துறையில் வேலை பார்க்கின்ற ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சம்பளம் என்ன தெரியுமா

Railway Station Master Job Eligibility in Tamil:

இன்றைய சூழலில் ஒரு சிலருக்கு ரயில்வே துறையில் வேலைக்கு சேர வேண்டும் என்ற ஆசை உள்ளது. அப்படி ஆசை உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பதவி என்றால் அது ஸ்டேஷன் மாஸ்டர் வேலை தான்.

ஸ்டேஷன் மாஸ்டர் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது அதற்கு தேவையான தகுதிகள் நம்மிடம் இருக்க வேண்டும். அதனால் ஸ்டேஷன் மாஸ்டர் வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் என்ன தகுதிகள் தேவைப்படும் என்பதை இங்கு காணலாம்.

கல்வி தகுதி:

  • ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.

வயது தகுதி:

  • General பிரிவினர்: 18 – 33 வயது
  • OBC பிரிவினர்: 18 – 36 வயது (3 ஆண்டுகள் தளர்வு)
  • SC/ST பிரிவினர்: 18 – 38 வயது (5 ஆண்டுகள் தளர்வு)
  • PwD (மாற்றுத்திறனாளிகள்) → 10 ஆண்டுகள் தளர்வு
  • Ex-Servicemen – சேவை வருடத்திற்கு 3 ஆண்டுகள் தளர்வு

வேலை பொறுப்புகள்:

  • ரயில்களில் சரியான நேரத்தில் இயக்கம் நடைபெறுவதை கண்காணித்தல்
  • ரயில்வே கடமைகள் மற்றும் நிர்வாக பொறுப்புகள் மேற்கொள்வது
  • பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்
  • ரயில் வருகை மற்றும் புறப்பாட்டை அறிவித்தல்
  • பணியாளர்களின் வேலை நேரத்தை கண்காணித்தல்

சம்பளம்:

  • தொடக்க ஊதியம் –  ரூ. 35,400 (Level 6 Pay Scale)
  • மொத்த ஊதியம் – ரூ. 50,000 – ரூ. 60,000 (DA, HRA, Allowances உடன்)
  • Dearness Allowance (DA), House Rent Allowance (HRA), Travel Allowance (TA), Medical Benefits

தேவையான ஆவணங்கள்:

  • 10th, 12th, டிகிரி மதிப்பெண் சான்றிதழ்
  • Community Certificate
  • Aadhar Card
  • Passport Size Photo

ஸ்டேஷன் மாஸ்டர் தேர்வுக்கான முக்கிய தேர்வுகள்:

  • RRB NTPC (Non-Technical Popular Categories)- Station Master பதவிக்கான தேர்வு
  • RRB Group D -Level 1 பணியிடங்களுக்கான தேர்வு
  • RRB ALP (Assistant Loco Pilot) -Assistant Loco Pilot & Technician பணியிடங்கள்

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ ரயில்வே டிக்கெட் செக்கர் பணிக்கு செல்ல என்ன தகுதி இருக்க வேண்டும் தெரியுமா

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉  Eligibility

Advertisement