சந்திரயான்-3 பற்றிய பொது அறிவு வினாக்கள்..! | Chandrayaan 3 GK Current Affairs

Advertisement

Chandrayaan 3 GK Question Answer in Tamil

சந்திரயான்-3 என்பதை நாம் அனைவருக்குமே அறிந்து இருப்போம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) மூன்றாவது சந்திரப் பயணமாகும். இது, நிலவில் மேற்பரப்பில் லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. அப்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் முக்கியமான ஒன்றாக திகழும், Chandrayaan 3 பற்றிய விவரங்களை நாம் அனைவருமே தெரிந்திருக்க வேண்டும். ஆகையால் இப்பதிவின் வாயிலாக, சந்திராயன் 3 பற்றிய பொது அறிவு வினாக்கள் மற்றும் அதற்கான விடைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இப்போது பல்வேறு தேர்வுகள் மற்றும் நேர்காணலில் சந்திரயான்-3 பற்றிய கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆகையால், தேர்வுகளில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்கள் அனைவரும் சந்திராயன் 3 பற்றிய கேள்விகள் மற்றும் பதில்களை அறிந்திருக்க வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் சந்திராயன் 3 பட்டறையை பொது அறிவு வினாக்களை தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம்.

Chandrayaan 3 GK:

1,சந்திரயான்-3 எந்த நாட்டின் விண்வெளி பயணமாகும்.?

விடை: இந்தியா 

2.சந்திரயான்-3 பணிக்கு எந்த விண்வெளி நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.?

விடை: இஸ்ரோ 

3,சந்திராயன் 3 எதனுடன் தொடர்புடையது.?

விடை: சந்திரன் 

4. சந்திராயன் 3 விண்கலம் எப்போது விண்ணில் ஏவப்பட்டது.?

விடை: ஜூலை 14, 2023 

5. சந்திராயன் 3 எந்த மையத்தில் இருந்து ஏவப்பட்டது.?

விடை: சதீஷ் தவான் விண்வெளி மையம்

6.சந்திராயன் 3 நிலையில் எந்த பகுதிக்கு அருகில் தரையிறங்கியள்ளது.?

விடை: தென் துருவம் 

7.சந்திராயன் 3 எப்ப்போது நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.?

விடை: ஆகஸ்ட் 23,2023

8.சந்திராயன் 3 திட்டத்தின் திட்ட இயக்குனர் யார்.?

விடை: வீர முத்துவேல் 

9.நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறங்கிய 4-வது நாடு எது.?

விடை: இந்தியா 

10.சந்திராயன் 3 விண்ணில் செலுத்த பயன்படுத்தப்பட்ட ராக்கெட்டின் பெயர் என்ன.?

விடை: LVM3-M4

11. விக்ரம் லேண்டர் எந்த நேரத்தில் சந்திர மேற்பரப்பை தொட்டது.?

விடை: 6:04 PM IST 

12. சந்திராயன் 3-யின் மொத்த எடை என்ன.?

விடை: 3,900 கிலோகிராம் 

13. சந்திராயன் 2 எப்படி சந்திராயன் 3-யை வரவேற்றது.?

விடை: வருக நண்பா 

14. சந்திராயன் 3 பயணத்தின் பின்னால் இருந்த ராக்கெட் பெண் யார்.?

விடை: ரித்து கரிதால் 

15. சந்திராயன் 3 ரோவரின் பெயர் என்ன.?

விடை: பிரக்யான் 

16. சந்திராயன் 3-ல் பயன்படுத்தப்படும் லேண்டரின் பெயர் என்ன.?

விடை: விக்ரம்

17.சந்திராயன் 3 திட்டத்திற்கு எவ்வளவு செலவானது.?

விடை: 615 கோடி 

18.சந்திராயன் 3 தரையிறங்கியதை அங்கீகரிக்கும் வகையில், இந்தியாவில் தேசிய விண்வெளி தினமாக எந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.?

விடை: ஆகஸ்ட் 23

19.விக்ரம் லேண்டர் தரையிறங்கிய நிலவின் பகுதிக்கு பிரதமர் என்ன பெயர் வைத்தார்.?

விடை: சிவசக்தி 

20. சந்திராயன் 3-ல் எது இல்லை.?

விடை: ஆர்பிட்டர் 

21. சந்திராயன் 3-ல் பயன்படுத்தப்படும் எரிபொருள் எது.?

விடை: திட எரிபொருள், திரவ ஆக்சிஜன், திரவ ஹைட்ரஜன்

22. சந்திராயன் 3 சந்திரனை அடைய எத்தனை நாட்கள் எடுத்தது.?

விடை: 41 நாட்கள் 

23. சந்திராயன் 3 -யின் லேண்டர் மற்றும் ரோவரின் பணி வாழ்க்கை என்ன.?

விடை: 14 நாட்கள் 

24. சந்திராயன்- 3  எந்த முந்தைய இந்திய நிலவு பயணத்தின் தொடர்ச்சி பயணமாகும்.?

விடை: சந்திராயன்- 2

25.நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறங்கிய நாடு எது.?

விடை: இந்தியா

சந்திராயனின் முழு பயணம்

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement