வெள்ளி நட்சத்திரம் எந்த திசையில் உள்ளது 2025.?

Advertisement

வெள்ளி இருக்கும் திசை 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில், வெள்ளி நட்சத்திரம் இருக்கும் திசை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். சூரியனிடமிருந்து இரண்டாவது கோளாக இருக்கிறது. வெள்ளி நட்சத்திரம் எந்த திசையில் இருக்கிறது என்பதை பலரும் அறிந்துகொள்ள விரும்புகிரார்கள். ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும். நம்மில் பலருக்கும் வெள்ளி எந்த திசையில் இருக்கிறது என்ற குழப்பம் இருக்கும். ஆகையால், உங்கள் குழப்பத்தினை போக்கும் விதமாக இப்பதிவு அமையும். அதாவது, வெள்ளி இருக்கும் திசை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். சரி இந்த பதிவில் வெள்ளி நட்சத்திரம் எந்த திசையில் உள்ளது என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

வெள்ளி வாங்க உகந்த நாள் எதுன்னு தெரியுமா.?

வெள்ளி நட்சத்திரம் எந்த திசையில் உள்ளது.?

வெள்ளி நட்சத்திரம் எந்த திசையில் உள்ளது

விடை: கிழக்கில் இருந்து மேற்கு

சூரியக் குடும்பத்தில் சூரியனில் இருந்து இரண்டாவதாக அமைந்துள்ள கிரகம் வெள்ளி.கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுழலும் ஒரே கிரகம் இது.

புமிக்கும் சூரியனுக்கும் இடையில் இந்த கிரகம் சுழன்று வருகிறது.

புமி உள்பட எல்லா கிரகங்களும் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுழல்கின்றன. இதனால் சூரியன் கிழக்கு திசையில் உதித்து மேற்கில் மறைகிறது. ஆனால் வெள்ளி கிரகம் மட்டும் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சூழல்கின்றது.

இதனால் வெள்ளி கிரகத்தில் மட்டும் சூரியன் மேற்கு திசையில் உதிக்கும். இத்தகைய சிறப்புடைய வெள்ளி கிரகம் சூரியன் உதிக்கும் சமயத்திலும், சூரியன் மறையும் சமயத்திலும் அதிகபட்சத்தின் வெளிச்சத்தைக்காட்டி மிளிரும்.

இரவு நேரத்தில் சந்திரனுக்கு அடுத்தப்படியாக நட்சத்திரங்களிலேயே வெள்ளிதான் அதிக ஒளியுடன் காணப்படும். வெள்ளி கிரகத்தின் நகர்தலை வைத்து அதை அழைக்கிறார்கள்.

சூரியனின் இடது புறம் வெள்ளி இருக்கும்போது, வானத்தில் அது மேற்கு திசையில் காட்சி அளிக்கும். அப்போது அதை அந்தி வெள்ளி என்பார்கள்.

சூரியனின் வலது புறத்துக்கு வெள்ளி வரும்போது அதிகாலை நேரமாகும். அந்த வெள்ளி விடிவெள்ளி என்றழைக்கப்படுகிறது.

கிராமங்களில் இதை காலை நட்சத்திரம், மாலை நட்சத்திரம் என்று சொல்வார்கள். அந்த வெள்ளி காலத்தில் சுக்கிரனுக்கு எதிராக கிரகப்பிரேவசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்ற நம்பிக்கையும் கிராமங்களில் உள்ளது.

சூரியனை ஒருதடவை சுற்ற 144 நாட்களை வெள்ளி கிரகம் எடுத்துக் கொள்ளும். பொதுவாக பகல் நேரங்களில் அது பளிச் என தெரியாது.

இது நமது சூரிய மண்டலத்தின் வெப்பமான கிரகம். மேற்பரப்பு வெப்பநிலை 450 டிகிரி செல்சியஸ்.

வெள்ளி கிரகம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுழல்கிறது.கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுழலும் ஒரே கிரகம் இது. சூரியன் கிழக்கில் உதயமாகி மேற்கு நோக்கி அஸ்தமிப்பதாக தோன்றுகிறது.வெள்ளி நட்சத்திரம் எந்த திசையில் உள்ளது

வெள்ளி மிக மெதுவாக சுழலும் கிரகம். சூரியனை சுற்றுவதை விட தன்னை சுற்றி முடிக்க அதிக நேரம் எடுக்கும். வெள்ளி பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம்.

வெள்ளி எதிரில் வீடு குடி போகலாமா!

வீடு க்ருஹப்ரவேசம் செய்யும்போது எதிர்வெள்ளி கூடாது என்று ஜோதிட அறிஞர்கள் சொல்வார்கள். எதிர்வெள்ளி கூடாது என்றால் வீட்டிற்குள் நுழையும் திசையில் வெள்ளி இருக்கக் கூடாது.

இன்றைய நட்சத்திரம் என்ன..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement