1997 – 2012-க்குள் பிறந்தவர்களா நீங்கள்? அதிர்ச்சி கொடுக்கும் மெடிக்கல் ரிப்போட்..!

Advertisement

Gen Z Meaning in Tamil

Gen Z என்று அழைக்கப்படும் 1997 முதல் 2012-ஆம் ஆண்டு பிறந்தவர்கள் வேகமாக முதுமையான தோற்றத்தை பெறுவதாக மருத்துவர்கள் கூறுகின்றன. இதற்கான காரணம் என்ன?, தீர்வு என்ன என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பிரபலமான ஜோர்டான் ஹவ்லெட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தன்னுடைய தாயுடன் வெளியில் சென்றால், தங்களை தங்கை அண்ணன் என நினைத்துக்கொள்வதாகவும், ஆனால் தனக்கு தற்பொழுது 26 வயதே ஆகும் நிலையில், 40 வயது என அனைவரும் கருதுவதாக அவர் கூறியிருந்தார், Gen Z தலைமுறையை சேர்ந்தவர்கள் பலர் தங்களுக்கும் இதே நிலை தான் என கூறி வீடியோக்களை பகிர்ந்த.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சொந்தத்தில் திருமணம் செய்யலாமா? செய்யக்கூடாத? முழுமையான விளக்கம் இதோ..!

Gen Z தலைமுறைக்கு முந்தைய தலைமுறையிரான 1981 முதல் 1996 வரை பிறந்தவர்களை Millennials என்றழைக்கப்படுகின்றன. இவர்களை காட்டிலும் 1997-ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்கள் இளம் வயதியிலேயே முதுமையான தோற்றத்தில் இருக்கின்றனர்.

இளம் தலைமுறையினரின் வாழ்கை முறையே இதற்கு காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய இளம் தலைமுறையினர் அதிக மன அழுத்தத்துடனேயே வாழ்வதாக கூறும் மருத்துவர்கள். இதனால் செரிமான திறன் பாதிக்கப்பட்டு அவர்களுடைய தோல் கூடிய விரைவிலேயே முதிர்ச்சியடைந்துவிடுகின்றன.

இதன் காரணமாக கண்களுக்கு அருகே சுருக்கம் , வெள்ளை முடி, உடல் பருமன், சோர்வால் பாதிப்பு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

குழந்தைகள் மீதான சமூகத்தின் அதீத எதிர்பார்ப்பு, தாழ்வு மனப்பான்மை, வெற்றியை நோக்கிய கடுமையான பயணம் ஆகியவற்றால் இளம் தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களின் தாக்கத்தினால் பெரியவர்கள் போல் நடந்துகொள்ளும் குழந்தைகள். ரீலிஸ் போன்றவற்றில் தங்களை அர்பணித்துக்கொள்ளும் கூட இதற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றன.

தூக்கமின்மை மற்றும் உணவு முறையால் இளம் தலைமுறையினரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. உலகம் முழுவதும் வேகமாக பரவும் மிட்னயிட் கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது.

இது போன்று முறையென்ற வாழ்க்கைமுறையை பின்பற்றுவதினால் தான் இளம் வயதிலேயே பெரும்பாலானவர்கள் வயதான தோற்றத்தை பெறுகின்றன. இதனை தவிர்க்க சரியான வாழ்கை முறை, உணவு முறை, உடற் பயிற்சி, சரியான தூக்கம் இவை எல்லாம் எவருக்கு இருக்கின்றதோ அவர்கள் வயதானாலும் இளமையான தோற்றத்தில் இருப்பார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்கள் மூக்கு குத்துவது நல்லதா.! கெட்டதா.!

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement