இந்திய பொருளாதாரம் TNPSC Group 4
நமது இந்திய பொருளாதாரம் என்பது கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையில் 3.363 டிரிலியன் டாலர் என்ற அளவில் உலகில் நமது இந்திய நாடு நான்காவது இடத்தில் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதமானது 6.2 என்ற அளவில் இருக்கின்றது. எனினும் இந்திய மக்கள்தொகை மிக அதிகமாக இருப்பதால் தனி நபர் வருவாய் 3100 டாலர் என்ற குறைந்த அளவிலேயே இருக்கிறது. மேலும் நமது இந்தியப் பொருளாதாரமானது விவசாயம், கைவினைப் பொருட்கள், தொழில் துறை, மற்றும் சேவைத் துறை போன்ற பலவற்றைச் சார்ந்திருக்கிறது. சேவைத் துறையே இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கானது நேரடியாகவோ மறைமுகமாகவோ விவசாயத்தையே சார்ந்துள்ளது. சரி இந்த பதிவில் இந்தியப் பொருளாதாரம் பற்றி TNPSC தேர்வுகளில் கேட்கப்படும் முக்கியமான வினா விடைகளை இப்பொழுது படித்தறியலாம் வாங்க.
இந்திய பொருளாதாரம் TNPSC Questions:
1 தேசிய குழந்தை தொழிலாளர் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது?
விடை: 1987
2. எந்த அமைப்பானது “வறுமை என்பது குறைந்தபட்ச வாழ்வு நிலையை அடைய இயலாத நிலைமை” என்று கூறியது?
விடை: உலக வங்கி
3. 20 அம்ச திட்டம் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் எப்பொழுது தொடங்கப்பட்டது?
விடை: 1975
4. தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்ந்தெடு?
A. வெள்ளிப்புரட்சி – முட்டை உற்பத்தி
B. வெண்மைப் புரட்சி – பால் உற்பத்தி
C. மஞ்சள் புரட்சி – மீன் வளர்ப்பு
D. எபிகல்சர் – தேனீக்களை வளர்த்தல்
விடை: மஞ்சள் புரட்சி – மீன் வளர்ப்பு
5. பஞ்சத்தை தடுத்து மற்றும் தென்னிந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த உதவிய ஆங்கிலேய நீர்பாசன பொறியாலாளர் யார்?
விடை: சர் ஆர்தர் தாமஸ் காட்டன்
6. ஒரு மாநிலம்/ யூனியன் பிரதேசத்தின் தலைமை தேர்தல் அதிகாரியை அப்பதவிக்கு பரிந்துரைப்பவர் யார்?
விடை: இந்திய தேர்தல் ஆணையம்
7. நிதி ஆயோக் குழுவின் தலைவர் யார்?
விடை: பிரதமர்
8. நிதி ஆயோக் அமைப்பின் அடித்தளக் கொள்கை எது?
விடை: ஒரே அணுகுமுறை அனைவருக்கும் பொருந்தும் வகையிலான கொள்கை உருவாக்கம்
9. கீழ்க்கண்டவற்றுள் திட்டக் குழுவில் பிரதிநிதித்துவம் பெறாதவர் யார்?
A. உறுப்பினர் செயலாளர்
B. நிபுணத்துவம் பெற்ற உறுப்பினர்கள்
C. மத்திய அமைச்சர்கள்
D. மாநில அரசாங்கங்கள்
விடை: மாநில அரசாங்கங்கள்
10. திட்டக் குழுவினை அமைப்பதற்கு பரிதுரை செய்த குழு எது?
விடை: கே.சி.நியோகி குழு
இந்திய பொருளாதாரம் வினா விடை – India Porulatharam TNPSC
11. நிதி யோக் எந்த வகையில் துவங்கப்பட்டது?
விடை: நிர்வாக தீர்மானத்தின் மூலம்
12. கீழ்க்கண்டவற்றுள் தொழில்துறை உற்பத்திக் குறியீட்டினை கணக்கிடும் பொழுது கணக்கில் எடுதுக்கொள்ளபடாத துறை எது?
A. உற்பத்தி
B. சுரங்கம்
C. மின்சாரம்
D. பெட்ரோலியம்
விடை: பெட்ரோலியம்
13. இந்தியாவில் சிறுதொழில் வளர்ச்சி கழகம்(SIDCO)ஆரம்பிக்கக்பட்ட ஆண்டு?
விடை: 1980
14. தொழில் பண்ணைகள்(industrial estates) நிறுவபட்டது ஏனெனில்
விடை: நகரங்களில் தொழில்களை ஏற்படுத்த
15. ‘பாம்பே திட்டம்’ எந்த ஆண்டு தீட்டப்பட்டது?
விடை: 1944
16. இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கபடுபவர் யார்?
விடை: குரியன்
17. நில உச்சவரம்புச் சட்டம் மாநில அரசால் பின்வரும் எந்த திட்டகாலத்தில் புகுத்தப்பட்டது ?
விடை: மூன்றாவது திட்டம்
18. ஸ்வர்ண ஜெயந்தி கிராம் ஸ்வரோஜ்கர் யோஜனை செயல்ப்படுத்தப்பட்ட காலம்
விடை: ஏப்ரல் 1999
19. மூடிய பொருளாதாரம் என்பது
விடை: அயல் நாட்டு வாணிபத்தை அனுமதிக்காது
20. ‘உணவுக்கான வேலை’ என்ற திட்டத்தை மாற்றி அமைத்து மருப்பெயர்ச் சூட்டி – திட்டம் என அழைக்கப்பட்டது
விடை: IRDP திட்டம்
பத்திரிகை துறையின் உயரிய விருது |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |