இந்தியாவின் உயரிய விருது | Indiavin Uyariya Virudhu

இந்தியாவின் உயரிய விருதுகள் 

உலகில் சாதனை படைத்த அனைவருக்கும் அவர்களை கௌரவபடுத்தும் வகையில் விருதுகள் வழங்கி சிறப்பிப்பார்கள். விருதுகளானது அவர்களுடைய கடைசி காலம் வரை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். ஒவ்வொருவரும் வித்தியாசமான துறைகளில் வெற்றி பெற்று விருதினை பெறுவார்கள். சிலர் விளையாட்டு துறையில் வெற்றி பெற்று அதற்கென விருதினை பெறுவார்கள். சிலர் இசை துறையில், சிலர் சினிமா துறையில், சிலர் நாடக துறையில் இது போன்ற பல துறைகளில் சாதனை படைத்தது அரசின் விருதுகளை வாங்கி மகிழ்ச்சி அடைவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் இந்தியாவின் உயரிய விருதுகள் என்னென்ன என்பதை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளுவோம். நீங்கள் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நண்பர்களே..! மேலும் இது போன்ற பொது அறிவு சார்ந்த வினா விடைகளை தெரிந்து கொள்ள GK in Tamil இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். சரி வாங்க இந்தியாவின் உயரிய விருது என்னென்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

இசை துறையின் உயரிய விருது என்ன?

உலகளவில் இந்தியாவின் உயரிய விருது:

காந்தி அமைதி பரிசு:

காந்தி அமைதி பரிசு

இந்த பரிசு மகாத்மா காந்தியின் நினைவாக பெயரிடப்பட்டு இந்திய அரசாங்கத்தால் வருடந்தோறும் விருது வழங்கப்படுகிறது.

தேசியளவில் இந்தியாவின் உயரிய விருது:

பாரத ரத்னா:

பாரத ரத்னாஇந்தியாவில் இருக்கும் குடிமக்களுக்கு வழங்கப்படும் விருது தான் பாரத ரத்னா. இந்த விருதானது மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை கௌரவபடுத்தும் வகையில் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.

பத்ம பூசன்:

பத்மா பூசன்

பாரத ரத்னா, பத்ம விபூஷண் போன்ற விருதுகளுக்கு அடுத்ததாக இந்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயர்ந்த விருதாகும். ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வருடந்தோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.

தாமரை திரு (பத்மஸ்ரீ):

பத்மஸ்ரீதாமரை திரு (பத்மஸ்ரீ) விருதானது இந்திய அரசால் வழங்கப்படும் நான்காவது உயரிய குடியியல் விருதாகும். கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொது வாழ்வில் சிறந்து பங்காற்றியவர்களுக்கு பதக்கம் ஒன்றும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.

தேசிய வீரதீர விருது:

ஒவ்வொரு வருடமும் இந்திய அரசும் மற்றும் சிறார் நலத்திற்கான இந்திய மன்றமும் இணைந்து வீரத்துடன் செயலாற்றிய இந்திய சிறாருக்காக தேசிய வீரதீர விருது வழங்கப்படுகிறது.

பத்திரிகை துறையின் உயரிய விருது எது? லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் Pathirikai Thurain Uyariya Viruthu

துறை வாரியான விருது:

இலக்கியம்:

சாகித்திய அகாதமி விருது:

 indiavin uyariya virudhu

சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு இந்திய அரசால் வருடந்தோறும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கக்கூடிய மதிப்பிற்குரிய விருதுதான் சாகித்திய அகாதமி விருது. விருதுடன் பரிசுத்தொகையும் ரூ.1,00,000 மற்றும் ஒரு பட்டயமும் வழங்கப்படுகிறது.

ஞானபீட விருது:

ஞானபீட விருது

இந்திய நாட்டில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிகப்பெரிய விருதுதான் ஞானபீட விருது. இந்த விருதினை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கிய கழகமாகும்.

திரைப்படத்திற்கான விருது:

தாதாசாகெப் பால்கே விருது:

தாதாசாகெப் பால்கே விருது இந்திய திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இந்த விருது இந்திய திரைப்படத்துறையின் தந்தை என கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் நினைவாக கருதப்படுகிறது.

தேசிய திரைப்பட விருதுகள்:

தேசிய திரைப்பட விருதுகள் இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையான விருதுகளாகும். 1954-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருதினை இந்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்கம் 1973-ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது.

இசை, நடனம், நடக்கத்திற்கான விருது:

சங்கீத நாடக அகாதமி விருது:

சங்கீத நாடக அகாதமி விருது இந்தியாவின் இசை, நடனம், நாடக கலைகளுக்கான தேசிய மன்றம் சங்கீத நாடக அகாதமியினால் நிகழ்த்து கலைகளில் சிறப்பான கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் உயரிய விருதாகும்.

விளையாட்டு துறைக்கான விருது:

ராஜீவ் காந்தி கேல் ரத்னா:

ராஜீவ் காந்தி கேல் ரத்னா இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இந்தி மொழியில் கேல் ரத்னா என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் என பொருள்படும். முன்னாள் இந்தியப் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி நினைவாக இவ்விருது பெயரிடப்பட்டுள்ளது.

அர்ஜுனா விருது:

அர்ஜுனா விருது 1961ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது.

துரோணாச்சார்யா விருது:

துரோணாச்சார்யா விருது 1985ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் வீரர்களின் முழு விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது.

தியான் சந்த் விருது:

தியான் சந்த் விருது இந்தியாவில் விளையாட்டுக்களில் சிறப்புமிகு வாழ்நாள் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் ஓர் விருதாகும். புகழ்பெற்ற வளைதடிப் பந்தாட்ட வீரரான தியான் சந்த் நினைவாக 2002 ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்:

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது:

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது ஆண்டுதோறும் இந்தியாவில் அறிவியல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கும் இளம் அறிவியலாளர்களுக்கு “அறிவியல் தொழில் ஆய்வுக் கவுன்சிலால் வழங்கப்படும் விருதாகும்.

போர்ப்படை துறைக்கான விருது:

பரம வீர சக்கரம்:

பரம் வீர் சக்கரம் எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய படைவீரர்களுக்கான இந்தியாவின் மிக உயரிய விருதாகும். இந்த விருது மரணத்திற்கு பின்பும், பெரும்பாலும் அவ்வாறே நிகழ்கின்றது, கொடுக்கக்கூடியது.

மகா வீர சக்கரம்:

மகா வீர சக்கரம் எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய இந்தியப் படைவீரர்களுக்கான இந்தியப் படைத்துறையின் இரண்டாவது மிக உயரிய விருதாகும். இவ்விருது போர்க்களத்தில் தரையிலோ, கடலிலோ வானிலோ வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கும் மறைவிற்கு பின்னால் வழங்கக்கூடியதாம்.

வீர சக்கரம்:

வீர சக்கரம் எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய இந்தியப் படைவீரர்களுக்கு இந்தியப் படைத்துறை வழங்கும் பரம வீர சக்கரம், மகா வீர சக்கரம் விருதுகளுக்கு அடுத்து மூன்றாவது மிக உயரிய விருதாகும்.

அசோக சக்கர விருது:

அசோகச் சக்கரம் இந்தியப் படைத்துறையினால் போர்க்களத்தில் அல்லாது அமைதிக்காலத்தில் படைவீரர்கள் வெளிப்படுத்தும் மிக உயரிய வீரதீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற உயிர்த்தியாகத்திற்காகவும் வழங்கப்படுகின்றன. இது போர்க்காலத்தில் நிகழ்த்திய வீரச்செயல்களுக்கு வழங்கப்படும் பரம வீரச் சக்கரத்திற்கு இணையானது. இந்த விருது படைத்துறையில் அல்லாமல் குடிமக்களுக்கும் வழங்கப்படலாம்.

கீர்த்தி சக்கரம்:

கீர்த்தி சக்கரம் போர்க்களத்தில் அல்லாது ஆற்றப்படும் அதிவீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற தியாகத்திற்காகவும் இந்தியப் படைத்துறையால் வழங்கப்படும் விருதுகளில் அசோகச் சக்கரத்திற்கு அடுத்த நிலையிலும் சௌர்யா சக்கரத்திற்கு மேல் நிலையிலும் உள்ள உயரிய விருதாகும். இது படைத்துறையினருக்கு மட்டுமல்லாது குடிமக்களுக்கும் வழங்கப்படக்கூடியது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil