வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சந்திராயனின் முழு பயணம்

Updated On: July 17, 2023 12:04 PM
Follow Us:
chandrayaan
---Advertisement---
Advertisement

Chandrayaan

” நிலா” நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. சிறு குழந்தை முதல் வயதானவர் வரை நிலவை ரசிக்கத்தவர் எவரும் இல்லை. என்றோ ஒரு நாள் நிலவுக்கு போக வேண்டும், நிலவை கையில் பிடிக்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கு இருக்கும். அந்த கனவு சாத்தியமா என்று கேட்டல் ? ஆம் சாத்தியமே வளர்த்து வரும் விஞ்ஞான உலகத்தில் இந்த தலைமுறையே விண்ணில் குடிபுகுந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.

இந்தியாவின் சந்திராயன் பயணம் நமது கனவுக்கு ஒரு ஊன்றுகோளாக இருக்கும். இன்று அத்தகைய சிறப்பு வாய்ந்த சந்திராயன் பயணத்தை பற்றி பார்ப்போம்.

இந்தியாவின் கனவு திட்டம்:

இந்திய நிலவில் தனது ஆராய்ச்சியை தொடங்க போவதை அன்றைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 2003 ல் அறிவித்தார். சந்திராயன் என்பது ஆளில்லா விண்கலம் நிலாவை நோக்கிய பயணத்தை குறிக்கிறது. உள்நாட்டு தயாரிப்புகளுடன் ஆரம்பமாகிறது சந்திரயானின் பயணம்.

சந்திரயான் I

Chandrayaan-1

சந்திரயான் I  விண்ணில் செலுத்திய போது மாதவன் நாயர் இஸ்ரோவின் தலைவராக இருந்தார்.

அக்டோபர் 22, 2008ல் மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் ஆன விஞ்ஞானிகள் குழு மூலம் ஸ்ரீகாரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து PSLV XL மூலம் சந்திராயன் 1 விண்ணில் ஏவப்பட்ட்து.

சந்திராயன் 3 புறப்படும் தேதி மற்றும் நேரம் பற்றிய முழு விவரங்கள்..!

சந்திராயன் 1 இந்தியாவின் முதல் நிலவை நோக்கிய பயணம் ஆகும்.

22 அக்டோபர் பூமியில் இருந்து ஏவப்படட சந்திராயன் 1 நவம்பர் 8,2008 அன்று  நிலவின் வட்ட பாதையை அடைந்தது. நவம்பர் 14 2008 ல் நிலவின் தென் முனையினை சந்திராயன் 1 அடைந்தது. சந்திராயன் I ல் மொத்தம் 11 ஆய்வு கருவிகள் அனுப்பப்பட்டது. அதில் 5 கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கருவியாகும். சந்திராயன் I ல் இந்திய ஆய்வு கருவிகள் போக மீதம் இருந்த 6 கருவிகள்  NASA, ESA மற்றும் பல்கோரியவின் ஆய்வு கருவிகள் ஆகும். இஸ்ரோவின் கணிப்பின் படி சந்திராயன் I, 2 வருடங்கள் ஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால்  சந்திராயன் I தனது தகவல் பரிமாற்றத்தினை ஆகஸ்ட் 28, 2009 ல் நிறுத்தியது. சந்திராயன் I தனது 95% ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்தது.

சந்திராயன் I  ல் Lunar Orbital நிலவில் நீர் உள்ளது என்பதை கண்டுபிடித்தது.

சந்திராயன் II 

chandrayaan 2

சந்திராயன் II , ஜூலை 15 அன்று ஏவப்பட்ட இருந்த ஏவுகணை, செலுத்துவதற்கு 56 நிமிடம் முன்பாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது என்று அப்போதைய இஸ்ரோவின் தலைவர் டாக்டர்.கே. சிவன் அறிவித்தார்.

பிறகு சந்திராயன் II ஜூலை 22,2019 ஆம் ஆண்டு, ஸ்ரீகரிக்கோட்டாவில் இருந்து இஸ்ரோவின் தயாரிப்பான GSLV III ஏவுகணை மூலம் விக்ரம் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. விக்ரம் விண்கலம் orbiter, lander, Rover ஆகிய ஆய்வுக்கருவிகளை உள்ளடக்கியது. இந்த விக்ரம் விண்கலம் செப்டம்பர் 8 2019 நிலவின் தென் துருவத்தில் இறங்கும் என்று எதிர்பார்க்க பட்டது. செப்டம்பர் 7 அன்று நிலவில் தரையிறங்க தொடங்கிய விக்ரம் விண்கலம் நிலவில் இருத்து 2.1 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போது அதனின் சிக்னலை இழந்தது. சிக்னல் இழந்த நாளில் இருந்து 11 நாட்கள் விண்கலத்தின் சிக்னலை பெற முயற்சிகள் பல நாடுகளின் துணையோடு எடுக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியே தழுவியது. இரு மாதங்களுக்கு பிறகு NASA வின் விஞ்ஞாணி ரோவர் நிலவின் மேற்பரப்பில் மோதி  சேதமடைந்து இருப்பதை போட்டோக்களுடன் அறிவித்தார்.

யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்? தகுதியான குடும்பங்களை கண்டறிவது எப்படி?

ரோவேரில் ஏற்பட்ட கோளாறுக்கு லேண்டரின் ஐந்து என்ஜின்கள் அதிக உந்துதலை ஏற்படுத்தியதும், பிழைகளைக் கண்டறிவதற்கான பயன்படுத்திய மென்பொருளின் வரம்பு மற்றும் லேண்டர் தரையிறங்கும் தளம் சிறியதாக இருந்தவையே லேண்டரின் விபத்துக்கு மூன்று முக்கிய காரணங்கள் என்று இஸ்ரோ அறிவித்தது.

சந்திராயன் III 

chanthirayan 3

சந்திராயன் II ன் தோல்வியே அடுத்து ஜூலை 14 2023 மதியம் 2.35 மணிக்கு  சந்திராயன் III விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீகரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து LVM 3 விண்கலம் மூலம் செலுத்தப்பட்டது. சந்திராயனின் III குறிக்கோள் லேண்டர் மற்றும் ரோவர்களை பத்திரமாக நிலவின் தரையில் இறக்குவது என்பதே ஆகும்.  சந்திரயான் III ன் திட்ட இயக்குனர், விழுப்புரத்தை சேர்ந்த வீர முத்துவேல் செயல்படுகிறார்.

ப்ராபல்ஷான் module ஏவுகணையில் இருந்து landerரை பாதுகாப்பாக பிரித்து தரையிறக்க உள்ளது.

சந்திராயன் IIIல் உள்ள SHAPE என்ற பகுதி நிலவின் வட்ட பாதையில் இருந்து பூமியின் நிறமாலையை ஆய்வு செய்ய உள்ளது.

RAMBHA-LP நிலவில் பிளாஸ்மா அயனி மற்றும் எலக்ட்ரான்களின் அடர்த்தி மற்றும் அதன் மாற்றங்களை ஆய்வு செய்ய உள்ளது.

ChaSTE நிலவில் தெர்மா பிசிக்ஸ் சோதனையும், ILSA நிலவின் அதிர்வை அளக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சந்திராயன் II ல் லெண்டரின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறினால் விபத்துக்குள்ளானது அதனை சரி செய்யும் விதமாக பிரேக்குடன் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பு பொருத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 24 ம் நாள் சந்திராயன் III நிலவின் சுற்றுவட்ட பாதையை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24 மற்றும் 25 அன்று நிலவில் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கினால் அது இந்தியாவின் மாற்று ஒரு வெற்றி படியாகும்.

உலகின் பார்வை இப்போது இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. உள்நாட்டு தயாரிப்புகளுடன் பறந்துள்ள சந்திராயன் III வெற்றியடைந்தால் நிலவில் கால்பதித்த நான்காவது நாடாக இந்திய இருக்கும்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now