தும்மலை கட்டுப்படுத்த முயற்சி செய்தால் ஏற்படும் ஆபத்து! என்ன சொல்றீங்க?

Advertisement

தும்மலை கட்டுப்படுத்த முயற்சி செய்தால் ஏற்படும் விளைவு! Psychological Facts About Sneezing 

தும்மல், காற்று தவிர வேறு எந்த வெளிப் பொருளும் மூக்கில் நுழைந்தால், நமது மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான் தும்மல். மூக்குத் துவாரத்தில் சிறிய முடியிழைகள், நாம் உள்ளிழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புவதுதான் இவற்றின் வேலை. மேலும் மூக்கில் ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது.

இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்பட்டு, அதிக அளவில் நீரைச் சுரக்கிறது.

இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை, வாய் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து மூச்சுப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளித் தள்ளுகின்றன. இதைத்தான் தும்மல் என்பர்.

இவ்வாறு தும்மும்போது அந்த அந்நியப் பொருள் வெளியேற்றப்படுகிறது. இத்தகைய தும்மலை நாம் கட்டுப்படுத்தினால் ஏற்படும் ஆபத்தை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
6 மணிக்கு மேல் ஏன் எண்ணெய், ஊசி, இரும்பு போன்ற பொருட்களை தர கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா..?

தும்மல் பற்றிய தகவல்:sneezing

நீங்கள் மிகவும் கடினமாக தும்மினால், விலா எலும்பு முறிவு, ஏற்படவும் வாய்ப்புள்ளது.

அதேபோல் தும்மலை கட்டுப்படுத்த முயற்சி செய்தால் நீங்கள் தலையில் அல்லது கழுத்தில் ஒரு இரத்த நாளத்தை முறித்து இறக்க நேரிடலாம்.

நாம் தும்மும் போது சில மில்லி செகண்ட் நம் இதயம் துடிப்பதை நிறுத்துமாம். இதனால் தான் அனைவரும் God Bless You என்று சொல்கின்றன.

ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ. எனக் கணக்கிட்டுள்ளனர்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்குமா.!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement