ரூபாய் நோட்டுகளில் இருக்கும் நினைவுச்சின்னம்
நம் நாட்டின் தேசிய சின்னம், தேசிய கொடி, தேசிய பறவை போன்றவை பற்றி அறிந்திருப்போம். ஆனால் நாம் தினமும் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவம் இருந்திருப்பதை அறிந்திருப்போம். ஆனால் ரூபாய் நோட்டுகளில்பின் பக்கத்தில் இருக்கும் படங்களை பார்த்திருப்பீர்கள். அது என்னவென்று அறிந்திருக்க மாட்டீர்கள். அதவாது நாட்டின் கலாசாரத்தை கொண்டாடும் வகையில் இந்திய நினைவுச்சின்னங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சிடுபட்டுள்ளது. இதை;ல் எந்தெந்த ரூபாய் நோட்டுகளில் என்னென்ன நினைவு சின்னம் உள்ளது என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
10 ரூபாய்:
10 ரூபாய் நோட்டில் கோனார்க் சூரியன் கோவில் இடம்பெற்றுள்ளது. இந்த கோவிலானது ஒடிசாவில் உள்ள கோவில்களில் முக்கிய கோவிலாக இருக்கிறது. இந்த கோவிலானது ஒரு காலத்தில் கடிகாரமாகபயன்படுத்தப்பட்டது. அதனால் இதனை 10 ரூபாய் நோட்டில் ஜனவரி 2018 இல் பழக்கத்திற்கு வந்தது.
20 ரூபாய்:
20 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் கைலாஷ் கோயில் மற்றும் எல்லோரா குகைகள் அச்சிடப்பட்டுள்ளது. இந்த சின்னமானது 2019-ல் நடைமுறைக்கு வந்தது.
புதிய 500 ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துக்கு பதில் ராமர் படமா.!
50 ரூபாய்:
50 ரூபாய் நோட்டில் ஹம்பி நினைவுச்சின்னமாக இருக்கிறது. ஹம்பிஎன்ற ஊரில் உள்ள விட்டலா கோவிலின் வளாகத்தில் பெருமைமிக்க கல் தேர் இருக்கும். இதனை தான் 50 ரூபாய் நோட்டுகளில் 2017-ம் ஆண்டு முதல் அச்சிடப்பட்டுள்ளது.
100 ரூபாய்:
ராணி கி வாவ் 100 ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ளார். இவை குஜராத்தில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தை தான் ராணி கி வாவ் கூறுவார்கள். இதனை ராணியின் படிக்கிணறு என்று அழைக்கலாம். இந்த சின்னமானது 2018-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
200 ரூபாய்:
200 ரூபாய் நோட்டில் ஸ்தூபி என்ற சின்னம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த சின்னமானது மத்திய பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற புத்த நினைவுச்சின்னங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சின்னம் உள்ள நோட் ஆனது 2017-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
500 ரூபாய்:
500 ரூபாய் நோட்டில் டெல்லியில் உள்ள செங்கோட்டை இடம் பெற்றுள்ளது. இந்த சின்னமானது 2016-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
பாடும் பறவை எதுவென்று தெரியுமா.?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |