சிவகார்த்திகேயன் வரலாறு | Sivakarthikeyan History in Tamil
இப்போது உள்ள குழந்தைகள் அனைவர்க்கும் மிகவும் பிடித்த ஹீரோக்களின் பட்டியல்களில் சிவகார்த்திகேயனும் இடம் பிடித்துள்ளார்.. சிவகார்த்திகேயன் முதல் முதலில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர், தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர். விஜய் டிவி தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் ஆதரவை பெற்ற இவர், தற்போது நாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார். சரி இந்த பதிவில் சிவகார்த்திகேயன் வாழ்க்கை வரலாற்றை பற்றி பார்ப்போம்.
சிவகார்த்திகேயன் திரையுலக தொடக்கம்:
சிவகார்த்திகேயன் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். இவர் கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். பின்னர் மிமிக்ரி போன்ற தனித்திறமை கொண்டு மேடை நகைச்சுவையாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர். பின்னர் தனது மிமிக்ரி திறமையை கொண்டு மக்களின் ஆதரவை பெற்று அதே தொலைக்காட்சியில் பணியாற்றி புகழ் பெற்றார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி தனது திறமை மூலம் மக்களின் கவனத்தை பெற்று பிரபலமானவர்.
வெள்ளித்திரை அனுபவம்:
சிவகார்த்திகேயன் முதல் படம் 2012-ம் ஆண்டு வெளியான மெரினா படத்தில் ஒரு நாயகனாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், பின்னர் அதே ஆண்டு தனுஷின் ‘3’ படத்திலும் ‘மனம் கொத்தி பறவை’ படத்திலும் நடித்து தமிழ் மக்களின் கவனத்தை கவர்ந்தவர்.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பணியாற்றி மக்களின் ஆதரவை பெற்ற சிவகார்த்திகேயன், 2013-ம் ஆண்டு இவரது நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் உள்ள அறிமுக பாடலை பாடி ஒரு பின்னணி பாடகராக பணியாற்ற தொடங்கினார்.
சிவகார்த்திகேயன் நடித்த படங்கள்:
நடித்த ஆண்டு |
சிவகார்த்திகேயன் படங்கள் |
கதாபாத்திரம் பெயர் |
2012 |
மெரினா |
செந்தில் நாதன் |
மனம் கொத்திப் பறவை |
கண்ணன் |
3 |
குமரன் |
2013 |
எதிர்நீச்சல் |
குஞ்சிதபாதம் என்னும் ஹரீஷ் |
கேடி பில்லா கில்லாடி ரங்கா |
பட்டை முருகன் |
வருத்தபடாத வாலிபர் சங்கம் |
போஸ் பாண்டி |
2014 |
மான் கராத்தே |
பீட்டர் |
2015 |
காக்கி சட்டை |
மதிமாறன் |
2016 |
ரஜினி முருகன் |
ரஜினி முருகன் |
2016 |
ரெமோ |
SK(சிவகார்த்திகேயன்) & ரெமோ (ரெஜினா மோத்வானி) |
2017 |
வேலைக்காரன் |
அறிவு |
2018 |
சீமராஜா |
சீமராஜா, கடம்பவேல் ராஜா |
2019 |
நம்ம வீட்டு பிள்ளை |
அரும்பொன் |
ஹிரோ |
சக்தி |
மிஸ்டர். லோக்கல் |
மனோகர் |
2021 |
அயலன் |
ஆயுஷ் நாராயணன் |
டாக்டர் |
டாக்டர் வருண் |
டூன் |
பஞ்ச் சொக்கலிங்கம் |
சிவகார்த்திகேயன் பாடிய பாடல்கள்:
ஆண்டு |
திரைப்படம் |
பாடல் |
இசையமைப்பாளர் |
2013 |
வருத்தப்படாத வாலிபர் சங்கம் |
வருத்தப்படாத வாலிபர் சங்கம் |
டி. இமான் |
2014 |
மான் கராத்தே |
ராயபுரம் பீட்டர் |
அனிருத் ரவிச்சந்திரன் |
காக்கி சட்டை |
ஐயம் சோ கூல் |
அனிருத் ரவிச்சந்திரன் |
2015 |
ரஜினி முருகன் |
ரஜினி முருகன் |
என். ஆர். ரகுநந்தன் |
மாப்ள சிங்கம் |
எதுக்கு மச்சான் |
டி. இமான் |
2018 |
கனா |
வாயாடி பெத்த புள்ள |
டிபி நியான் தாமஸ் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |