தேசிய பெண் குழந்தை தினம் எப்போது? | National Girl Child Day in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு பகுதியில் தேசிய பெண் குழந்தை தினம் எப்போது என்று தெரிந்துக்கொள்ளலாம். தேசிய பெண் குழந்தை தினத்தின் நோக்கமானது நாட்டில் பெண் குழந்தையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கும், அவர்களுக்கு சம உரிமை அளிப்பதற்கே இந்த நாள் கொண்டுவரப்பட்டது. வாங்க இந்த பதிவில் தேசிய பெண் குழந்தை தினம் எப்போது என்று தெரிந்து கொள்ளலாம்
தேசிய நூலக தினம் எப்போது? |
தேசிய பெண் குழந்தை தினம் எப்போது?
விடை: 2008-ஆம் ஆண்டு முதல் ஜனவரி 24-ம் தேதி தேசிய பெண் குழந்தை தினம் கொண்டாடப்படுகிறது.
பெண் குழந்தை தினத்தின் நோக்கம்:
இந்த தினத்தின் முக்கிய நோக்கமானது பெண்களை எதிர்கொள்ளும் ஏற்ற தாழ்வுகள், பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி போன்ற விழிப்புணர்வை மக்களிடம் வெளிப்படுத்துவதே ஆகும்.
பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு அரசாங்கம் பல திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது, அவற்றின் பட்டியல்:
குழந்தை திருமண தடை சட்டம்:
அறியாத குழந்தை பருவத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு துணை புரியும் உறவினர்கள், நண்பர்கள் என்ற அனைவருக்கும் 2 ஆண்டு தண்டனையும், 1 லட்சம் அபராத தொகையும் செலுத்த வேண்டும் என்று சட்டம் வந்துள்ளது.
கருக்கலைப்பு சட்டம்:
பெண்கள் கர்ப்ப நிலையில் இருக்கும்போதே கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று உறுதி செய்து கலைப்பதை இந்த சட்டம் தடுத்து நிறுத்தியுள்ளது. அதே போல் கர்ப்பிணியின் குழந்தைப் பிறப்பில் சிக்கல்கள் இருந்தால் மட்டுமே அதுவும் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் ஒப்புதலோடுதான் கருக்கலைப்புச் செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும்.
உலக புத்தக தினம் எப்போது? |
பாதுகாப்பு சட்டம்:
18 வயதிற்கு குறைவாக உள்ள பெண் குழந்தைகளை கட்டாயப்படுத்தி அவர்களை பாலியல் தொந்தரவு செய்யும் நபர்களுக்கு ஐபிசியின் பிரிவு 372 மற்றும் 373 படி 10 வருடம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். சட்டப் பிரிவு 363-A படி 10 வயதுக்குக் குறைவான பெண் குழந்தையைக் கடத்தினால் அவர்களுக்கு ஜாமினில் வெளிவராதபடி கடுமையான தண்டனை வழங்கப்படும்.
பெண் குழந்தைக்கான நலத்திட்டம்:
மத்திய அரசானது பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை செழிப்பாக அமைய “சுகன்யா சம்ரித்தி” என்ற சேமிப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
உலக புற்றுநோய் தினம் |
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் பெண்களுக்கான பல திட்டங்களை அரசு வெளிப்படுத்தியுள்ளது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |