கானா பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்..! Ghana Bird Sanctuary is Located in Which State..!
தினமும் நமது பதிவில் ஒவ்வொரு விதமான பொது அறிவு வினா விடைகளை பற்றி பகிர்ந்து வருகிறோம். அவையெல்லாம் அரசு பொது தேர்வுகளுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் அனைவர்க்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக பொது தேர்வுகளில் இந்திய தேசிய பூங்காக்கள் அமைந்துள்ள மாநிலங்கள் பெயர்களை பற்றியும் கேட்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் கானா பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது என்பதை பற்றி படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
கானா பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
- விடை: பாரத்பூர் (ராஜஸ்தான்) இதனை கேவலாதேவ் தேசியப் பூங்கா என்று அழைப்பார்கள்.
கானா பறவைகள் சரணாலயம் பற்றிய சில தகவல்கள்:
⇒ வட இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் முப்பத்து இரண்டு மாவட்டங்களில் ஒன்று தான் இந்த பரத்பூர். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பரத்பூர் நகரம் ஆகும். இந்த மாவட்டத்தில் உள்ள கேவலாதேவ் தேசியப் பூங்கா தான் உலகின் பாரம்பரிய களமாக யுனேஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
⇒ முன்புபரத்பூர் தேசியப் பூங்கா என்று அழைக்கப்பட்ட இது சிறப்பான ஒரு பறவைகள் சரணாலயமாக விளங்குகின்றது. இங்கே உள்ளூர் நீர்ப் பறவைகளுடன், புலம்பெயர்ந்து வரும் நீர்ப் பறவைகளையும் பெருமளவில் காணலாம்.
⇒ இந்த பூங்கா சுமார் 29 சதுர கிலோமீட்டர் பரப்பளவையே கொண்ட இந்தச் சிறிய பூங்காவில் 350 க்கும் மேற்பட்ட பறவைகள் வசிப்பதாக அறியப்படுகிறது.
⇒ இங்கே ஆண்டு தோறும் புலம் பெயர்ந்து வருகின்ற பறவைகளில் சைபீரியக் கொக்குகள் மிகவும் பிரபலமானவையாக கருதப்படுகிறது.
⇒ ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து இப்பகுதிக்கு வரும் இவ்வகைக் கொக்குகள் தற்போது அழியும் நிலையிலுள்ள பறவைகளாகும்.
⇒ உள்ளூர் மக்களால் கேவலாதேவ் கானா பூங்கா என அழைக்கப்படுகிறது.
⇒ இந்த கானா பறவைகள் சரணாலயத்தில் 366 பறவை இனங்கள், 379 தாவர இனங்கள், 50 வகை மீன்கள், 13 வகை பாம்புகள், 5 வகையான பல்லிகள், 7 நீர்நிலம் வாழ்வன இனங்கள், 7 ஆமை இனங்கள் மற்றும் பல்வேறு முதுகெலும்பற்ற உயிரினங்கள் வாழ்கின்றன.
⇒ இந்த சரணாலயம் உலகின் அதிகப்படியான பறவைகள் வாழக்கூடிய பகுதிகளில் ஒன்றாகும்.
⇒ மேலும் இங்கே கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய பல நீர் பறவைகள் உட்பட பலவகையான பறவைகள் வருகை தருகிறன்றன.
மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை எது?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |