ஆடி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது
ஆடி மாதம் கடவுளுக்கு ரொம்ப உகந்த மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் தாலி பிரித்து நிகழ்ச்சி நடத்துவார்கள். ஆடி பூரம் மற்றும் பெண்களுக்கு உரிய நிகழ்ச்சியான 18பெரு நடக்கும். இப்படி சிறப்பு வாய்ந்த மாதத்தில் ஏன் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்று சொல்கிறார்கள் என்று பலரும் யோசிப்பீர்கள். அதற்கான பதிலை தான் இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம். இதை முழுமையாக படித்து ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்ய கூடாது என்று அறிந்து கொள்ளவும்.
ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்ய கூடாது:
கடவுளுக்கு உரிய மாதம்:
ஆடி மாதம் முழுவதும் கடவுளுக்கு உரிய மாதமாக இருக்கிறது. அதனால் இந்த மாதத்தில் கடவுளையா மனதார நினைத்து வழிபட வேண்டும். வேறு எந்த சிந்தனைகளும் இருக்க கூடாது என்பதற்காக திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை.
ஆடி மாதம் புது தம்பதிகள் சேரக்கூடாது!!! ஏன் பிரிக்கிறார்கள் தெரியுமா?
சித்திரையில் குழந்தை:
ஆடி மாதத்தில் ஒரு பெண் கருவுற்றால் குழந்தையானது சித்திரை மாதத்தில் பிறகும் வாய்ப்பிருக்கிறது. சித்திரை மாதமானது கோடை காலம் வெப்பம் அதிகமாக இருக்கும், இந்த நேரத்தில் குழந்தையை பெற்றெடுத்தால் தாயுக்கும், குழந்தைக்கும் நல்லதல்ல என்பதற்காக திருமண செய்ய கூடாது. தாய்க்கும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
விவசாயம்:
மேலும் ஆடி மாதத்தில் தான் விவசாயத்தை ஆரம்பிப்பார்கள். அப்போது சுப நிகழ்ச்சி வைத்தால் விவசாயம் செய்வதற்கென்று வைத்திருந்த பணத்தை சுப நிகழ்ச்சிக்கு செலவிட வேண்டிவரும் என்பதால் திருமணம் செய்ய கூடாது என்றனர்.
புரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது ?
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |