சீனா தனக்கென விண்வெளியில் தனியாக உருவாக்கும் ஆய்வு நிலையத்தின் பெயர்

china space station name

சீனா விண்வெளி நிலையம் – China Space Station Name

பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்துகொள்ள நினைக்கும் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். இன்றை பதிவில் சீனா தனக்கென விண்வெளியில் தனியாக உருவாக்கும் ஆய்வு நிலையத்தின் பெயர் என்ன என்பதை பற்றியும் சீனா விண்வெளி நிலையம் பற்றிய சில தகவல்களையும் நாம் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம். இது போன்ற பொது அறிவு சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு உங்களது எதிர்காலத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் ஏதாவது பொது தேர்வுகளில் கலந்துகொள்ளும் போது அந்த தேர்வுகளில் பொது அறிவு சார்ந்த கேள்விகள் நிறைய கேக்கப்டுகிறது. ஆகவே தினமும் ஒரு பொது அறிவு விஷயங்களை தெரிந்து கொள்ள பழகுங்கள், இச்செயல் மிகவும் சிறந்த செயலாகும். சரி வாங்க சீனா தனக்கென விண்வெளியில் தனியாக உருவாக்கும் ஆய்வு நிலையத்தின் பெயர் என்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம்.

சீனா தனக்கென விண்வெளியில் தனியாக உருவாக்கும் ஆய்வு நிலையத்தின் பெயர்?

விடை: டியாங்காங் (Tiangong)

உலக நாடுகளுக்கு போட்டியாக விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையங்களை அமைக்க திட்டமிட்டது.

சோதனை ரீதியாக கடந்த 2012-ஆம் ஆண்டு டியாங்காங் என்ற ஆய்வு நிலையத்தை சீனா நிறுவியிருந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டு அந்த ஆய்வுக்கூடம் செயலிழந்தது.

சுமார் 8 ஆயிரத்து 50 கிலோ எடை கொண்ட இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி விழுந்தபோது வளிமண்டல உராய்வு காராணமாக எரிந்து சிதைந்து போனது. எனினும் மனம் தளராத சீனா, விண்வெளித் திட்டங்களில் முன்னோடியாக இருப்பது பெருமைக்குரியது என்றும் அதே நேரத்தில் எதிர்பாராத பல தோல்விகளைச் சந்தித்துதான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் விளக்கம் அளித்தது.

‌‌அதே சமயம் விண்வெளியில் ஆய்வு நிலையத்தை நிறுவ வேண்டும் என்ற தாகம் சீனாவுக்கு தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன் தொடர்ச்சியாக வரும் 2020 ஆம் ஆண்டு விண்வெளியில் ஆய்வு நிலையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. விண்ணில் சீனா அமைக்கவுள்ள புதிய ஆய்வு மையம் தற்போது தொடக்க நிலையில் இருக்கிறது. இதன் கட்டுமானப் பணி நடைப்பெற்றுவரும் நிலையில், அங்கு தங்கி ஆய்வு மேற்கொள்ளவுள்ள விண்வெளி வீரர்களுக்கு இப்போது முதலே தீவிரமாக பயிற்சி கொடுத்து வருகிறது சீனா.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil