மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை எது? | Which Bird Can Fly Long Distance in Tamil

Advertisement

மிக நீண்ட தூரம் பறக்கும் பறவை | Long Distance Flying Bird in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை எது என்று பார்க்கலாம். பறவைகள் கூட்டை விட்டு பூமியை சுற்றி பறக்க ஆரம்பிக்கின்றன. பொதுவாக பறவைகள் அதற்கென்று தனித்தனியான குனங்களையும், தன்மையையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு பறவைகளுமே அதிகமான தொலைவும், அதிகமான உயரமும் பறக்கிறது. அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை எது என்று தெரிந்துகொள்ளலாம்.

மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை எது?

விடை: உலகின் மிக நீண்ட தூரம் பறக்கும் பறவை ஆர்க்டிக் டர்ன் எனும் பறவையாகும்.

மிக நீண்ட தூரம் பறக்கும் பறவை:

  • Sterna paradisaea என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஒரு கடற் பறவையாகும். நிலவுக்கும், பூமிக்கும் சுமார் மூன்று முறை பயணம் மேற்கொள்கிறது. ஒரு வருடத்தில் 22,000 மைல்கள் வரை பறக்கக்கூடியது. இந்த பறவை குளிர்காலத்தில் வட துருவத்தில் இருந்து, தென் துருவத்திற்கு பறந்து செல்கிறது. கோடை காலத்தில் வட துருவத்திற்கு பறந்து வருகிறது.
  • ஆர்க்டிக் டர்ன் பறவையால் 4000 கி.மீ தொலைவு நிற்காமல் பறக்க முடியும். பூமியில் தன் வாழ்நாளில் அதிக நேரம் சூரிய ஒளியில் வாழும் உயிரினம் இது மட்டுமே ஆகும். மேலும் இது பறக்கும் போது அனைத்து விதமான சாகசங்களையும் மேற்கொள்ளும்.

அதிக தூரம் பறக்கும் பறவை:

Which Bird Fly Long Distance in Tamil: ஆர்டிக் டெர்ன் பறப்பதன் மூலம் சுமார் 35,000 கி.மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும். ஆர்க்டிக் வட்டமான தூந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.

இதனுடைய வயிற்று பகுதி வெள்ளை நிறத்திலும், இறக்கை சாம்பல் நிறத்திலும் உள்ளது. அலகு மஞ்சள் நிறத்திலும், கால்கள் சிகப்பு நிறத்திலும் உள்ளது. இதன் இறக்கை 98 செ.மீ நீளமும், 150 கிராம் எடையையும் கொண்டுள்ளது. இந்த பறவை மூன்று முட்டைகள் வரை இடுகிறது. முட்டைகளை ஆண், பெண் இரண்டு பறவைகளும் அடைகாக்கிறது. முட்டைகள் 21 நாட்களில் பொரித்து விடுகிறது.

Miga Neenda Thooram Parakkum Paravai:

ஆலா பறவை வகைகள் 
ஆற்று ஆலா River Tern – ரிவர் டெர்ன்
குளத்து ஆலா Indian River Tern – இண்டியன் ரிவர் டெர்ன்
சிட்டி ஆலா Little Tern – லிட்டில் டெர்ன்
மீசை ஆலா Whiskered Tern – விஸ்கர்டு டெர்ன்
பருத்த அலகு ஆலா Gull Billed Tern – கல் பில்டு டெர்ன்
சிவப்பு மூக்கு ஆலா Caspian Tern – கேஸ்பியன் டெர்ன்
பெரிய கொண்டை ஆலா Large Crested Tern – லார்ஜ் கிரெஸ்ட்டட் டெர்ன்
கறுப்பு வயிறு ஆலா Black Bellied Tern – பிளாக் பெல்லிடு டெர்ன்
ஆர்க்டிக் ஆலா Arctic Tern – ஆர்க்டிக் டெர்ன்

அதி வேகமாக பறக்கக்கூடிய பறவைகள்:

பறவைகள் பெயர்  வேகம் 
பொரி வல்லூறு மணிக்கு 322 கி.மீ
பொன்னாங் கழுகு மணிக்கு 200 கி.மீ
வெண் தொண்டை முள்வால் உழவாரன் மணிக்கு 171 கி.மீ
சுந்தன் கோழி மணிக்கு 142 கி.மீ

 

உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement