சுனாமி எப்படி உருவாகிறது என்று தெரியுமா? தெரியாதுன்னா தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

How do tsunamis form in tamil

திடீர் என்று உருவாக்கி தனது பாதையில் இருக்கும் அனைத்தையும் சின்னாபின்னமாக்கும், அவற்றில் இருந்து நாம் மீண்டு வருவதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம். அப்படி ஒரு அழிவை பற்றி தான் நாம் இப்பொழுது தெரிந்துகொள்ள போகிறோம். அது என்ன அளவு என்றால் வேறு ஒன்றும் இல்லை சுனாமி தான்.

சாதாரண கடல் நீரெல்லாம் ஒன்றாக சேர்ந்து நடக்கின்ற சுனாமியின் அழிவை பற்றி தான் நாம் இப்பொழுது தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது இன்றைய பதிவில் சுனாமி எப்படி உருவாகிறது, சுனாமி வருவதற்கான காரணங்கள், சுனாமி வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்த தகவலை பற்றி தான் நாம் இப்பொழுது தெரிந்துகொள்ள போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.

சுனாமி:

tsunami

சுனாமியின் உண்மையான ஆபத்து என்பது திடீர் என்று உருவாக்குவது தான். திடீர் என்று சுனாமி உருவாக்கி அதனை சுற்றி இருக்கும் அனைத்தையும் அழித்துவிடும்.

ஜப்பானில் இந்த சுனாமிக்கு என்ன பெயர் என்றால் Wave in the Harbor. அதாவது முன்னொரு காலத்தில் சுனாமி மக்களுக்கு புதிதாக இருந்தபோது. ஜப்பானில் இருந்த ஒரு ஹார்பரில் மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். அந்த நேரத்தில் சுனாமி வந்து அந்த இடத்தியே அழித்துவிட்டு சென்றுள்ளதால். சுனாமிக்கு இப்படி ஒரு பெயர் வந்துள்ளது.

சுனாமி அலையின் ஆரம்ப உயரம்:

பொதுவாக சுனாமி உருவாகும் போது அதனுடைய ஆரம்ப அலை 3.3 அடி இருக்கும். அதேபோல் ஒவ்வொரு அலைகளுக்கும் இடையில் உள்ள தூரம் என்பது 100-யில் இருந்து 200 கிலோ மீட்டர் வரை இருக்கும்.

சாதரண அலைகளை ஒப்பிடும் போது சுனாமியின் அலை 1000 மடங்கு சுனாமியின் அலை பெரிதாக இருக்கும். இந்த சுனாமியின் வேகம் என்பது ஒரு jet plane-யின் வேகத்தை எட்டமுடியும். கரையை தொடும் வரைக்கும் மெதுவாக வரும் அலையானது தரையை தொடபிறகு ஒரு பேரலையாக உருமாறும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடலில் கப்பல் எப்படி மூழ்காமல் மிதக்கிறது காரணம் தெரியுமா..?

சுனாமி எப்படி உருவாகிறது? – How do tsunamis form in tamil

இந்த சுனாமி அலை அடிப்பதற்கு காற்றோ, வளிமண்டமோ காரணம் இல்லை. கடலுக்கு அடியில் நடக்கும் விஷயங்களினால் தான் அதிகபட்சம் சுனாமி உருவாகிறது. பொதுவாக சுனாமி உருவாக்குவதற்கான காரணம் என்ன என்றால்? நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச்சரி, ப்பாம் பிளாஸ் அல்லது பனிப்பாறை உருகுவத்தினாலும், இனி சில காரணமான Asteroid பூமியை மோதிவதினால் இந்த சுனாமி ஏற்படுகிறது.

இருப்பினும் 88% சுனாமி உருவாக்குவதற்கான காரணம் என்னவென்றால் நிலநடுக்கத்தினால் (Earthquake) தான். ஏன் என்றால் நிலநடுக்கம் கடலின் அடியில் நடப்பதினால் மாபெரும் எதிர்வினை சுனாமியை உருவாக்கும்.

ஆக சுனாமி என்பதும் ஒரு விஷயம் 95% கடலுக்குள் நடந்து முடிந்துவிடும். நாம் வெளியில் பார்க்கப்படும் எல்லாமே அதனுடைய மிச்ச மீதி என்று தான் சொல்ல வேண்டும்.

பொதுவாக சுனாமி உருவாக்குவதற்கு காரணம் என்னெவெற்றல் பூமிக்கு அடியில் இருக்கும் Lithospheric Plate எப்பொழுது மூவ் ஆகிக்கொண்டே இருக்கும். அதனுடைய எச்சஸ் பொழுது அதிகமான வைபிரேசனை சந்திக்கிறதோ, அப்பொழுது தான் குறைந்தபட்சம் 8 புள்ளி அளவிலான வைபிரேசன் தண்ணீரில் உருவாகும், இது போக கடலுக்கு டையில் இருக்கும் தரைமட்டம் மொத்தமாக மேல் ஏறுவதினால் மேலும், கீழும் ஒரு விளைவுகள் உண்டாகும். இருப்பினும். அந்த ஒரு மைய பகுதியில் எந்த ஒரு கப்பல் நின்றாலும் அதனை உணர முடியாது.

ஏன் என்றால் அந்த இடத்தில் உருவாகும் அலை என்பது பெரும் 1½ அடியில் தான் இருக்கும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வட்டவடிவில் மேலும், கீழும் உருவாக்கி இந்த அலை ட்ராவலகி வரும் போது ஒரு ராட்சதஅலையாக உருமாறுகிறது.

இதனுடைய விளைவாக கடல் ஓரத்தை வந்தடையும் அலைகளின் வேகமானது 400 முதல் 880 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். ஒரு சில நேரங்களில் இதனுடைய வேகமான 1000 கிலோ மீட்டரை தாண்டுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு இருந்தால் கண்டிப்பாக கடலோர கரைகளில் இருப்பவர்கள் தப்பிப்பதற்கு வாய்ப்பு இருக்காது.

இது போன்ற நேரங்களில் நீங்கள் கடலில் நின்றுகொண்டு இருக்கும் போது கடலில் இருக்கும் தண்ணீரானது கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்க ஆரம்பிக்கும். அதன் பிறகு 50 km/h ஆக வேகம் குறையும். அதன் பிறகு ஒன்றாவது, இரண்டாவது, மூன்றாவது அலை தொடர்ச்சியாக வர வர அதனுடைய வேகம் அதிகமாகும். கடலினுடைய ஆழம் அதிகமாக இருந்தால் அதற்கு ஏற்றது போல் அலைகளும் அதிமாக இருக்கும். அதன் பிறகு கடல் நீரின் வேகம் அதிகரித்து ஊருக்குள் வர ஆரம்பிக்கும். இதனை தான் சுனாமி என்று நாம் அழைக்கின்றோம். இது தான் சுனாமி வருவதற்கான அறிகுறி ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..?

சுனாமி வரப்போகிறது என்றால் நாம் உடனே செய்ய வேண்டியது என்ன?

உண்டே உயரமான கட்டிடத்தில் சென்று நின்றுவிட வேண்டும். அல்லது உயரமான இடத்தில் நின்றுவிட வேண்டும். அல்லது மரத்தில் ஏறிவிட வேண்டும். இது போக தண்ணீரில் சிக்கி கொண்டீர்கள் என்றால் உங்கள் ஆடை மிகவும் எடையுள்ளதாக இருந்தால் அதனை கழற்றி எறிந்துவிட வேண்டும், எடையுள்ள எந்த உபகாரங்களையும் நீங்கள் அணிந்திருக்க கூடாது. பிறகு சுனாமியில் அடித்து வரப்பட்ட குப்பைகளுக்கு நீங்கள் சிக்கி கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவை எல்லாம் செய்த பிறகு நீங்கள் தப்பிப்பதற்கு கொஞ்சம் வாய்ப்புகள் உள்ளது.

முதல் அலை இரண்டாவது அலையின் வேகம் குறைந்துவிட்டது என்று நீங்கள் மீண்டும் கடலில் கடலை போட கூடாது. ஏன் 30 நிமிடத்திற்கு பிறகு முதலில் வந்த அலைகளின் வேகத்தை விட இரண்டு மடங்கு அதிவேகமாக அலை அடித்து சென்றுவிடும். ஆக அந்த அலையில் இருந்து நீங்கள் தமிக்க முடியாது.

சுனாமியை பொறுத்தவை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது ஒரே விஷயம் தான். அதாவது முதல் அலை வந்த பிறகு இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் கழித்து தான் அடுத்த அலை வரும், எப்பொழுது முதல் அலை குறைந்த வேகத்தில் வந்து சுற்றி இருக்கும் மரம், செடி, கொடி, கார் இவையெல்லாம் சூறையாடிவிடும். இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலை தான் கடிதங்களையே இடிக்கிற அளவுக்கு பயங்கர சக்திவாய்ந்த அலைகளாக இருக்கும்.

எல்லாவகையான சுனாமியும் ஆபத்தான சுனாமி என்று சொல்லிவிட முடியாது, அந்த சுனாமியின் உயரத்தை பொறுத்து தான் அந்த சுனாமி எந்த அளவிற்கு ஆபத்தானது என்று சொல்ல முடியும்.

இயற்கையை தவிர மனிதர்களினாலும் சுனாமியை ஏற்படுத்த முடியும். இந்த மாதிரியான சம்பவம் 20 நூற்றாண்டில் நடந்துள்ளது. அதாவது கடலுக்கு அடியில் சோதிக்கப்பட்ட பாமால் கடல் அலைகள் 984 அடி உயரத்திற்கு வந்துள்ளது, அதற்கு அப்பறம் கரையை அடைவதற்கு முன்பே அதனுடைய வேகம் குறைந்து சாதனமாக மாறிவிட்டது.

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement