பழங்களின் அரசன் யார்..? | Palangalin Arasan

Advertisement

பழங்களின் ராஜா | Palangalin Arasan Yaar..?

பழங்களின் ராஜா எது ? வணக்கம் நண்பர்களே… நாம் தினமும் ஒரு பழம் சாப்பிடுவது இயல்பு. அப்படி தினமும் சாப்பிடும் போது இதற்கெல்லாம் யார் அரசன் என்று எப்போவது யோசித்தது உண்டா? இல்லையென்றால் இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்களுக்காக இதுபோன்ற பதிவுகளை பொதுநலம் உங்களுக்காக பதிவிட்டு வருகிறது. வாங்க படித்து தெரிந்துகொள்வோம்!

பழங்களின் அரசன் மாம்பழம் | king of fruits mango:

  •  பழங்களின் அரசன் மாம்பழம் தான் . கோடை காலம் வந்துவிட்டால் முதலில் ஞாபகம் வருவது மாம்பழம் தான். மாம்பழம் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் மாம்பழம் அதிகம் கோடை காலத்தில் சாப்பிடகூடாது என்று சொல்வார்கள். அதனால் சிலர் மாம்பழம் சாப்பிட அச்சம் கொள்வார்கள். ஆனால் வெயில் காலத்தில் உடலுக்கு தேவையில்லாத பிரச்சனை வரும் என்பதற்காக இந்த மாம்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். ஆனால் இது தவறான கருத்து. உங்களுக்கு தெரியாத உண்மையான மாம்பழத்தின் ரகசியங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
  • மாம்பழம் தான் பழங்களின் அரசன். இந்த பெயர் வைக்க காரணம் எல்லாரும் விரும்பும் பழம் என்பதற்காக வைக்கவில்லை. இந்த மாம்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. அதனால் தான் இதற்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.

மாம்பழம் நன்மைகள் | Mango Benefits in Tamil:

  • கோடை காலங்களில் சில பழங்களை சாப்பிடாமல் இருக்க வேண்டும். ஆனால் இந்த மாம்பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் இதில் அதிகமான சத்துகள் உள்ளதால் இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.
  • மாம்பழத்தில் கரோட்டின் சத்துகள் நிறைந்துள்ளதால் மனிதர்களின் வாழ்வில்  ஆயுளை நீடிக்கிறது. ஊட்டசத்து குறைபாட்டை குறைக்கிறது.
  • மாம்பழத்தில் அதிகமாக வைட்டமின் சி சத்துகள் நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையானஆன்டி- ஆக்ஸிடன்ட்களை தருகிறது.
  • மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. உள் உறுப்புகளை நன்றாக பாதுகாக்கும்.
  • கோடை காலங்களில் குழந்தைகளை பாதிக்கும் நுண்ணுயிர்கள் மற்றும் பாக்டீரியாவை அழிக்கும்.
  • மாம்பழம் மனிதர்களின் உடல் சோர்வை நீக்கி உடல் பருமனை குறைக்க உதவும்.
மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை எது

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in tamil

Advertisement